NEW பிரபஞ்சமும் இணைகோடுகளும்!
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
நமது பிரபஞ்சத்தில் இரண்டு இணைகோடுகள்
ஒன்றையொன்று சந்திக்குமா?
பிரபஞ்சவியலில் (cosmology) இது முக்கியமான கேள்வி.
இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டுமெனில்,
நமது பிரபஞ்சத்தின் வடிவியல் அமைப்பு (geometry)
எப்படி இருக்கிறது என்று தெரிய வேண்டும்.
அதாவது நமது பிரபஞ்சம்
1) தட்டையாக இருக்கிறதா? அல்லது
2) நேர்மறை வளைவுடன் (positive curvature) இருக்கிறதா?
(Positive curvature என்றால் கால்பந்து போல் இருக்கும்)
அல்லது
3) எதிர்மறை வளைவுடன் (negative curvature) இருக்கிறதா?
(Negative curvature என்றால் குதிரைச் சேணம் போல் இருக்கும்.
குதிரைச் சேணம் என்று உணர்க; குதிரைச் சாணம் அல்ல).
இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டும். அதற்குக்
கிடைக்கிற பதிலைக் கொண்டு, இணைகோடுகள்
சந்திக்குமா சந்திக்காதா என்ற கேள்விக்குப் பதில்
சொல்லலாம்.
இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, நமது
பிரபஞ்சம் தட்டையாக இருக்கிறது.அதாவது நமது
பிரபஞ்சத்தின் வளைவு (curvature) பூஜ்யம் ஆகும்.
சரி, பிரபஞ்சம் தட்டையாக உள்ளது. ஒரு தட்டையான
பிரபஞ்சத்தில் யூக்ளிட்டின் வடிவியல் செயல்படும்.
தட்டைப் பிரபஞ்சத்தில் ஒரு முக்கோணத்தின்
கோணங்களின் கூட்டுத்தொகை 180 டிகிரியாக
இருக்கும். இங்கு பித்தகோரஸின் தேற்றம்
செய்யும்.
எனவே ஒரு தட்டைப் பிரபஞ்சத்தில் இணைகோடுகள்
ஒருபோதும் சந்திக்காது.
ஒரு கோடு x = 1 என்றும், இன்னொரு கோடு x = 2 என்றும்
இருந்தால், (1 and 2 are x coordinates), இக்கோடுகள்
ஒருபோதும் சந்திக்காது. ஏனெனில் 1 is not equal to 2.
ஆக மொத்தத்தில்,
1) நமது பிரபஞ்சம் தட்டையானது (flat).
2) இதன் வளைவு (curvature) = 0.
3) இங்கு யூக்லிட்டின் வடிவியல் வேலை செய்யும்.
(Eucledean geometry holds in our flat universe).
4) ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் கோட்பாட்டின்படியான
வெளிகால வளைவுக்கும் (spacetime curvature) நமது
பிரபஞ்சம் வடிவியல் ரீதியாக தட்டையாக இருப்பதற்கும்
(geometrically flat) எவ்வித முரண்பாடும் இல்லை.
Space time curvature holds good as well as flat universe holds good.
5) நமது பிரபஞ்சம் மட்டுமே இருக்கின்ற ஒரே ஒரு
பிரபஞ்சம் ஆகும். பன்மைப் பிரபஞ்சக் கோட்பாட்டை
(multiverse theory) இக்கட்டுரையாசிரியர் ஏற்கவில்லை.
**********************************************************
பின்குறிப்பு:
இணைக்கப்பட்ட படங்களைப் பார்க்கவும்.
*********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக