சனி, 20 ஜூலை, 2019

உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியே மிக முக்கியமான
காரணி. ஆதிமனிதன் கற்களால் ஆயுதங்கள் செய்து
விலங்குகளை வேட்டை ஆடினான். இது கற்காலம்.
பின்னர் இரும்பு கண்டுபிடிக்கப் பட்டது. இது மானுட
வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு. கற்கால மனிதன்
உலோக கால மனிதன் ஆகிவிட்டான்.

இவ்வாறு உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியும்
அதன் விளைவான உற்பத்திப் பெருக்கமும் (production)
அளவீட்டின் காரணிகள் ஆகும்.
  
பழைய கற்காலம் முதல் பின்நவீனக் காலம் வரை!
----------------------------------------------------------------------------
மானுட வரலாற்றில் நிலவுடைமைச் சமூகம் நீண்ட
காலமாக நீடித்து இருந்தது. வரலாற்றில் இக்காலம்
(அதாவது 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலம்)
மத்திய காலம் என்று அழைக்கப் படுகிறது.
பழைய கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம்
என்றெல்லாம் காலங்களைப் பகுக்கிறோம். அந்த
வரிசையில் வருவதுதான் நவீன காலம்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைத் தொடர்ந்து,
அறிவியல் வளர்ச்சி அசுர வேகத்தில் நிகழ்ந்தது.
தொழிற்புரட்சி 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
ஏற்பட்டது. தொடர்ந்து முதலாளிய சமூகம்
உருவானது. மார்க்சியத் தத்துவமும் பிறந்தது.
இந்நிகழ்வுகள் யாவும் நடைபெற்ற காலம்
நவீன காலம் என்று அழைக்கப் படுகிறது.

முதலாளிய சமூக உருவாக்கத்தைத் தொடர்ந்து
மானுடம் நவீன காலக்கட்டத்தில் நுழைந்து விட்டது.
இக்காலக் கட்டத்தின் தத்துவம் மார்க்சியம் ஆகும்.
ஆக மார்க்சியம் என்பது நவீன காலத்தின் தத்துவம்
ஆகும். எனவே மார்க்சியம் நவீனத் தத்துவம்
(modern philosophy) என்று அழைக்கப் படுகிறது.
மார்க்சியம் 19ஆம் நூற்ராண்டிலேயே தோன்றி விட்டது.
மார்க்சின் காலம் 1818-1883; எங்கல்சின் காலம் 1820-1895. 

மார்க்சியத்துக்குப் பிறகு தோன்றிய தத்துவம்
பின்நவீனத்துவம் ஆகும். இரண்டாம் உலகப்
போருக்குப் பின்னர்தான் இத்தத்துவம் திரண்ட
வடிவம் பெற்றது. மார்க்சியத்துக்குப் பின்னர்
வந்த தத்துவம் என்பதால், இது பின்நவீனத்துவம்
(post modernism) எனப்படுகிறது. இத்தத்துவம்
மார்க்சியத்தை விமர்சனம் செய்கிறது.      

வெள்ளி, 19 ஜூலை, 2019

அனுப்புநர்:
இசை
முகிலனால் பாதிக்கப்பட்ட பெண்
குளித்தலை
கரூர் மாவட்டம்.

பெறுநர்:




மதிப்புக்குரிய ஐயா, அம்மா,

மண்ணுக்கும் மக்களுக்கும் ஆதரவாகப் போராட வேண்டும் என்ற
எண்ணம் கொண்டிருந்த நான்
போராட்டக் களத்துக்கு வந்தேன். முகில சக போராளியாய்
மணல் கொள்ளை எதிர்ப்பு, காவிரியாற்றுப் பாதுகாப்பு உள்ளிட்ட
பல்வேறு களங்களில் போராடினேன். இதனால் என் மீது அரசு
தொடுத்த வழக்குகளை நீதிமன்றத்தில் இன்றும் சந்தித்துக்
கொண்டிருக்கிறேன்.

முகிலன் மீதான என் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கும்
விதத்தில் அவர் என்னை பாலியல் வன்கொடுமை
செய்தார். நான் அழுதேன்; அரற்றினேன்; தற்கொலை வரை
சென்று மீண்டேன்.

தமது குடும்ப வாழ்க்கை  கசந்து விட்டதாகவும், தமது
திருமண பந்தத்தில் இருந்து விலகி முறைப்படியான
மணவிலக்குப் பெற்று என்னைத் திருமணம் செய்து
கொள்வதாகவும் உறுதி கூறினார்: நம்பிக்கை ஊட்டினார்.

ஆனால் நாளடைவில் அவர் தமது வாக்குறுதியை
நிறைவேற்ற முன்வராமல் தட்டிக் கழிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் கடந்த 2019 பெப்ரவரி 17 அன்று குளித்தலையில்
ஒரு பேச்சுவார்த்தைக்கு என் நலனில் அக்கறை உடைய
பெரியோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு வருவதாக
உறுதி கூறி குறுஞ்செய்தி மூலம் தமது வ்ருகையையும்
உறுதி செய்த முகிலன், அக்கூட்டத்திற்கு வராமல்
முந்திய நாளே தலைமறைவாகி விட்டார்.

எனவே குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்
நான் புகார் கொடுத்தேன். தற்போது 140 நாட்கள் 
தலைமறைவுக்குப் பின் முகிலன் வெளியே வந்துள்ளார்.

என்னை ஏமாற்றி மோசடி செய்தது, பாலியல் வன்கொடுமை
செய்தது உள்ளிட்ட புகார்களில் எனக்கு நீதி கிடைக்க
நான் சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு நாளும் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
என் மீது அவதூறு பொழியப்பட்டு வருகிறது. இந்நிலையில்
பாதுகாப்பு கருதி என் அடையாளங்களை மறைத்துக் கொண்டு
வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறேன்.

செல்வாக்கு மிக்க முகிலனை எதிர்த்து, பாதிக்கப்பட்ட
நான் எனக்கான நீதி கிடைக்க தனி ஒருத்தியாக நின்று
போராடிக் கொண்டிருக்கிறேன்.முகிலன் ஒரு போராளி
என்பதால் அவரின் பாலியல் குற்றங்களைப் பொருட்படுத்தக்
கூடாது என்று முகிலனின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக்கொண்டு
பார்வையை இழக்க முடியுமா?

தமிழ்ச் சமூகத்தின் சான்றோர்களும் பெரியோர்களும்
பெண்ணுரிமைப் போராளிகளும் சமூக அரசியல்
செயல்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும்
நீதிக்காகப் போராடும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று
வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  தமிழ்ச் சமூகம் எனக்கு
ஆதரவு தரும் என்று நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
இசை
முகிலனால் பாதிக்கப்பட்ட பெண்.
இடம்: குளித்தலை நாள்: 19.07.2019.
-----------------------------------------------------------------------------------


   

புதன், 17 ஜூலை, 2019

முகிலன் விவகாரம்!
மொத்த சமூகத்துக்குமான படிப்பினை!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
முகநூல் 2004ல் தொடங்கப் பட்டது. இது அறிவியலின்
மகத்தான கண்டுபிடிப்பு! இதைக் கண்டுபிடித்தவர்கள்
மானுடப் பயன் கருதி மட்டுமே இதை உருவாக்கினர்.
காலப்போக்கில் முகநூலின் செல்வாக்கை உணர்ந்த
ஏகாதிபத்தியம், இதைத் தன் தீய நோக்கங்களுக்காக
மிகத் திறமையுடன் பயன்படுத்தி வருகிறது.

மனிதனின் இயல்பு கூட்டு வாழ்க்கை வாழ்வது.
மனிதன் ஒரு சமூக விலங்கு (man is a social animal).
முகநூலின் மூலம் மனிதனின் சமூக உளவியலை,
அதாவது சமூகமாகச் சேர்ந்து வாழ்வது என்ற
உளவியலை ஏகாதிபத்தியம் உடைத்து எறிந்து
விட்டது.

அமைப்பாகச் சேருவது என்ற மானுட உளவியலை
உடைத்தெறிந்து, தனித்தனியாக உதிரியாக
நிற்பது என்ற உளவியலுக்கு சமூகத்தைப் பழக்கி
விட்டது ஏகாதிபத்தியம். இதற்கு முகநூலை ஒரு கருவியாகப்
பயன்படுத்திக் கொண்டது. எப்படி என்று பார்ப்போம்.

முகிலன் ஒரு ஒற்றைத் தனிநபர் (single individual).
அவர் எந்தக் கட்சியையோ அமைப்பையோ சாராதவர்.
கட்சி சார்ந்து இயங்குவது அல்லது அமைப்பு சார்ந்து
இயங்குவது என்ற சிந்தனையே முகிலனிடம் அணுவளவும்
கிடையாது. அது மட்டுமல்ல, அமைப்பு சார்ந்து இயங்கவே
கூடாது என்று தெளிவுடன் இருப்பவர். அவரின் சமூகக்
கண்ணோட்டம் என்பது குட்டி முதலாளியக் கண்ணோட்டம்
ஆகும்.

முகிலன் சமூகத்தில் கணிசமான செல்வாக்கைப் பெற்று
இருக்கிறார். அவரின் செயல்பாட்டுக்குப் பொருத்தமற்ற
மிகையான செல்வாக்கு இது. இதற்கு முகநூலே காரணம்.
பாலியல் செயல்பாட்டாளரான அவர் சூழலியல்
செயல்பாட்டாளராக மகுடம் சூட்டப் படுகிறார்.

நியாயமாக கட்சிகளோ அமைப்புகளோ பெற வேண்டிய
செல்வாக்கை ஒரு ஒற்றைத் தனிநபரான முகிலன்
அபகரித்து விடுகிறார். இது எப்படி சாத்தியம் ஆகிறது?
மக்களை அமைப்புகளிலோ கட்சிகளிலோ அணிசேர
விடாமல் தடுக்கும் கருவியாக முகநூலை ஏகாதிபத்தியம்
பயன்படுத்துவதால்தான் இது சாத்தியம் ஆகிறது.

நாடு சுதந்திரம் அடையும் முன்னால் 1930, 1940களில்
சமூக உணர்வு பெற்ற ஒரு இளைஞன் காங்கிரசில்
சேர்ந்தான். 1950,1960களில் சமூக உணர்வு பெற்ற
இளைஞர்கள் பெரியார் அண்ணாவின் திராவிட
இயக்கத்திலோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சியிலோ
சேர்ந்தனர்.

1970களில் வசந்தத்தின் இடி முழக்கமாக வெடித்தெழுந்த
நக்சல்பாரி இயக்கத்தில் (மார்க்சிய லெனினிய இயக்கம்)
இளைஞர்கள் சேர்ந்தார்கள்.

முகநூலுக்கு முந்திய காலத்தில் மேற்கூறிய இளைஞர்கள்
முறையான கட்சிகளில் அமைப்புகளில் சேர்ந்தார்கள்.
இன்று நிலை என்ன? சமூக உணர்வு பெறுகிற அல்லது
பெற்று விட்டதாகக் கருதுகிற இளைஞர்கள் முகநூலில்
ஆகப் புரட்சிகரமாக ஒரு பதிவு போடுகிறார்கள்.
இப்படிப் பதிவு போடுவதையே பெரும் புரட்சிகரமாக
இவர்கள் நினைக்கிறார்கள். மார்க்சும் லெனினும் கூட
இவர்களை விடப் புரட்சிகரமாக ஒரு பதிவு போட முடியாது.

ஏதாவது ஒரு மார்க்சிய லெனினியக் கட்சியிலோ
அல்லது அக்கட்சிகளின் மக்கள் திரள் அமைப்புகளிலோ
சேர மறுக்கும் இவர்கள் முகநூலில் 24365 என்ற அளவில்
(24 hours 365 days) புரட்சி செய்கிறார்கள்.

ஆக அமைப்பாகத் திரள்வது என்கிற உயர்ந்த நோக்கத்தை
ஏகாதிபத்தியம் சிதறடித்து விடுகிறது. அரசுக்கு எதிராக
மக்கள் பெருமளவில் திரண்டு விடும் அபாயத்தை
முகநூலைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியம்
சாமர்த்தியமாகத் தடுத்து விடுகிறது.

பேராசிரியர் சாய்பாபா மெய்யான அரசு எதிர்ப்புப்
போராளி. 2014 முதல் சிறையில் இருந்து வருகிறார்.
இன்னும் சுதா பரத்வாஜ், விநாயக் சென் என்று
யாரைக் கண்டெல்லாம் இந்த அரசு அஞ்சுகிறதோ
அவர்களெல்லாம் சிறையில் உள்ளனர். முகநூலில்
உள்ள சுயஇன்பச் செயல்பாட்டாளர்கள் எவரும்
சாய்பாபா பற்றி அறிவார்களா?

கட்சி, அமைப்பு என்பதை எல்லாம் சுக்கு நூறாக
அடித்துத் துவைத்து விடுகிறது ஏகாதிபத்தியம்.
முகநூல் மூலமாக சுயஇன்பப் போராளிகளை
உருவாக்கி சமூகத்தில் நியாயமாக ஏற்பட்டு
இருக்க வேண்டிய மக்கள் கிளர்ச்சியை அடக்கி
விடுகிறது.

ஒற்றைத் தனிநபரான முகிலனும் பியூஸ் மனுசும்
எப்படி பெரும் செல்வாக்குடன் திகழ முடிகிறது?
சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

எனவே சமூக உணர்வு உடைய இளைஞர்களே,
உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
அருள்கூர்ந்து மார்க்சிய லெனினியக் கட்சிகளில்
ஏதாவது ஒன்றில் சேர்ந்து செயல்படுங்கள்.
கட்சியில் சேராவிட்டாலும் கூட, கட்சியின்
வெகுஜன அமைப்புகளில் சேர்ந்து செயல்படுங்கள்.
அல்லது ஏதாவது ஒரு கட்சியின் அனுதாபியாக
இருந்து செயல்படுங்கள். கட்சியினர் தருகிற
வேலைகளை எடுத்துக் கொண்டு செய்ய
முயலுங்கள்!

ஒற்றைத் தனிநபராக இருக்காதீர்கள். அது அரசியலற்ற
போக்கு ஆகும் (an apolitical trend). ஒற்றைத் தனிநபர்களை
நாயகர்களாக்கி அவர்களை வணங்காதீர்கள். இதுவே
முகிலன் விவகாரத்தில் இருந்து பெறும் படிப்பினை!
**********************************************************     





 


.



சமூகத்தின் பொருள் உற்பத்தியில் பங்கெடுக்காத
வர்க்கம் காரல் மார்க்சின் பார்வையில் உதிரி வர்க்கம்
(lumpen class) ஆகும்.

கே என் சிவராமன்
மருதுபாண்டியன் திருப்பூர் குணா ரகுபதி
-----------------------------------------------------------------
பூனைக்கு யார் மணி கட்டுவது?
முகிலனின் மோசடிகளை அம்பலப் படுத்தத் தயக்கம் ஏன்?
கொலை மிரட்டல்களுக்கு நடுவில் அம்பலப் படுத்தினேன்!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
பாலியல் செயல்பாட்டாளர் முகிலன் ஒரு ஒற்றைத்
தனிநபர் (single individual). அவர் எந்தக் கட்சியையோ
அமைப்பையோ சாராதவர். கட்சி சார்ந்து இயங்குவது
அல்லது அமைப்பு சார்ந்து இயங்குவது என்ற சிந்தனையே
அணுவளவும் இல்லாதவர். அது மட்டுமல்ல, அமைப்பு
சார்ந்து இயங்கவே கூடாது என்று தெளிவுடன்
இருப்பவர். அவரின் சமூகக் கண்ணோட்டம் என்பது
சுயமோக குட்டி முதலாளியக் கண்ணோட்டம் ஆகும்.

அவரின் பாலியல் பிறழ்வு நடத்தை இன்று புதிதாக
அறியப் படுவதல்ல. ஸ்டெர்லைட் எதிர்ப்பின்
காரணமாகத்தான் அவர் மீது பாலியல் புகார் கூறப்
படுகிறது என்பது கடைந்தெடுத்த பொய்.

அவர் போராட்டம் நடத்திய களங்களில் எல்லாம்
பாலியல் பிறழ்வு நடத்தையுடனே இருந்தார்.
அதன் காரணமாகவே அக்களங்களில் இருந்து
அங்கு போராடி வந்த மக்களால் விரட்டி அடிக்கப்
பட்டார். இது அவரின் கடந்த கால வரலாறு.

அவரின் தலைமறைவு என்பது முற்றிலும் நாடகம்.
பாலியல் புகாரால் எழுந்த நெருக்கடி காரணமாக
தலைமறைவு நாடகம் நடத்தினார். இந்த உண்மையை
இன்று பலரும் உணர்ந்து கொண்டனர்.

அரசையும் நீதிமன்றத்தையும் மக்களையும் அவரை
ஆதரித்த அனைவரையும் முகிலன் ஏமாற்றி விட்டார்
என்றும் அனைவரின் முகத்திலும் கரி பூசி விட்டார்
என்றும் அவரை விழுந்து விழுந்து ஆதரித்த பல
ஊடகத்தினர் எழுதத் தொடங்கி விட்டனர்.

இந்த 140 நாட்கள் எங்கிருந்தார் என்ற கேள்விக்கு
அவர் பதிலளிக்கவே இல்லை. எனினும் அதைக் கண்டு
பிடிப்பது கடினமே அல்ல. போலித் தலைமறைவுக்
காலத்தில் முகிலன் தன் குடும்பத்தாருடனும்
நண்பர்களுடனும் மொபைல் தொலைபேசி மூலம்
தொடர்பில் இருந்தார் என்பதும் இன்று அம்பலப்
பட்டு விட்டது.

நீங்கள் ஒரு பாதாள அறைக்குள் இருந்து கொண்டு
பேசினாலும், நீங்கள் எங்கிருந்து யாருடன் பேசினீர்கள்
என்பதை இன்றைய நவீன தொழில்நுட்பம் கண்டு
பிடித்து விடும். இன்றைய உலகம் ஒரு வயர்லெஸ்
உலகம். ஒரு cell phone call எந்த modemத்தில் இருந்து
emanate ஆகிறது, முதலில் எந்த டவரில் முட்டுகிறது,
அதன் destination என்ன என்பதையெல்லாம் கண்டுபிடிக்க
CBI நிபுணர்கள் தேவையில்லை.

BSNL, AIRTEL, GIO போன்ற நிறுவனங்களின் தொழில்நுட்பப்
பணியாளர்களே இதை அறிந்து விடுவார்கள்.
35 ஆண்டுகளாக தொலைத்தொடர்புத் துறையிலும்
BSNL நிறுவனத்திலும் பணியாற்றியவன் என்ற
முறையிலும் கடந்த 35 ஆண்டுகளாக தொழிற்சங்கத்தின்
முக்கிய பொறுப்புகளில் இருந்தவன் என்ற முறையிலும்
இதை என்னால் அடித்துக் கூற இயலும். நிற்க.

முகிலனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு
ஆதரவாக ஒரு குரல் கூட எழும்பவில்லை. பெண்ணியப்
போராளிகளாகத் தங்களைப் பொதுவெளியில்
அடையாளப் படுத்துபவர்கள் எவரும் முகிலனால்
பாதிக்கப்பட்ட அந்த அபலைப் பெண்ணுக்கு
ஆதரவாக ஒரு மெலிந்த குரலைக்கூட எழுப்பவில்லை.

குரல் எழுப்பிய ஒன்றிரண்டு பேரும் கூட
அவதூறுகளையும் வசைகளையும் தாங்கிக்கொண்டு
நான் மட்டுமே முகிலனின் மோசடிகளை பொதுச்
சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தேன். பூனைக்கு
மணி கட்ட யாரும் முன்வரவில்லை. துணிந்து மணி
கட்டியவன் நான். இதனால் இன்று வரை எனக்கு
வசவுகளும் கொலை மிரட்டல்களும் வந்து
கொண்டிருக்கின்றன.



    

முகிலன் பாலியல் செயல்பாட்டாளர்!
----------------------------------------------------------
1) who will bell the cat?
2) complaint to the commissioner
3) threats to life. f b people
4) slander bbby mu kalanjiyam
5) teaching physics maths stopped
unable to stand run
6) two surgeries and anjio
7) snakes comes out of its hide out
8) Poongodi her abbetment 3 yrs imprisonment
9) suppression of material acts, cheating, reach of trust, contempt
10) mukilan bail.

many hesitated who claim to champion the cause of women
putting kozhukkaattai in their mouth
these petti bourgeois elements fear

மாமன் அடிச்சானோ

AMK FUNERAL KATPADI
AMK MEETING

MALE DOMINATIOED SOCIETY NO WOMAN CAME FFORWARD TO FIGHT
     

கி வே பொன்னையன் never hekped.


செவ்வாய், 16 ஜூலை, 2019

சாவித்திரி கண்ணன் என்னும் மூத்த ஊடகவியலாளர்
தமது முகநூல் பதிவில் கூறுகிறார்:
-----------------------------------------------------------
1) முகிலனை யாரும் கடத்தவில்லை.
2) முகிலனின் மனைவியும் பொய் சொல்கிறார்.
3) இந்த 140 நாளும் எங்கிருந்தார் என்ற கேள்விக்கு
நீதிமன்றத்திடமும் பதில் சொல்லவில்லை. தமது
வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடமும் பதில்
கூறவில்லை.
4) அவருக்கு முட்டுக் கொடுப்பது தவறு.
பார்க்க: சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு dtd 14 ஜூலை 2019.