ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

Aryan Dravidian issue
----------------------------


திராவிடவாதிகளின் மிகப்பெரிய உருட்டுகளில் ஒன்று...
"ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்க்க வந்த நாடோடிகள்" என்பது தான்... ஆரிய வருகை என்பது மிகப்பெரிய பொய் என்று கூற பல காரணங்கள் உண்டு...
முதலில் இந்த கைபர் போலன் கணவாய் என்பது தற்போது பாகிஸ்தானின் வட எல்லையில் உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவை இமயமலைக்கு இடையில் உள்ளது என்றும் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தாலும்... இந்தியாவிற்குள் வர சிந்து எனும் பெரிய நதியையும் அதன் கிளை நதிகளையும் கடந்து வர வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்...
வரலாறு ரீதியாக சிந்து நதியை முதலில் கடந்து வந்ததாக சொல்லப்படுபவர் அலெக்ஸாண்டர். அதுவும் கிமு.326ல்... பெரும் படையோடு வந்த அலெக்ஸாண்டர் கைபர் கணவாய் வழியாக வந்த போதும்... அடுத்து பெருந்தடையாக இருந்தது சிந்து நதி தான்... சுழல்களை உண்டாக்கும் வேகமான நீரோட்டமுள்ள சிந்து நதியை கடப்பது... அத்தனை பெரிய படையோடு வந்த அலெக்ஸாண்டருக்கே பெரும் சவாலாகிப் போனது. படகுகளை பாகமாக பிரித்து சுமந்து வந்து... கரையில் வைத்து கட்டி... கடந்த போதும்... சுழலில் சிக்கி பலர் மடிந்து போயினர் என்கிறது வரலாறு. சிந்து நதியை கடக்க முடியாமல் தான் பாரசீகர்கள் இந்தியாவில் இருந்தவர்களை இந்துக்கள் என்று அழைக்கக் காரணமானது...
அப்படிப்பட்ட சிந்து நதியை ஆடுமாடுகளோடு நாடோடியாக திரிபவர்கள் கடந்து வந்ததாக கூறுவதே பெரிய வரலாற்றுப் பிழை...
அடுத்ததாக கிபி.1200களில் செங்கிஸ்கான் இந்தியாவிற்குள் நுழைய தயங்கி... பாரசீகத்திற்கு படையை திருப்பிப்போகக் காரணமும் சிந்துநதி தான்..
பிறகு தைமூர் கிபி.1300களில் தனது முன்னோரான செங்கிஸ்கான் போலல்லாமல் சிந்து நதியை கடந்தே தீரவேண்டும் என்று முடிவு செய்து... பல படகுகளை வரிசையாக இணைத்துக் கட்டி... தற்காலிக பாலம் கட்டி... மிகுந்த சிரமத்தோடு கடந்ததாக கூறப்படுகிறது..
பெரும் படைகளை கொண்டவர்களே கடக்கத் திணறிய ஆபத்தான ஆற்றில்... ஆரியர்கள் ஆடுமாடுகளை இறக்கி மேய்க்க வந்தார்களாம்...
அதையும் மூளையில்லாத கூட்டங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறது...
ஆரியர் வருகை என்பது திராவிட கிருத்தவ முகலாயக் கட்டுக்கதை... கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்தவர்கள் இஸ்லாமியர்களும் கிருத்தவர்களும் தான்..
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து!
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
இந்த பூமியில் உலோகங்கள் கிடைக்கின்றன.
தங்கமும் வெள்ளியும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
தங்க வேட்டை குறித்தான நிறைய ஆங்கிலப்
படங்களை நம்மில் பலரும் பார்த்திருக்கக் கூடும்.

நம் நாட்டில் தங்கம், தாமிரம், வெள்ளி, அலுமினியம்
போன்ற உலோகங்கள் பல்வேறு இடங்களில் தோண்டி
எடுக்கப் பட்டு உள்ளன. இங்கு கவனிக்க வேண்டிய
விஷயம் என்னவெனில், கிடைக்கிற எந்த உலோகமும்
தூய்மையாக அந்த உலோகமாகவே கிடைப்பதில்லை.

அலுமினியம் என்றால் அது பல்வேறு பொருட்களுடன்
கலந்து ஒரு கூட்டுப் பொருளாகக் கிடைக்கிறதே
தவிர தனித்த அலுமினியமாகக் கிடைப்பதில்லை.
இந்தக் கூட்டுப் பொருளை நாம் மூலத்தாது (ore)
என்று குறிப்பிடுகிறோம்.

அலுமினியம் எப்படி எந்த வடிவில் கிடைக்கிறது?
பாக்சைட் வடிவில் கிடைக்கிறது. இந்த பாக்சைட்
(Bauxite) என்பது அலுமினியத்தின் முக்கியமான தாது.

உலோகங்கள் ஆக்சிஜனுடன் கலந்து வேதியியல்
வினை புரிந்து ஆக்சைடு தாதுக்கள் கிடைக்கின்றன.
இரும்புத் தாதுக்களான ஹேமடைட் மேக்னடைட்
ஆகியவை ஆக்ஸைடு தாதுக்களாகும்.

கார்பனுடன் கலந்து வினைபுரிந்து கார்போனேட்
தாதுக்கள் உருவாகின்றன. சுண்ணாம்புப்
பாறைகளை நாம் பார்த்திருக்கிறோம். இவை
கால்சியம் என்னும் உலோகத்தின் தாதுவான
கால்சியம் கார்பொனேட் ஆகும்.

காரீயமும் (Lead) பாதரசமும் (Mercury) கந்தகத்துடன்
வினை புரிகின்றன. இதன் விளைவாக இவற்றின்
தாதுக்கள் கந்தகத் தாதுக்களாக உள்ளன
(sulphide ores). காரீயத்தின் தாது கலேனா (Galena PbS)
ஆகும். பாதரசத்தின் தாது சின்னபார் (Cinnabar HgS)
ஆகும்.

ஆக உலோகங்கள் FREE METAL என்ற நிலையில்
கிடைப்பதில்லை. அவை பிற பொருட்களுடன்
கலந்த கூட்டுப் பொருட்களாகவே (ores)
கிடைக்கின்றன என்ற ஒளிவீசும் உண்மையை
மனதில் இருத்த வேண்டும்.

உபி மாநிலத்தில் தங்கச் சுரங்கம் தோண்டி, தங்கம்
கலந்த பாறைகளை வெட்டி எடுத்து, அதிலிருந்து
தங்கத்தைப் பிரித்தெடுத்தால் எவ்வளவு தங்கம்
கிடைக்கும்?

ஒரு கிலோ தங்கப் பாறையில் இருந்து சுமார்
ஒரு மில்லி கிராம் முதல் 5 மில்லி கிராம் வரை
தங்கம் கிடைக்கும். அவ்வளவுதான். கவனிக்கவும்:
1 மில்லி கிராம் = 1 கிராமில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டித் தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
என்ற பழைய திரைப்படப் பாட்டு தமிழ்நாட்டில்
பிரசித்தம். மேனனும் சரோஜாதேவியும் நடித்த
காதல் காட்சியின் பாட்டு இது.

பாடலை இயற்றிய கவியரசர் கண்ணதாசன்
பூமிக்கு அடியில் தங்கம் கட்டி கட்டியாக இருப்பது
போல ஒரு கற்பனையை உருவாக்கி அதை மக்களை
நம்ப வைத்தார். கவியரசருக்கு கற்பனை செய்ய
உரிமை உண்டு. ஆனால் அறிவியல் அதை ஏற்பதில்லை.

மூலத தாதுவில் இருந்து தங்கத்தை எப்படிப்
பிரித்தெடுப்பது என்ற பாடம் பத்தாம் வகுப்பு
அறிவியல் பாட நூற்களில் இருக்கிறது. தமிழிலேயே
இது இருக்கிறது. வாசகர்கள் பத்தாம் வகுப்பு
அறிவியல் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.

இறுதியாக ஒரு கணக்கு! இது அறிவியல் கட்டுரை!
எனவே கணக்கு இல்லாமல் எப்படி?

ஒரு சுரங்கத்தில், ஒரு கிலோகிராம் தங்கத் தாதுவில்
இருந்து 3 மில்லிகிராம் அளவு தங்கம் பிரித்தெடுக்கப் பட
முடியும். அச்சுரங்கத்தில் இருந்து 3500 டன் தங்கம்
பிரித்தெடுக்கப் பட்டுள்ளது என்றால், எவ்வளவு
தங்கத்தாது இதற்குப் பயன்பட்டிருக்கும்?
(விடையை வாசகர்கள் scientific notationல் தரவும்.
******************************************************   
   
விஞ்ஞானிகள் அனைவரும் Gold என்பதை
சுருக்கமாக எழுதும்போது Au என்றே எழுதுகிறார்கள்.
அது என்ன Au? Go என்றோ Gl என்றோ எழுதுவதில்லை.
ஏன்? இடதுசாரிகளும் மார்க்சிய லெனினிஸ்டுகளும்
முற்போக்காளர்களும் இதற்கு விடையளிக்க
வேண்டும்.

நல்லாசிரியர் ஆகிட நியூட்டன் அறிவியல்
மன்றம் நெஞ்சார வாழ்த்துகிறது!


வாசகர்களுக்கு அறிவிப்பு!
-----------------------------------------
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்ட கணக்கு
உண்மையிலே மிக எளிய கணக்கு.
இந்தக் கணக்கைச் சரியாகச் செய்து விட்டால்
எந்த ஒரு சுரங்கத்தில் இருந்தும் எவ்வளவு
உலோகத்தைப் பிரித்தெடுக்கும் முடியும்
என்ற விஷயம் அத்துப்படி ஆகி விடும்.

இது என்னுடைய கற்பனையில் நான் கொடுத்த
கணக்கு அல்ல. இது real time situationல் இருந்து
எடுத்த கணக்கு. இது real time solutionஐ கோருகிறது.

முயற்சி செய்யும் அனைவரும் ஏதோ ஒரு அளவில்
கணித அறிவைப் பெறுகின்றனர்.

இங்கு கொடுக்கப்பட்ட  figures மிகப்பெரியவை ==
என்பதால், scientific notationல் மட்டுமே விடையளிக்க
இயலும்.
================================================
சரியான விடை!
----------------------
3500 டன் தங்கம் வேண்டுமென்றால்,
1,166,666,667 டன் தங்கத்தாது (ore) வேண்டும்.
அதாவது 116 கோடியே 67 லட்சம் டன் டாது வேண்டும்.

விடை பத்து ஸ்தான எண் ஆகும்.
 
சரியான விடையளித்த Leo Vel,
Vishvak Senan, Sivasankara Nainar ஆகியோருக்கு நன்றி.
விடையளிக்க அனைவருக்கும் நன்றி.
-------------------------------------------------------------- 


மலையின் சிகரத்தில் ஒரு காலும்
கடலின் ஆழத்தில் ஒரு காலுமாக
விசுவரூபம் எடுத்து நிற்கும் குவான்டம் கொள்கை!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
கடலையும் கடல் அலைகளையும் குழந்தைகள்
இளம் வயதிலேயே அறிந்து கொள்வது கட்டாயம்.
அறிய வைப்பது பெற்றோரின் கடமை!

"நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி." 
இது பாரதியின் காவிய வரி. இதில் கடல் அலைகளின்
நிறம் நீலம் என்கிறார் பாரதியார்.

நிறம் என்றால் அலைநீளம் என்றே இயற்பியல் கூறும்.
(Colour means wavelength). வெவ்வேறு நிறங்கள் என்றால்
வெவ்வேறு அலைநீளம் கொண்ட அலைகள் என்கிறது
இயற்பியல்.

ஆயின், நீல நிறத்தின் அலைநீளம் என்ன? இக்கேள்விக்கு
ஒரு பெண் தன்னுடைய ப்ரா அளவைத் துல்லியமாகக் 
கூறுவது போல இயற்பியலால் கூற இயலாது. 
420 நானோமீட்டர் முதல் 490 நானோமீட்டர் வரையிலான
அலைநீளமே நீலநிறம் என்று இயற்பியல் கூறும். இங்கு
RBG எனப்படும் மூன்று நிறங்களை (சிவப்பு, நீலம், பச்சை)
மட்டும் கருதும் நிறவெளியே (Colour space) பின்பற்றப் படுகிறது.

இக்கட்டுரையைப் படிக்கும் இயற்பியல் மற்றும் பொறியியல்
மாணவர்களே, நிறங்களின் அலைநீளங்களைக் கண்டறியும் பரிசோதனைகளை நிச்சயம் நீங்கள் செய்து
பார்த்திருப்பீர்கள். டைபிராக்சன் கிரேட்டிங் முறையிலோ
அல்லது நியூட்டனின் வளையங்கள் முறையிலோ
கண்டறிந்தீர்கள்தானே! உலகப் பிரசித்தி பெற்ற சோடியம்
விளக்கின் அலைநீளத்தைக் கண்டறிந்தீர்கள் அல்லவா?
நீங்கள் கண்டறிந்த அலைநீளம் என்ன? அதைத்
தெரிவியுங்கள். நிற்க.       

மீண்டும் அலைக்கு வருகிறபோது கண்ணதாசன் வந்து
விடுகிறார்.
"வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்"
என்ற அவரின் அந்தாதி ஓர் மாபெரும் மானுட அற்புதம்.

நீரலைகள், நினைவலைகள் என்று இரண்டு வகையான
அலைகளைக் கவிஞர் குறிப்பிடுகிறார். இதில்
நீரலைகளுக்கு மட்டுமே பௌதிக இருப்பு (physical existence)
உண்டு. எனவே இயற்பியல் நீரலைகளை ஏற்றுக் கொண்டு
நினைவலைகளைக் குப்பையில் வீசுகிறது.

நினைவலைகள் என்பதெல்லாம் metaphysical.
அவற்றின் ஆதரவாளர்களுக்கு இங்கு இடமில்லை.
அவர்கள் ஜக்கி வாசுதேவிடமோ அல்லது பாதிரியார்களிடமோ
போகலாம்.

ஒளி அலைகள் என்று கேள்விப் பட்டு இருப்போம். ஆனால்
நியூட்டன் ஒளியானது ஒரு அலை என்பதை ஏற்கவில்லை.
ஒளி என்பது துகளே என்றார் அவர். உலகப் புகழ் பெற்ற
அவரின் துகள் கொள்கை (corpuscular theory of light) 12ஆம்
வகுப்பு இயற்பியலில் பாடமாக இருக்கிறது.

கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் ( Christian Huygens 1629-1695)
என்பவர் நியூட்டன் காலத்து விஞ்ஞானி. இவர் ஒளியானது 
அலையாக இருக்கிறது என்றார். எனினும் நியூட்டனுக்கு
முரணான இவரின் கொள்கை நியூட்டனின் மறைவு வரை
மங்கியே கிடந்தது.

ஒளி அலையா அல்லது துகளா என்பதைக் கண்டறிய
ஆயிரம் பரிசோதனைகள் நடந்தன. இவற்றில்
முரண்பட்ட முடிவுகள் கிடைத்தன. சில பரிசோதனைகள்
ஒளி அலையாக இருக்கிறது என்பதற்குச் சாட்சியம்
கூறின. சில பரிசோதனைகளில் ஒளி தன்னை துகளாக
மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டது. இதனால்
அறிவியல் உலகில் ஒரு நிச்சயமற்ற நிலை நீடித்தது.

விஞ்ஞானிகள் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து, அலை,
துகள் என்று வாதிட்டார்கள். உலகமே இரண்டாகப்
பிளவு பட்டது. ஆடு மேய்க்கிறவன் முதல்
அடுப்பங்கரையில் பத்துப் பாத்திரம் தேய்க்கிறவள்
வரை அலைக்கட்சி என்றும் துகள் கட்சி என்றும்
பிரிந்து ஐரோப்பாவில் மோதிக் கொண்டார்கள்.

அலை துகள் மோதலைக் கருவாகக் கொண்டு முட்டாள்
எழுத்தாளர்கள் சிறுகதையும் நாவலுமாய் எழுதிக்
குவித்தார்கள். துகள் கட்சியைச் சேர்ந்த குப்பம்மாளை
அலைக்கட்சியைச் சேர்ந்த துலுக்காணம் காதலிப்பதும்
இக்காதலுக்கு நேரும் எதிர்ப்புகளையும் காவியமாக்கி
விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தார்கள்
எழுத்தாள மூடர்கள்.

புள்ளி போட்ட ரவிக்கைக்காரி
பொட்டுப் பொட்டு சேலைக்காரி
மாட்டுச்சாணி அள்ளும்போது
மாமன் மனசு துள்ளுதடி.
(இது துலுக்காணம்).

கடலிலே அலையடிக்க
கன்னி மனசிலும் அலையடிக்க
ஆட்டுப் புழுக்கை அள்ளையிலே
மாமன் நெனப்பு கொல்லுதையா.
(இது குப்பம்மா)  

இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில் விஞ்ஞானிகள்
தீர்ப்பு வழங்கினார்கள். அலையா துகளா என்ற
பிரச்சினைக்கு முடிவு கட்டினார்கள். நூற்றாண்டுகளாக
நீடித்த சர்ச்சைக்கு விஞ்ஞானிகள் வழங்கிய தீர்ப்பு
இதுதான்!
ஒளி துகளாகவும் இருக்கிறது; அலையாகவும் இருக்கிறது.
ஒளி-துகள் இரட்டைத் தன்மையே ஒளி பற்றிய
மெய்ம்மை (wave particle duality) ஆகும்.

பிரசித்தி பெற்ற இந்தத் தீர்ப்பின் மீதுதான் குவான்டம்
தியரி உருவாக்கப் பட்டுள்ளது. எல்லாக் கொள்கைகளும்
ஏதேனும் ஒரு ஒற்றைத் தன்மை மீது கட்டப்பட்டன
என்று கொண்டால், அதற்கு மாறாக, குவான்டம்
கொள்கையானது  இரட்டைத் தன்மை மீது கட்டப்
பட்டுள்ளது. இதனால்தான் இன்று வரை அது புரிந்து
கொள்ளக் கடினமாக உள்ளது.

ஆயின் ஒரே நேரத்தில் ஒளியானது துகளாகவும்
அலையாகவும் இருக்குமா? அப்படித் தன்னை
வெளிப்படுத்திக் கொள்ளுமா? கேள்விகள் எழுந்தன.
இதற்கு பதிலளித்தார் நியல்ஸ் போர். ஒரு நேரத்தில்
ஒரு பண்பு மட்டுமே வெளிப்படும் என்றார். அதாவது
ஒரு பரிசோதனையின்போது ஒளி தன்னை அலையாக
வெளிப்படுத்திக் கொண்டால், அதன் துகள் பண்பு
அப்பரிசோதனையில் வெளிப்படாது என்கிறார்.
இவரின் இக்கோட்பாடு "நிரப்புக் கோட்பாடு"
(Principle of complementarity) எனப்படுகிறது.
---------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
உலகத் தாய்மொழிநாளை முன்னிட்டு, எழுதப்பட்ட
கட்டுரை இது. இதை முழுமையாக வெளியிட இயலாது.
பிரசுரமாகி வந்ததும் முழுக் கட்டுரையையும் வாசகர்கள்
படிக்கலாம்.

அறிவியல் கட்டுரைகளுக்கே உண்டான rigorous standardல்
இருந்து சற்றே தளர்த்திக் கொண்டு எழுதப்பட்டு
உள்ளது இக்கட்டுரை, of course without prejudicial to the
scientific accuracy.
***************************************************   
சோவியத் ஒன்றியம்  உடைந்து சிதறி,
ரஷ்யாவாகச் சுருங்கிய பின், ரஷ்யா ஒரு
பலகட்சி ஆட்சி முறையைக் கொண்ட 
முதலாளிய ஏகாதிபத்திய நாடாகத் திகழ்ந்து
வருகிறது. அங்கு மூடப்பட்ட சர்ச்சுகள் 1991-92
காலத்திலேயே திறக்கப்பட்டு விட்டன.

எனவே அங்கு metaphysics ஒரு படிப்பு என்பதில்
என்ன வியப்பு உள்ளது? அமெரிக்காவில் metaphysics
ஒரு படிப்பாக இல்லையா? இந்தியாவில்
ஆதிசங்கரரின் அத்வைதம் ஒரு metaphysics தத்துவமாக
இருக்கிறதே!

metaphysics என்பது கருத்துமுதல்வாதம்.
அது காலங்காலமாக இருந்து வரும் ஒன்று.
  
காலங்காலமாக இருந்து வருவதாலேயே
metaphysics சரியென்று பொருள்படாது.


ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு யிர்க்கு
என்ற குறளை நடிகர் கமலுக்குச் சமர்ப்பிக்கிறேன்.      

அணுகுண்டு உடனடியாகத் தேவைப்பட்டது.
அதில் ஸ்டாலின் உறுதியுடன் நின்றார். எனவே
நினைத்ததை விட அதி விரைவில் அணுகுண்டு
தயாரிக்கப் பட்டு விட்டது. இங்கு தேவையா
தேவையில்லையா என்றெல்லாம் விவாதமே எழவில்லை.

பின்னாளில், இயங்கியல் பொருள்முதல்வாதத்துடன்
குவான்டம் தியரியம் ரிலேட்டிவிட்டி தியரியும்
முரண்படுவதாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி
கருதியபோது, குவாண்டம் தியரி இல்லாமல்
ரிலேட்டிவிட்டி தியரி இல்லாமல் அணுகுண்டு
தயாரிக்க இயலாது என்று விஞ்ஞானிகள்
எடுத்துக் காட்டினார். இதன் விளைவாக
இவ்விரு கொள்கைகளும் தப்பித்தன.






சனி, 22 பிப்ரவரி, 2020

அன்று ஆ ராசாவை மிரட்டிய சுனில் மிட்டல்
இன்று ரவிசங்கர் பிரசாத்தின் காலில் விழுந்தது ஏன்?
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
என்னுடைய பூட்ஸ் காலின் கீழ் உன்னை ஒரு மூட்டைப்
பூச்சியைப் போல் நசுக்கி விடுவேன் என்று சுட்டு
விரல் நீட்டி ஆ ராசாவை எச்சரித்தார் சுனில் மிட்டல்!
இடம்: சஞ்சார் பவன்; ஆண்டு 2010.

இதே மிட்டல், நேற்று தொலைத்தொடர்புத் துறை
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைச் சந்திக்கச்
சென்றபோது, அவரின் காலில் விழுந்து வணங்கினார்.
(இடம்: சஞ்சார் பவன், ஆண்டு 2020)

காலில் விழுந்து வணங்கிய சுனில் மிட்டலை
இளக்காரமாகப் பார்த்த ரவிசங்கர் பிரசாத்திடம்
"ரூ 35,586 கோடி ரூபாய் கடனில் (AGR dues) ரூ 10,000 கோடி
செலுத்தி விட்டதாகவும் மீதியை மார்ச் 17க்குள்
(கெடு தேதி) செலுத்தி விடுவதாகவும் சத்தியம்
செய்தார் சுனில் மிட்டல்.

பத்தே ஆண்டுக்குள் தலைகீழ் மாற்றம்!
எப்படி இது நிகழ்ந்தது? பதில் சொல்ல வேண்டும்!
குறிப்பாக, தமிழகத்தின் போலி இடதுசாரிகள்
போலி மார்க்சிஸ்டுகள் பதில் சொல்ல வேண்டும்.
*************************************************** 
ஒரு குமாஸ்தா லெவல் ஆங்கில அறிவும்
வளமான ஆங்கிலப் புலமையும்!
கிராம்ஸியவாதிகளின் குஷ்டரோகம்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அண்மையில்
வெளிவந்த ஒரு கட்டுரை இது!

"All or nothing? It's Hobson's choice for Anil Ambani's lenders."

இதன் அர்த்தம் என்ன?
All or nothing = எல்லாமும் அல்லது ஒன்றும் இல்லை.
It is Hobsons's choice = அது ஒரு ஹாப்சன்ஸ் சாய்ஸ் ஆகும்.
for Anil Ambani's lenders = அணில் அம்பானியின் லெண்டர்களுக்கு 
லெண்டர் = கடன் கொடுத்தவன்.

இப்போது பதவுரை எழுதி விட்டேன். எனினும் கட்டுரையின் 
தலைப்புப் புரியவில்லை. அது புரிய வேண்டுமெனில் 
ஒரு குமாஸ்தாவின் லெவல் ஆங்கிலம் பயன்படாது.
அதற்கு வளமான ஆங்கிலப் புலமை வேண்டும்.

இங்கு ஹாப்சன்ஸ் சாய்ஸ் என்றால் என்ன என்று
புரிய வேண்டும். அதற்கு ஒரு சிறிய இரண்டு வரிக்
கதை உண்டு. அதை நீங்களே முயன்று தெரிந்து
கொள்ளுங்கள்.

இப்போது ஹாப்சன்ஸ் சாய்ஸ் என்றால் நோ சாய்ஸ்
என்று பொருள் என்பதை மட்டும் தெரிந்து
கொள்ளுங்கள்.அனில் அம்பானிக்குக் கடன்
கொடுத்தவன் பாடு திண்டாட்டம் என்பதுதான்
கட்டுரையின் தலைப்பு.

ஆங்கிலம் எக்கேடாவது கெடட்டும். இதுதான்
கட்டுரையின் தலைப்புக்கு அர்த்தம் என்று
உங்களால் உய்த்து உணர முடியுமானால்
நல்லது.

அன்பார்ந்த வாசகர்களே,
மார்க்சியம் என்றால் பொருள் உற்பத்தியை
முதன்மையாகப் பார்க்கும் தத்துவம். பண்பாட்டை
மார்க்சியம் முதன்மையானதாகப் பார்ப்பதில்லை.

சமகால சமூகத்தின் பொருள் உற்பத்தி பற்றிய
எந்த அறிவும் இல்லாத மூடன் மார்க்சியவாதியே அல்ல.
பொருள் உற்பத்தி பற்றிய அனைத்து
அறிவும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. ஏனெனில்
இந்திய சமூகத்தின் பொருள் உற்பத்தி மொழியாக
ஆங்கிலம் மட்டுமே உள்ளது.

எனவே ஆங்கிலம் தெரியாமல், ஆங்கிலத்தில்
வளமான புலமை இல்லாமல் இந்திய சமூகத்தின்
பொருள் உற்பத்தி பற்றி எவர் ஒருவரும் அறிந்து
கொள்ள முடியாது. ஆங்கிலத்தில் எழுதப்படும்
அனைத்து விஷயங்களையும் தமிழில் மொழி
பெயர்ப்பது ஒருநாளும் சாத்தியமில்லை.
இது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை.

இதை எடுத்துச் சொல்வதால் என் மீது ஒவ்வொரு
கிராம்ஸியவாதியும் கோபப் படுவான். அப்படிக்
கோபப் படுவதன் மூலம் அவன் ஒரு சிந்தனைக்
குஷ்டரோகியாய் மாறுவான்.   
************************************************






வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

கிரந்தம் குறித்த முற்றிலும் தெளிந்த நிலைபாடு!
----------------------------------------------------------------------------
1) கிரந்த எழுத்துக்கள் தமிழில் சில நூற்றாண்டுகளுக்கு
முன்பே கொண்டு வரப்பட்டு விட்டன. அவை தமிழ்
எழுத்துக்களாகவே கோடிக்கணக்கான தமிழர்களால்
ஏற்கப்பட்டு விட்டன.

2) எனவே இன்று திடீரென்று சிலர் கிரந்தம் வேண்டாம்
என்று கூறுவது தமிழைச் சீர்குலைக்கவே. கிரந்தம்
வேண்டாம் என்று கூறும் உரிமை யாருக்கும் இல்லை.

3) நம்மைச் சுற்றிலும் பேசப்படும் மொழிகளான
மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி,
வங்கம், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய அனைத்து
மொழிகளிலும் கிரந்த எழுத்துக்களும் உச்சரிப்பும் உண்டு.
ஆனால் தமிழில் மட்டும் அது கூடாது என்பது
தமிழை காலாவதியாகிப்போன மொழியாக ஆக்க
வேண்டும் என்னும் தீய நோக்கமே.

4) மொழி என்பதன் தலைமைப் பண்பு என்னவெனில்,
மக்கள் அனைவரையும் ஒருவருக்கொருவர்
தொடர்புறுத்துவதே, கிரந்தத்தை மறுத்தால்
தமிழானது தொடர்புறுத்தல் என்னும் மொழியின்
உயிரையே இழந்து விடும்.

5) மொழி குறித்த குட்டி முதலாளியக் கருத்துக்கள்
ஏற்கத் தக்கன அல்ல. மொழி குறித்த மார்க்சியக்
கருத்து மட்டுமே அறுதியானதும் அனைவரையும்
கட்டுப் படுத்தக் கூடியதும் ஆகும். ஏனெனில்
குட்டி முதலாளியக் கருத்துக்கள் தந்தக் கோபுரச்
சிந்தனைகளின் விளைவு! ஆனால் மார்க்சியக்
கருத்துக்கள் நீருக்குள் மீனாய் மக்களோடு இருந்து,
மக்களோடு வாழ்ந்து, மக்களிடம் இருந்து பெற்றவை.
----------------------------------------------------------------------------
     
             

உலகத் தாயமொழி நாள்!
என்ன செய்தால் தமிழ் மேம்படும்? உயரும்?
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
1950 முதலே  மின்சாரத்தால் இயங்கும் வீட்டுப்
பயன்பாட்டுக்குக்கான பொருட்கள் மக்களிடம்
அறிமுகமாகி விட்டன; காலப்போக்கில் வெகுவாகப்
புழக்கத்துக்கு வந்து விட்டன.

மிக்சி, கிரைண்டர், பிரஷர் குக்கர், வாஷிங் மெஷின்,
பிரிட்ஜ் போன்ற பொருட்கள் இல்லாமல் தமிழ்க் குடிகளின்
அன்றாட வாழ்வு இல்லை. தெர்மாஸ்  ஃபிளாஸ்க், கேஸ் ஸ்டவ்
போன்ற பொருட்களும் இன்று இன்றியமையாதவை
ஆகி விட்டன.

ஆனால் தமிழர்களிடம்  மேற்கூறிய பொருட்கள்
எவற்றுக்குமான தமிழ்ப்பெயர்கள் இல்லை. ஐம்பது
ஆண்டாகியும், மிக்சி கிரைண்டர் என்றே தமிழ்த்
தாய்மார்கள் உச்சரிக்கிறார்கள். அந்த ஆங்கிலப்
பெயர்கள் நிலைபேறு உடையன ஆகி விட்டன.

தமிழ்ப்பற்று இல்லாத காரணத்தால்தான் தமிழ்த்
தாய்மார்கள் மிக்சி கிரைண்டர் என்று ஆங்கிலப்
பெயர்களை ஏற்றுக் கொண்டார்கள் என்று யாராவது
சொன்னால் அதில் அணுவளவும் உண்மையில்லை
என்று நாம் அறிவோம். ஆங்கிலமே தெரியாத தமிழ்ப்
பெண்களும் மிக்சி கிரைண்டர் என்று பேசக் காரணம்
என்ன?

மிக்சி கிரைண்டர் போன்றவை உற்பத்தியாளர்கள்
சூட்டிய பெயர்கள். உற்பத்தி மொழியாக ஆங்கிலமே
இருப்பதால், அவற்றுக்கு ஆங்கிலப் பெயர்கள் சூட்டப்
படுகின்றன. இது இயல்பானது. உற்பத்தி எந்த மொழியில்
இருக்கிறதோ, அந்த மொழியில்தான் உற்பத்திப்
பொருட்கள் இருக்கும்.

ஆலையில் உற்பத்தியாகி, முதல் மிக்சி சந்தைக்கு
வந்த உடனேயே, அந்தக் காலத்தில் உள்ள தமிழறிஞர்கள்
மிக்சி என்பதற்குரிய பொருத்தமான தமிழ்ப் பெயரைக்
கண்டறிந்து சூட்டி இருக்க வேண்டும். அக்காலத்தில்
மிகவும் சிறந்த தமிழறிஞர்கள் தமிழ்நாட்டில்
செல்வாக்குடனும் வசதியுடனும் வாழ்ந்து வந்தார்கள்.

யாரும் சக்திமுற்றப் புலவர் போல,
"கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளன்" போல வறுமையின் உச்சத்தில்
வாடவில்லை. செல்வந்தர்களாகவே வாழ்ந்தார்கள். எனினும்
அவர்கள் தமிழுக்கு வறுமையைக் கொடுத்து விட்டுச்
சென்றார்கள்.

இந்தியாவும் சரி, தமிழகமும் சரி, நிலவுடைமைச்
சமூக அமைப்பில் இருந்து வெகுவாக மாறி, முதலாளிய
உற்பத்தி முறைக்கு மாறி வந்த காலம் நாம் கருத்தில்
கொள்ள வேண்டிய முற்காலம். முதலாளிய உற்பத்தி
முறை என்பதில் உற்பத்தி மொழியாக ஆங்கிலமே
இருந்தது; இன்றும் இருக்கிறது.

எனவே உற்பத்தியாகும் பொருட்கள் ஆங்கிலப்
பெயர்களையே கொண்டிருக்கின்றன. இப்பொருட்கள்
சந்தைக்கு வந்தவுடன் இவற்றுக்கு தமிழ்ப் பெயர்கள்
வைக்கலாம்தான். யார் வைப்பது? தமிழறிஞர்களால்
வைக்க இயலாது. அவர்கள் தமிழ் தவிர வேறு எதையும்
கல்லாதவர்கள்.

எனவே தமிழின் மீது சுமத்தப் பட்டிருக்கும்
அடிமைத்தனமும் இழிவும் எப்போது நீங்கும்?
தமிழ் உற்பத்தி மொழியாக ஆகும்போது மட்டுமே நீங்கும்.

2000, 3000 ஆண்டுக்கு முந்திய தமிழ் இலக்கணம்
இன்று பொருந்தாது. எனவே புதிய உற்பத்தி முறைக்கு
ஏற்றவாறு தமிழுக்குப் புதிய இலக்கணம் சமைக்க
வேண்டும்.

பண்டிதத் தமிழ், பாமரத் தமிழ், தீண்டாமைத் தமிழ்
என்றெல்லாம் தமிழைக் கருவறுக்கும் முயற்சிகள்
முறியடிக்கப் பட வேண்டும். மார்க்சிய இலக்கணப்படி,
ஒரு மொழியானது தொடர்புறுத்த வல்லதாக communicable)
இருக்க வேண்டும். மக்களால் தீண்டத் தகாத மொழியாக
தமிழை ஆக்க முயலும் செயல்கள் தடுக்கப்படவும்
ஒடுக்கப் படவும் வேண்டும்.

கிரந்த எழுத்துக்கள் தேவையான அளவு எடுத்துக்
கொள்ளப்பட வேண்டும். நடைமுறையில் இருக்கிற
கிரந்த எழுத்துக்களைப் புறக்கணிப்பது தமிழை
அழிக்கும் செயலாகும்.

கிரந்தம் பற்றி ஆளாளுக்கு ஒரு கருத்து என்று சொல்லிக்
கொண்டு இருக்கக் கூடாது. தமிழக அரசு கிரந்தத்தை
ஏற்று ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

குட்டி முதலாளிய மொழிக்கொள்கை ஒருபோதும்
ஏற்கப் பட மாட்டாது. மார்க்சிய மொழிக்கொள்கைப்
படியே தமிழ் சார்ந்த அனைத்து மொழிக்கொள்கைகளும்
முடிவெடுக்கப் பட வேண்டும்.


எல்லாவற்றுக்கும் மேலாக, மொழி என்பது
தொடர்புறுத்த வல்லதாக இருக்க வேண்டும்.
இதுவே மொழி பற்றிய கொளகைகள் அனைத்திலும்
தலையாய கொள்கை ஆகும்.


மருதுபாண்டியன்


********************************************** 
The Workmen compensation Act 1923
-----------------------------------------
This is an Act that provides for the payment of compensation for injury by accident by certain classes of employers to their workmen. The objective of the Workmen’s Compensation Act is to make provision for the payment of compensation to a workman only, i.e., to the concerned employee himself in case of his surviving the injury in question and to his dependants in the case of his death (Government of India, 1923).