ஞாயிறு, 4 அக்டோபர், 2015

முகநூலில் வீடியோக்கள் தானாகவே இயங்குவதை
உடனடியாக நிறுத்துங்கள்! இல்லையேல் பணம் விரயமாகும்!
STOP the AUTO PLAY of video posts in Facebook, if you want!
-------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------------
"சார், ஏர்டெல் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் பிளானில் இருக்கிறேன்,
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் data பயன்படுத்தி விட்டதாகவும்
இனிமேலான பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்"
என்றும் ஏர்டெல்லில் இருந்து sms வந்திருப்பதாக சற்றுமுன் 
ஒரு நண்பர் தொலைபேசியில் முறையிட்டார். 

முகநூலில், வீடியோ பதிவுகள் தாமாகவே இயங்கும் விதத்தில் Facebook நிறுவனம் அண்மையில் வடிவமைத்து இருக்கிறது. இது வரவேற்கத்
தக்கது. ஆனால், இந்தியாவில், 750 அல்லது 800 ரூபாய் பட்ஜெட்டுக்குள்  பிராட்பேண்ட்  பயன்படுத்தும் அன்பர்களுக்கு இந்த auto play
கட்டுப்படி ஆகாது.  நம்மிடம் முறையிட்ட நண்பர் auto playஐ 
அனுமதித்து உள்ளார். அதனால்தான் இப்படி data காலி ஆகிறது
என்று அறிந்து கொண்டோம். உடனடியாக அவரை  வீடியோக்களின்
auto playஐ நிறுத்தச் சொன்னோம். எப்படி நிறுத்துவது என்று கேட்டார்.
அதற்கான விடைதான் இது.

இது கணினி, லேப்டாப்பில் video auto playஐ நிறுத்தும் முறை:
--------------------------------------------------------------------------------------------
1) உங்கள் முகநூல் கணக்கில் நுழையுங்கள் (log in and enter into
your Facebook account)
2) settingsக்குச் செல்லுங்கள். எப்படிச் செல்வது? தலைப்பில் உள்ள
 navy blue வண்ண barஇல், உங்களின் வலப்புறமாக, கடைசியில் ஒரு முக்கோண வடிவில் இருப்பது. அந்த முக்கோணத்தின் மீது கிளிக் செய்யுங்கள்.

3)ஒரு மெனு விரியும். அந்த மெனுவில் settings மீது கிளிக்
செய்யுங்கள்.
4) இப்போது உங்கள் பார்வைக்கு  ஒரு page கிடைக்கும். அதில்,
உங்களின் இடப்புறமாக உள்ள, General என்ற தலைப்பிலான
விவரங்களில், கடைசியாக இருக்கும்  Videosஐ கிளிக் செய்யுங்கள்.

5) இப்போது Video settings வரும். அதில் Auto play videos என்பதைப்
பாருங்கள். அதில் off என்று வைக்க வேண்டும். எப்படி வைப்பது?
Auto play videos என்பதன் வலப்புறம் உள்ள முக்கோணத்தை
கிளிக் செய்து, off என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்.
(இதை save செய்ய வேண்டியதில்லை). தற்போது உங்களின்
video auto play நிறுத்தப் பட்டுவிட்டது.
(கொடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கவும்)
---------------------------------------------------------------------------------------------------------
android mobile பயன்படுத்துவோர் அதற்கேற்ற விதத்தில்
video auto playஐ நிறுத்திக் கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------------------------------                 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக