புதன், 26 டிசம்பர், 2018

புலித்தலையை நாய் மோந்து பார்ப்பதா?
கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்புக்கு
திராவிடத் தயிர் சாதங்கள் உரிமை கோருவதா?
வெண்மணிப் போராட்டத்தின் ஒளிவீசும் உண்மைகள்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
1950, 1960களில் தஞ்சையில் பண்ணையார்கள்
விவசாயக் கூலிகளை அடிமைக ளாக நடத்தினர்.
விவசாயக்  கூலிகளான பெண்களை வாடி போடி
என்றுதான் பண்ணையார்கள்  அழைப்பது வழக்கம்.

60 வயதான தலித் பெண்ணை பண்ணையாரின்
20 வயது மகன் வாடி போடி என்று அழைப்பது
இயல்பாக இருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சி இந்த விவசாயக் கூலிகளின்
நடுவில் வேலை செய்தது. சீனிவாசராவ் என்னும்
கம்யூனிஸ்ட் தலைவர் தலித்துகளிடம் உறைந்து
கிடந்த பண்ணையடிமைச் சிந்தனையை அகற்றி
சுயமரியாதை உணர்வை ஊட்டினார்.

தலித் பெண்களை  அமைப்பாக்கி, அவர்களிடம்
சீனிவாசராவ் கூறினார்: இனி பண்ணையார் உங்களை
வாடி போடி என்று கூப்பிட்டால், நீங்களும்
பதிலுக்கு பண்ணையாரை வாடா போடா என்று
என்று கூப்பிடுங்கள் என்றார். பண்ணையாரை
வாடா போடா என்று கூப்பிடும் மனநிலைக்கு
அப்பெண்களைத் தயார் படுத்தினார்.

ஒவ்வொரு பெண்ணும் தன்னை பண்ணையார் வாடி
என்று கூப்பிடும் தருணத்திற்காகக் காத்திருந்தனர்.
பண்ணையார் வாடி என்று கூப்பிட்டதும், என்னடா
சொல்லுடா என்றனர்/ திகைத்துப்போன பண்ணைகள்
வாடி போடி என்று அழைப்பதைக் கைவிட்டனர்.

இதற்குப் பெயர்தான் சுயமரியாதை.  தமிழ்நாட்டில்
மக்களுக்குச் சுயமரியாதை உணர்வை ஊட்டியவர்
சீனிவாசராவ் என்ற கம்யூனிஸ்ட் தலைவர்தானே
தவிர வேறு எவரும் இல்லை.

கீழ வெண்மணிப் போராட்டம் முற்றிலும்
கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குச் சொந்தமானது.
சீனிவாசராவ் மணலூர் மணியம்மாள் ஆகிய
கம்யூனிஸ்டுகளின்  தன்னலமற்ற தியாகமே
தஞ்சை விவசாயக் கூலிகளை போராளிகளாக
மாற்றியது.

வெண்மணியில் கூலி உயர்வுப் போராட்டத்தை,
 சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தை வர்க்கப்
போராட்டத்தை நடத்தியது மார்க்சிஸ்ட் கட்சி.

வெண்மணியில் ராமையா என்பவரின் குடிசையில்
ஒளிந்திருந்த 44 பேரைத் தீயிட்டுக் கொளுத்தினான்
பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடு. உயர்நீதி
மன்றம் நாயுடுவை விடுதலை செய்தது.

ஆனால் நக்சல்பாரி இயக்கமோ நாயுடுவைக்
கொன்று பழி தீர்த்தது. வர்க்க எதிரிகளை
அழித்தொழிப்பது என்ற நிலையை நக்சல்பாரி
இயக்கம் எடுத்திருந்தது.எனவே அந்த அடிப்படையில்
கொடிய பண்ணையாரான கோபாலகிருஷ்ண
நாயுடுவை நக்சல்பாரிக் கட்சியான லிபரேஷன்
கட்சி அழித்தொழித்தது.

நெல்மணி கூடுதல் கேட்டதற்கு
வெண்மணித் தீயில் வெந்தோரே
உங்கள் நாமம் ஜிந்தாபாத்!

உங்களுக் கெங்கள் வீர வணக்கம்
வீர வணக்கம் வீர வணக்கம்

நீங்கள் சிந்திய ரத்தத்துக்கு
ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும்
ரத்தச் செங்கொடி பழிவாங்கும்!
பழி வாங்கும்! பழி வாங்கும்!
ரத்தச் செங்கொடி பழி வாங்கும்!

என்று இன்றும் கம்யூனிஸ்டுகளும் கம்யூனிஸ்ட்
தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்களும்
கோஷமிட்டு வெண்மணித் தியாகிகளை
நினைவு கூர்கின்றனர்.


திராவிடத் தயிர்சாதங்களின் இழிதகைமை!
----------------------------------------------------------------------------
இவ்வாறு மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டும்
(CPI, CPM, CPI ML) உரிமையுள்ள வெண்மணி நிகழ்வுக்கு,
வர்க்கச் சுரண்டலையும் சாதிய ஆதிக்கத்தையும்
ஒருசேர எதிர்த்து முறியடித்த மகத்தான
பாட்டாளி வர்க்கப் போராட்டத்திற்கு சில
திராவிடத் தயிர்சாதங்கள் உரிமை கோரும்
சிறுபிள்ளைத்தனம் அண்மையில் தலை
தூக்கியுள்ளது.

திராவிட இயல்மற்றும் பெரியாரியல் சித்தாந்தம்
வெறும் அடையாள அரசியல் சித்தாந்தம் ஆகும்.
வர்க்கச் சிந்தனை என்பதே திராவிட இயலிலும்
பெரியாரியலிலும் அறவே கிடையாது. குட்டி
முதலாளித்துவச்  சித்தாந்தங்கள் அவை.

காந்தியின் அஹிம்சையை காந்தியை விடத்
தீவிரமாகக் கடைப்பிடித்தவர் பெரியார். வெறும்
பிரச்சாரத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட
பெரியாரியத்தில் வன்முறைக்கு அணுவளவும்
இடம் .கிடையாது. வன்முறையை அறவே
வெறுத்தவர் பெரியார். மறந்தும் கூட அவர்
வன்முறையைப் போதித்ததே கிடையாது.
பெரியாரியத்தின் அரசியல் வழி என்பது
முற்றிலும் தயிர்சாதக் கண்ணோட்டமே!

நிலைமை இவ்வாறு இருக்க, கொளத்தூர் மணி
போன்ற சில திராவிடத் தயிர்சாதத் தலைவர்கள்
கோபாலகிருஷ்ண நாயுடுவைப் படுகொலை
செய்தது தங்கள் திராவிடர் கழக ஆசாமிகள்
என்று கூறி வருவது மனிதகுல வரலாறு கண்டும்
கேட்டும் இராத அருவருப்பைத் தருகிறது.

நக்சல்பாரி இயக்கம் என்பது இரும்பு அடிக்கும்
இடம். அங்கு திராவிடத் தயிர்சாதங்களுக்கு
என்ன வேலை?

வர்க்க எதிரிகளை அழித்தொழித்தல் என்பதை
உச்ச கட்ட வர்க்கப் போராட்டமாக நக்சல்பாரி
இயக்கம் கருதியது. அழித்தொழிப்பு என்பது
மகத்தான நக்சல்பாரி இயக்கத்தின் தந்தையான
சாரு மஜூம்தார் முன் வைத்து  நடைமுறைப் படுத்திய
வழியாகும். இதற்கு திராவிடப் பிழைப்புவாத
தயிர்சாதங்கள் உரிமை கோருவது ஈனத்தனம் ஆகும்.
அழித்தொழிப்பு என்பது .மெதுவடை அல்ல.

இனிமேலும் இத்தகைய இழிசெயலில் திராவிடத்
தயிர்சாதங்கள் இறங்கினால், அவர்களுக்கு
வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடம்
கற்பிக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்.
புலித்தலையை நாய் மோத்தல் இல்.
*******************************************************   
      
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக