சனி, 16 மார்ச், 2019

வேண்டும் வேண்டும்!
விபச்சார விடுதி வேண்டும்!
-------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
1) பசி தாகம் தூக்கம் காமம் ஆகியவை உயிரியல்
செயல்பாடுகள். அதாவது இவை பெரிதும் உடல் சார்ந்தவை;
மனம் சார்ந்தவை அல்ல. இவற்றின் மனச் சார்பு மிகவும்
மெல்லியது.

2) No philosopher can tolerate tooth ache என்று ஓர் ஆங்கிலப்
பழமொழி உண்டு. இதன் பொருள் என்ன? பல்வலி என்பது
உயிரியல் செயல்பாடு. அதை மனப்பக்குவத்தால்
சகித்துக் கொள்ள இயலாது.

3) பசி தாகம் உள்ள ஒருவர் அதைத் தணிக்கும் உணவையும்
நீரையும் பிறரிடம் இருந்து பெறலாம்; அதாவது இரந்து
பெறலாம். தூங்குவதற்கான இடத்தையும் பிறரிடம் இருந்து
பெறலாம். கிடைக்கவில்லை என்றால் பிளாட்பாரத்தில்
படுத்தும் தூங்கலாம்.

4) ஆனால் காமம் அப்படியல்ல. காமம் மிகுந்த ஒரு இளைஞன்
தன்னுடைய காமத் தேவையை நிறைவு செய்யும்படி
எவரிடமும் போய்க் கேட்டு விட முடியாது. கேட்டால் அடி
உதை விழும். இச்சூழலில் காமத்தை நிறைவேற்றிக்
கொள்ளும் பொருட்டு கிரிமினல் குற்றச்செயலில்
ஈடுபடுகிறான்.

5) காமத்தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை
சட்டபூர்வமாக இச்சமூகம் வழங்குகிறது. அதுதான் திருமணம்.
அது நிரந்தரமானது; நல்லது.

6) ஆனால் திருமணத்துக்கு மனம் பக்குவப் படுவதற்கு
25 வயதேனும் ஆகி விடுகிறது. அதற்கு முன்பே
18 வயதிலேயே உடல் பக்குவம் அடைந்து விடுகிறது.

7) உடல் பக்குவம் அடைந்து விடும் 18 வயதுக்கும்
மனம் தாமதாகப் பக்குவம் அடையும் 25 வயதுக்கும்
இடையிலான 7 ஆண்டுகளை எப்படிக் கடப்பது?

8) புலனடக்கம்  பற்றி நமது நீதிநூல்கள் பேசுகின்றன.
அவை இன்று எடுபடுவதில்லை. காரணம் இன்றைய
யுகம் பின்நவீனத்துவ யுகம். பின்நவீனத்துவம் கழிபெருங்
காமத்தை ஏற்கிறது; ஆதரிக்கிறது. தங்குதடையற்ற
பாலுறவுக்காக அது நிற்கிறது.

9) பாலுறவில் எத்தகைய தடைகளும் (bars) இருக்கக்
கூடாது என்கிறது பின்நவீனத்துவம். அண்ணனும்
தங்கையும் உடலுறவு கொள்ளக் கூடாது என்பது
உலகெங்கும் நிலவும் ஒரு தடை (bar). இந்தத் தடை
தகர்க்கப்பட்ட வேண்டும் என்று வாதிடுகிறது
பின்நவீனத்துவம்.

10) நிலவுடைமைச் சமூகம் இளவயதுத் திருமணங்கள்
மூலம்  பாலியல் சிக்கல்களைச் சமாளித்தது.
மிகவும் முன்னேறிய உற்பத்திக் கருவிகளைக் கொண்ட
இன்றைய முதலாளிய ஏகாதிபத்திய தமிழ்ச் சமூகம்
பாலியல் சிக்கல்களைச் சமாளிக்க இயலாமல்
தடுமாறுகிறது.  
    
11) எனவே பாலியல் குற்றங்கள் பெருகுகின்றன.
குற்ற மனம் உடையவர்கள் மட்டுமே குற்றவாளிகளாக
ஆவது எந்தவொரு சமூகத்திலும் இயல்பு. ஆனால்
பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான
வழிவகையை ஏற்படுத்தித் தராத ஒரு சமூகத்தில்,
மொத்தச் சமூகமுமே குற்றவாளிகளாக மாறிவிடும்
அவலம் உள்ளது. அதுதான் இன்றைய தமிழகத்தில்
நடந்து கொண்டிருக்கிறது.

12) இந்தச் சூழ்நிலைகளில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு
மாவட்டத் தலைநகர்களிலும் விபச்சார விடுதிகளை
தமிழக அரசு திறக்க வேண்டும் என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

13) பாலியல் குற்றங்களைப் பெருமளவு அல்ல ஓரளவு
இந்த ஏற்பாடு தடுக்கும் என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் கூறுகிறது. இதை நிரூபித்துக் காட்டவும்
தயாராக உள்ளது.

14) தமிழகத்தின் இன்றைய பாலியல் சிக்கல்களுக்கு
விபச்சார விடுதிகள் மூலம் தீர்வு காண்பது ஒரு
சரியான தொடக்கம். அவ்வளவே. இதுவே முழுமையான
தீர்வு அல்ல. Well begun is half done என்ற அடிப்படையில்
இத்தீர்வை ஏற்று, முழுமையான தீர்வை நோக்கி
முன்னேறுவோம்.                

15) நியூட்டன் அறிவியல் மன்றம் வழங்கும் இத்தீர்வு மட்டுமே
சரியான அறிவியல் பார்வை என்று நியூட்டன் அறிவியல்
அடித்துக் கூறுகிறது. சொல்வது அனைத்தையும்
 with authority and aplomb நியூட்டன் அறிவியல் மன்றம் கூறுகிறது. 
**************************************************************
பின்குறிப்பு: இக்கட்டுரை கூறும் விபச்சார விடுதிகள்
ஆண்களின் தேவையை நிறைவு செய்யும் விடுதிகள்
மட்டுமே. எனவே எமது கோரிக்கை ஒரு இயற்கையானதும்
அடையக் கூடியதுமான ஒரு கோரிக்கை ஆகும். Yes, ours is
a realistic demand.
***********************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக