புதன், 29 மே, 2019

விடையும் விளக்கமும் 
==========================
சரியான விடை= 3333.33 மீட்டர்.

திரு வேல்முருகன் சுப்பிரமணியன், திரு ஜான் ரூபர்ட் 
ஆகிய இருவரும் சரியான விளக்கம் அளித்துள்ளனர்.
இயற்பியல் கணக்குகளில் units மிகவும் முக்கியம்.
kmph இலுள்ள வேகத்தை கணக்கின் தேவைக்கு ஏற்ப 
meter per second என மாற்ற வேண்டிய தேவை வரும்.
**
இங்கு இந்த இடத்தில்,
தொலைவு = வேகம் * காலம்
= 600 *1000/3600 * 20
= 120000/36 = 3333.3 மீட்டர்
1000/3600 என்று unit conversion செய்யாமல் இக்கணக்கைச் 
சரியாகச் செய்ய முடியாது. வழக்கமாக இந்த இடத்தில் 
1000/3600க்குப் பதிலாக, நாம் 5/18ஐப் போடுவோம்.
இந்த இடத்தில் கவனம் தேவை.
5/18 என்ற conversion factorஐ இயல்பாகப் பயன்படுத்தும் 
கலை கைவர வேண்டும். மற்றப்படி, இந்தக் கணக்கில் 
மூளைக்கு வேலை எல்லாம் எதுவும் இல்லை.


விடையும் விளக்கமும் 
------------------------------------------
சரியான விடை: கயிறு அறுந்து விடும்.

விளக்கம்:
------------------
குரங்கின் மீது இரண்டு விசைகள் செயல்படுகின்றன.
குரங்கின் எடை மற்றும் கயிற்றின் விறைப்பு.
எனவே, T-Mg = Ma
which implies, T = Mg+Ma
= (40x 9.8)+ (40X6)
= 632 N
But the rope can withstand only 550 N. So the rope will break.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக