ஞாயிறு, 28 ஜூலை, 2019

மருதுபாண்டியன்

பொருள் உற்பத்தியின் மொழியாக
தமிழ் ஆகுமா? 

இயலவில்லை என்பதைக் காண்கிறோம்.

ஆங்கிலம் பொருள் உற்பத்தியின் மொழியாக இருக்கிறது.


தமிழ் உற்பத்தி மொழியாக இல்லை என்பதன்
பொருள் என்ன?
------------------------------------------------------------------
தமிழ் உற்பத்தியில் இருந்த மொழிதான்!
இனக்குழுச் சமூக காலத்தில், பற்றாக்குறை உற்பத்தி
நிலவிய காலத்திலும், நிலவுடைமைச் சமூக
காலத்தில் உபரி உற்பத்தி இருந்த காலத்திலும்
தமிழ் பொருள் உற்பத்தியின் மொழியாக இருந்தது.

முதலாளிய, ஏகாதிபத்திய, பின் ஏகாதிபத்திய
காலத்தில் பண்ட  உற்பத்தியில் தமிழ் இல்லை.
ஆங்கிலம்தான் உள்ளது. வேளாண்மை உற்பத்தியில்
இருந்தும் கடைசியாக தமிழ் விரட்டி அடிக்கப்
பட்டு விட்டது. இதுதான் சமகாலத் தமிழின் நிலை.

இதை நான் ஒருவன் மட்டுமே எடுத்துச் சொல்லி
வருகிறேன்.

நோயுற்றதும் மருத்துவரிடம் செல்கிறோம்.
மருந்துச்சீட்டு எழுதித் தருகிறார் மருத்துவர்.
அது தமிழில் இருக்கிறதா? இல்லை. ஆங்கிலத்தில்
மட்டுமே இருக்கிறது. ஏன்? மருந்து உற்பத்தி
தமிழில் இல்லை. அது ஆங்கிலத்தில் மட்டுமே
உள்ளது. மருந்து உற்பத்திக்கான படிப்பு
B Pharm படிப்பு. இது ஆங்கிலத்தில் மட்டுமே
உள்ளது. மருத்துவப் படிப்பும் ஆங்கிலத்தில்
மட்டுமே உள்ளது.

உற்பத்தில் இடம் பெறாத எந்த மொழியும் ஆட்சி
மொழியாக இருக்க முடியாது. அப்படியானால்
தமிழை உற்பத்தி மொழியாக ஆக்குவது எப்படி?
அடுத்துக் காணலாம்.


1) நியூட்டனின் இயற்பியல் 2) ஐன்ஸ்டினின் சார்பியல்
(Relativity theory) 3) மாக்ஸ் பிளாங்கின் குவான்டம்
இயற்பியல் (quantum physics) ஆகியவற்றைத் தாண்டி
இன்று ஸ்டிரிங் தியரியில் வந்து நிற்கிறது நவீன
அறிவியல்.

ஸ்டிரிங் தியரி (string theory) குறித்து தமிழில் எத்தனை
கட்டுரைகள் உள்ளன? ஒரே ஒரு கட்டுரை மட்டுமே
உள்ளது. அது நியூட்டன் அறிவியல் மன்றம் எழுதியது.
இப்படி இருக்கும்போது தமிழில் அறிவியல் கல்வி
எப்படிச் சாத்தியம் ஆகும்?
    




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக