வெள்ளி, 17 ஜனவரி, 2020

தமிழின் தீராப்பகையாகத் தன்னை வெளிப்படுத்திக்
கொள்ளும் பெண் மருத்துவர் ஷாலினியை
தமிழர்கள் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
தமிழ் மீதும் தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் மீதும்
தீராத கசப்புணர்வும் வெறுப்பும் கொண்டவர் மருத்துவர்
ஷாலினி. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்
தமிழ்ப் பண்பாட்டின் மீது கல்லெறிபவர் ஷாலினி.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் பொங்கல்
மீது தமது தீராக் காழ்ப்பை சில வரிகளில் வெளிப்படுத்தி
உள்ளார் ஷாலினி.

குட்டி முதலாளித்துவ கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவருக்கு
அவர் அளித்த ஒரு முகநூல் செய்தியில்

" அதை (பொங்கலை) தமிழர் அடையாளம் என்று
ஆக்கிரமிப்பதை நாம் நிறுத்த வேண்டும். தமிழருக்கு
என்று எந்த பிரத்தியேக அடையாளமும் இல்லை.
தமிழருக்கு மட்டுமல்ல, எவருக்குமே. All humans same same."
என்று நஞ்சைக் கக்கி உள்ளார்.

இந்த நிமிடத்தில் உலகின் மக்கள்தொகை 7.7 பில்லியன்,
அதாவது 770 கோடி ஆகும்.இந்த 770 கோடி மாந்தர்க்கும்
பொதுத்தன்மை என்னவெனில் நாம் அனைவருமே இந்த
பூமியில் வாழ்கிறோம் என்பதும் நாம் அனைவருமே
ஹோமோ சேப்பியன் என்னும் மானுட இனத்தைச்
சேர்ந்தவர்கள் என்பதுமே. இவ்விரு பொதுத்தன்மைகள்
தவிர்த்த மீதி அனைத்துமே மானிடர்களிடம்
வேறுபடுவனதான்.

ஆக மனிதர்கள் இனம் சார்ந்து, நிலம் சார்ந்து,
தட்ப வெப்பம் சார்ந்து,உண்ணும் உணவு சார்ந்து,
பேசும் மொழி சார்ந்து, பின்பற்றும் பண்பாடு சார்ந்து,
ஆயிரம் அடையாளங்களை உடையவர்கள்.

மருத்துவர் ஷாலினி பித்துக்குளித் தனமாக மானுடத்துக்கு
அடையாளங்களே இல்லை என்று பேசி வருகிறார்.
மானுட வாழ்க்கையில் அடையாளங்கள் தேவைப்
படுகின்றன. அண்ணா சாலையில் நெரிசல் நேரத்தில்
டிராபிக் கான்ஸ்டபிள் ஒருவர் லுங்கியைக் கட்டிக்
கொண்டு நின்று போக்குவரத்து ஒழுங்கு படுத்த
இயலுமா? அதற்கான அடையாளங்களான சீருடை
தொப்பி ஆகியவை இல்லாமல் அவரால் பணிசெய்ய
இயலாது.

மருத்துவர் ஏன் வெள்ளுடை அணிகிறார்? வழக்குரைஞர்
ஏன் கறுப்பு உடை அணிகிறார்? அரசுப் பணியாளர்கள்,
தனியார் நிறுவன ஊழியர்கள் ஏன் சீருடை அணிகின்றனர்.
பள்ளிக் குழந்தைகள் ஏன் தங்கள் பள்ளிக்கென்று
உள்ள அடையாளமான குறிப்பிட வண்ண, டிசைன்
சீருடைகளை அணிகின்றனர்?

கிறித்துவப் பாதிரியார்களுக்கு மேலங்கி அடையாளம்
வேண்டாம் என்று இவரால் அங்கு போய்ச் சொல்ல முடியுமா?
இஸ்லாமிய அன்பர்கள் தங்களின் அடையாளமாக
தாடி வளர்த்துக் கொண்டு திரியக் கூடாது என்று
இவரால் சொல்ல முடியுமா?

இஸ்லாமியப் பெண்களுக்கு பர்தா என்னும் கருப்பு
முகமூடி அடையாளம் வேண்டாம் என்று ஷாலினியால்
சொல்ல முடியுமா?

முதலாளிய சமூகத்தில் மொழி மாபெரும் அடையாளம்
அல்லவா? மொழி அடிப்படையில்தானே தேசிய
இனங்கள் உருப்பெற்றன.

ஆக அடையாளங்களுக்கு நடுவில்தான் மானுடம்
வாழ்கிறது. மானுடத்துக்கு அடையாளம் இல்லை
என்று ஷாலினி கூறுவது அவரின் பெருத்த
அறியாமையைக் காட்டுகிறது. பின்நவீனத்துவ
மலத்தை அண்மைக்காலமாக உண்டு வரும் ஷாலினி
இப்படிப் பேசுவது அவரின் சொந்தக் கருத்து அல்ல.
பின்நவீனத்துவ மலமே ஆகும்.

அடுத்து திராவிடக் குடிகள் பிற இடங்களில்
பொங்கலைக் கொண்டாடுவதால், பொங்கலைத்
தமிழர் அடையாளம் என்று ஆக்கிரமிக்கக் கூடாதாம்.
என்ன திராவிடக் குடிகள்? அவர்கள் பேசும் மொழி
என்ன? திராவிடம் என்று ஒரு மொழி எக்காலத்திலும்
இருந்ததே கிடையாதே! புழுவினும் இழிந்த கால்டுவெல்
பாதிரியார், இந்தியர்களைப் பிரித்தாளும் நோக்கத்துடன்
திராவிடம் என்ற கற்பிதத்தைக் கட்டமைத்தான்.
கால்டுவெல்லின் திராவிட மலத்தை நம் வாயில்
திணிக்கப் பார்க்கிறார் இழிந்த ஷாலினி!

பொங்கல் பண்டிகை தமிழர்களுக்குச் சொந்தம்.
அதே நேரத்தில் பொங்கல் பண்டிகையின் பின்னால்
ஓர் அறிவியல் உண்டு. சூரியன் தனுஷ் ராசியில் இருந்து
மகர ராசிக்குச் செல்லும் வானியல் நிகழ்வே அது.

பொங்கல் தமிழனுக்குச் சொந்தமானது. அதன் பின்னுள்ள
அறிவியல் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது.
தமிழன் கண்டறிந்த அறிவியலை ஏற்றுக் கொண்ட
பிற பகுதி மக்கள் நமது பொங்கலை மகர சங்கராந்தி
என்று கொண்டாடி வருகின்றனர். ஏனெனில் வானமும்
பூமியும் சூரிய சந்திரரும் மானுடர் அனைவர்க்கும்
பொதுவானவை.

இந்த அறிவியல் உண்மையை எடுத்துக் கொண்டு,
அதைத் திரித்து தனது தீய நோக்கத்திற்காகப்
பயன்படுத்தி தமிழை, தமிழர்களை, தமிழ்ப் பண்பாட்டை
இழிவு படுத்தி உள்ளார் ஷாலினி.

இது கண்டிக்கப்பட வேண்டிய நடத்தை மட்டுமல்ல;
தண்டிக்கப்பட வேண்டிய குற்றமும் ஆகும்.
***********************************************
மருதுபாண்டியன்   பா ஏகலைவன்

மொழி அடிப்படை தேசியம் என்பது
முதலாளித்துவத்தின் கொடை. உலகம் முழுவதும்
மொழி அடைப்படை தேசிய இனங்கள் உருவானதை,
அவற்றுக்கான அரசுகள் உருவானதை முதலாளித்துவத்தின்
வரலாறு எடுத்துக் காட்டும். நான் இங்கு எனது கருத்து
என்று எதையும் எழுதவில்லை. நான் எழுதி
இருப்பதெல்லாம் நிரூபிக்கப்பட்ட தேற்றங்களையே.


நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
பதிவுகளைப் படிப்பதால் மட்டுமே
ஒருவர் அறிவாளியாக முடியும். ஆனால்
அதைப் படிப்பதற்கும் அறிவு வேண்டும்.


குமுதம் குங்குமம் கல்கி விகடனுக்கு
துக்ளக் பெட்டர். ஆனால் அதில் என்றுமே
அறிவியல் கிடையாது. அறிவியலைப்
படிக்காமல் எவர் ஒருவரும் அறிவாளியாக
முடியாது.

இன்று ஒரு லாஜிக் கேட் பற்றி நகைச்சுவைப்
பதிவு ஒன்று போட்டுள்ளேன். அதைப் படித்துப்
புரிந்து கொள்ள குறைந்தபட்சமாக 12ஆம் வகுப்பு
எலக்ட்ரானிக்ஸ் தெரிய வேண்டும்.

Centre of mass, bary center பற்றிய கட்டுரை
எழுதி உள்ளேன். அதில் எவரும் செய்து
பார்க்கக் கூடிய இரண்டு எளிய பரிசோதனைகளைச்
செய்து காட்டி உள்ளேன். இதெல்லாம்
படித்தால் அறிவு வளரும். ஆனால் இதையெல்லாம்
படித்துப் புரிந்து கொள்ளவே கொஞ்சம்
அறிவு தேவைப் படுகிறது. எமது பதிவுகளைப்
படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமெனில்,
9th, 10th, 11th, 12th வகுப்புகளின் கணிதம் மற்றும்
அறிவியல், இயற்பியல் புத்தகங்களைத் தொடர்ந்து
படிக்க வேண்டும்.    

துக்ளக்கில் இதெல்லாம் கிடையாது.

துக்ளக்கில் அறிவியல் செய்திகள் மருந்துக்கும்
கிடையாது.

 

பாலா என்பவர் குட்டி முதலாளித்துவ அற்பப்புழு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக