சனி, 21 மார்ச், 2020

IPTVக்கு கொள்ளி வைத்தது யார்?
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
அனலாக் தொழில்நுட்பத்துடன் கூடிய கேபிள் டிவி
கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறையத் தொடங்கியது.

2005-2015 காலக்கட்டத்தில் பல்வேறு தனியார்
தொலைதொடர்பு நிறுவனங்கள் DTH சேவையை
வழங்கத் தொடங்கி இருந்தன. இது செயற்கைக்கோள்
மூலம் டிவி ஒளிபரப்பு மேற்கொள்ளும் சேவை ஆகும்.

Reliance BIG TV, Airtel digital TV, Sun Direct DTH என்று பல
நிறுவனங்கள் DTHல் சக்கைப்போடு போட்டன.

தொலைக்காட்சி சேவை வழங்குதல் BSNLன் வேலை அல்ல.
எனினும் பிராட்பேண்ட் மூலம் டிவி சேவை வழங்க
இயலும். இது IPTV எனப்படும்.
IPTV = Internet Protocol Tele Vision.

BSNL Corporate officeல் இருந்து, IPTV சேவை வழங்க
உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதெல்லாம் 2011-2012
காலக்கட்டம் ஆகும்.

சென்னையில் ஒன்றிரண்டு BSNL வாடிக்கையாளர் சேவை
மையங்களில் IPTVயானது பொதுமக்களுக்கு
public display மூலம் காட்டப்பட்டது.

எனினும் IPTV போதிய வரவேற்பைப் பெறவில்லை.
IPTV பற்றியே மக்களுக்குச் சொல்லப்படவில்லை.

ஆண்டு 2012. அப்போது நான் பணியில் இருந்தேன்.
என்னுடைய அலுவலகத்தில் IPTVஐ நிறுவி
அதை பொதுமக்களின் பார்வைக்கு வைத்தேன்.
IPTV குறித்து தினமும் மக்களுக்கு விளக்கிக்
கூறினேன்; விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்தேன்.

இதனால் கவரப்பட்ட IPTVயின் ஏரியா விநியோகஸ்தர்
முகமது மீரான் என்பவர் என்னுடைய அலுவலகத்தில்
(அனுமதி பெற்று) தங்கியிருந்து IPTVயை promote
பண்ணும் பணியில் ஈடுபட்டார்.

கணிசமான பேர் பிராட்பேண்ட் கனக்சன் பெறறார்கள்.
அவர்களில் சிலர் IPTV போட்டுக் கொண்டார்கள்.
ஆரம்பத்தில் ராஜ் டிவி உரிய கட்டணம் செலுத்தி
IPTVக்குள் தன்னை இணைத்துக் கொண்டது.

எல்லோருடைய எதிர்பார்ப்பும் சன் டிவி மீது இருந்தது.
சன் டிவியானது உரிய கட்டணத்தைச் செலுத்தி,
IPTVக்குள் இடம் பெறும் என்ற நம்பிக்கை கொஞ்சம்
கொஞ்சமாகப் பொய்த்துக் கொண்டே வந்தது.
சன் டிவியானது IPTV க்கு எதிராக இருந்தது இப்போதும்
இருக்கிறது.

கடைசியில் போதிய ஆதரவு இல்லாததால், BSNL தலைமை
அலுவலகம் IPTV சேவையை மூடுவதாக உத்தரவிட்டது.
2013ல் மூடப்பட்டதாக எனக்கு ஞாபகம்.    

IPTVயில் சன் டிவி இணைய வேண்டும் என்று எந்தக்
கட்டாயமும் இல்லை. ஆனால் தயாநிதி மாறன்
இந்தத் துறைக்கு அமைச்சராக வந்ததில் எவ்வித
தார்மீக நியாயமும் இல்லை.

இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில், IPTVக்கு
கலாநிதி மாறன் கொள்ளி வைத்து விட்டார்
என்ற உண்மை மட்டுமே எஞ்சி நிற்கிறது.
****************************************************           
பி.கு: அப்போது நடைபெற்ற FIFA World cup 2012
போட்டியை IPTVயில் தினசரி எனது அலுவலகத்தில்
பொதுமக்கள் கண்டு களித்தனர்.
       



      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக