ஞாயிறு, 26 ஜூலை, 2020

மறுப்பு!
------------
1) சுஜாதா ஒரு தீவிர வைஷ்ணவர்.
இது மறுக்க முடியாத  உண்மை. 
எனவே வைஷ்ணவரான சுஜாதா ஸ்ரீரங்கம்
ரங்கநாதரை வணங்கினார். இதுவும் உண்மை.

2) சுஜாதா ஒரு தீவிர அறிவியல் பரப்புநர்.
இதுவும் மறுக்க முடியாத உண்மை.
அறிவியலை அறிந்த சுஜாதாவால், கடவுள் இருக்கிறார்
என்று உறுதிபடக் கூற முடியவில்லை.

3) இங்கு மிகுந்த நுட்பத்தோடு ஒருவர் புரிந்து கொள்ள
வேண்டியது என்னவெனில், அறிவியலின் மீதும் அது
வலியுறுத்தும் நிரூபணவாதத்தின் மீதும் அசைக்க
முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் சுஜாதாவால்
கடவுள் இருக்கிறார் என்று உறுதியுடன் கூறவோ
கூறியதை நிரூபிக்கவோ முடியவில்லை.
  
4) இதைத்தான் நியூட்டன் அறிவியல் மன்றம் கூறியுள்ளது.
இதன் பொருள் சுஜாதா நாத்திகர் என்பதல்ல. சுஜாதா
ஒருபோதும் நாத்திகராக இருந்ததே இல்லை. அவர்
agnostic கூட அல்ல. நாத்திகர் அல்லாத சுஜாதாவுக்கு
நாத்திக அந்தஸ்தை வழங்க இயலாது.

5) அறிவியல் பூர்வமாக கடவுள் இருக்கிறார் என்பதற்கான
வலுவான தர்க்கமோ அல்லது நிரூபணமோ சுஜாதாவால்
முன்வைக்கப் படவில்லை என்ற உண்மையை மட்டுமே
நியூட்டன் அறிவியல் மன்றம் வலியுறுத்துகிறது.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
நிறுவனர், தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்.
********************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக