வெள்ளி, 3 ஜூலை, 2020

kondu ennum urupu

 கொண்டு என்பது உருபு ஆகும்!
------------------------------------------------


தமிழை ஒழிப்போம்!
---------------------------------
ஒவ்வொருவரும் தாங்கள்தான் அதிகாரம் படைத்தவர்
என்று கருதிக்கொண்டு, தாங்கள் கூறிய சொல்லேயே
பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரம் செய்யப்
புகுந்தால் விரைவில் தமிழை அழித்து விடலாம்.

எலக்ட்ரான் என்பதற்கு மின்மம் என்ற சொல்
தமிழ்நாட்டில் பெரு வழக்காக வந்து விட்டது.
இனி பாடப்புத்தகங்களிலும் வந்துவிடும் என்ற
நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. ஸ்டீபன் ஹாக்கிங்கின்
A brief history of time நூலைத் தமிழில் மொழிபெயர்த்த போது
(பதிப்பாசிரியர்: தியாகு) பல ஆண்டுகளுக்கு முன்பே
அதில் எலக்ட்ரான் என்பதற்கு மின்மம் என்ற சொல்
ஆளப்பட்டு இருந்தது. 

எனவே காலத்துக்கு ஒவ்வாத பழைய சொற்களை
போதிய ஆய்வின்றி முன்பு எப்போதோ உருவாக்கப் பட்ட
சொற்களை இன்று கைவிடுவதே சாலச் சிறந்தது.

சில சிறந்த கலைச்சொற்களை உருவாக்கி உள்ளோம்.
அவற்றைப் பயன்படுத்தியும் வருகிறோம். இவற்றுக்கு
எதிர்ப்பு வரும் என்று தெரியும் குட்டி முதலாளித்துவம்
புதிய முயற்சிகளை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்க்கும்;
மேலும் தனதல்லாத எந்த ஒன்றையும் குட்டி முதலாளித்துவம்
எதிர்க்கும். இது அனைவரும் அறிந்ததே.

எனவேதான் எலக்ட்ரான் என்ற ஆங்கிலச் சொல்லையே
பயன்படுத்தி இந்தக் கணக்கு எழுதப் பட்டுள்ளது.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல
ஒவ்வொருவரும் தாம் உருவாக்கிய கலைச்சொல்லே
தலைசிறந்தது என்று உரிமை கோரலாம். இந்தச்
சூழலில் யாருடனும் குழாயடிச் சண்டையிட்டுக்
கொண்டிருக்க முடியாது. எனவே ஒரு கலைச் சொல்லுக்கு
ஆட்சேபம் வந்தால், அந்த ஆட்சேபம் பொருளற்றது
என்ற போதிலும்  அந்தக் கலைச் சொல்லைக் கைவிட்டு
ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழில் எழுதிப்
பயன்படுத்துவது என்ற நிலையை எடுத்துள்ளோம்.

கலைச்சொற்களுக்கும் புதிய கலைச்சொல்
உருவாக்கத்துக்கும் எவர் ஒருவரும் அத்தாரிட்டி இல்லை.
மார்க்சிய மொழிக்கொள்கை மட்டுமே வழிகாட்டும்
ஒளிவிளக்கு.


proton = முதன்மம்
neutron = நடுமம்
electron = மின்மம்
positron = நேர்மம்
hadron = கடுமம்
nucleon = அகமம்
lepton = மென்மம்
என்பன போன்ற சொற்களை உருவாக்கிப்
பயன்படுத்தி வருகிறேன். இச்சொற்களை
வேரறுக்க காழ்ப்புணர்வால் எதிர்ப்பதால்
என்ன பயன் விளையும்?

தமிழ்ச் சமூகம் இவற்றைப் புறக்கணித்தால்
என்ன ஆகும்? அது தமிழுக்கே இழப்பாக ஆகும்.
ஆங்கிலச் சொற்களே மீண்டும் பயன்பாட்டில் இருக்கும்.

ஒருவரின் கலைச்சொற்களை வேறு ஒருவர்
எதிர்ப்பதானால் என்ன நிகழும்? எவர் ஒருவரின்
சொற்களையும் எவர் ஒருவரும் ஏற்காத நிலை உருவாகும்.



என் கடன் தமிழை ஒழிப்பதே!   சூழ
---------------------------------------------


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக