வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஆளும் வர்க்கத்தின்  ஆயுதங்கள் UAPA, NIA!  

தமிழ்நாட்டில் NIAவின் கிளை தொடக்கம்!

கியூ பிராஞ்சு ஆள்காட்டிகளுக்குக் கொண்டாட்டம்!

-----------------------------------------------------------------------------

1) தமிழ் ஏடுகளில் NIA என்னும் தேசியப் புலனாய்வு நிறுவனம் 

பற்றியெல்லாம் ஒரு பயலும் செய்தி போட மாட்டான்.

 

2) எவனாவது கூத்தாடிப் பயல் போதையில் ஏதாவது 

உளறினால், அந்தப் புழுத்த ஈனனைப் புரட்சியாளன் 

என்று எழுதுவான் காசுக்குத்  தன்னை விற்று விட்ட 

தமிழ் ஊடகக் கபோதி.


3) அல்லது எவளாவது கூத்தாடிச்சிக்கு  மாத விடாய் 

தாமதமானால், அதற்கான காரணத்தைப் புலனாய்வு 

செய்து எழுதுவான் மானங்கெட்ட தமிழ் ஊடகத் தற்குறி.


4) புழுவினும் இழிந்த தமிழ் ஊடகத் தற்குறிகளில் 

பலருக்கு NIA என்றால் என்ன என்றே தெரியாது.


5) இன்று தமிழ்நாட்டில் NIAவின் கிளை வந்து 

விட்டது. சென்னையில் புரசைவாக்கத்தில் 

அதன் அலுவலகம் உள்ளது. இது இந்திய ஆளும் 

வர்க்கத்தின் 2021ஆம் ஆண்டிற்கான மேதினப் பரிசாகும்.


6) இந்தியாவில் NIA என்று பிறந்தது? NIAவின் தந்தை யார்? 

போலி இடதுசாரி, போலி நக்சல்பாரிக் கயவர்கள் 

எவனுக்காவது இதற்குப் பதில் தெரியுமா?  போலி நக்சல்பாரி 

மகஇக கோஷ்டியினருக்கு  பதில் தெரியுமா? சவுண்டி 

மருதையன் கும்பலுக்கு பதில் தெரியுமா?


7) NIAவின் தந்தை ப சிதம்பரம். அவரே தாயுமானவர். 

2009 ஜனவரி முதல் தேதியன்று (01.01.2009) NIA பிறந்தது. 

முன்னதாக 2008 டிசம்பர் 30ல் அன்றைய ஜனாதிபதி 

பிரதிபா பட்டீல் இச்சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.


8) NIA உண்மையில் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று. 

இதோடு ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைதான் UAPA 

சட்டம். இரண்டு சட்டங்களையும் உருவாக்கி, ஜனாதிபதி 

பிரதிபா பட்டீலின் ஒப்புதலைப் பெற்று, செயல்பாட்டுக்கு 

கொண்டு வந்தவர் ப சிதம்பரம். இந்திய அரசியல்வாதிகளில் 

அதிகபட்ச IQவுடன் (120) திகழ்பவர் ப சிதம்பரம். இவரின் IQ

மக்களை ஒடுக்கப் பயன்படுகிறது. 


9) இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் NIA 

இயங்க வேண்டும் என்பது ப சிதம்பரத்தின் கனவு 2009ல் 

அவர் கண்ட கனவை 2021ல் மோடி அரசு நனவாக்கி உள்ளது.


10) சிதம்பரம் அமைச்சராக இருந்து NIA  சட்டத்தைக் கொண்டு 

வந்த அந்த 2009ல், தென் மாநிலங்களுக்கான NIA 

ஹைதராபாத்தில் மட்டுமே இருந்தது. பின்னர் கேரளத்தில் 

கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் இல்லாமல் போனது 

சிதம்பரத்துக்கு வருத்தமாக இருந்தது. தற்போது 

தமிழ்நாட்டிலும் NIA தொடங்கப்பட்டது  சிதம்பரத்தில் 

காதில் தேனைப் பாய்ச்சுகிறது.


11) தமிழ்நாட்டிலும் NIA செயல்படத் தொடங்கி இருப்பது வேறு 

யாரையும் விட, முகநூலில் உள்ள கியூ பிராஞ்சு 

ஆள்காட்டிகளுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது. 

இதற்கு முன்பு போராளிகளைக் காட்டிக் கொடுக்க 

வேண்டுமெனில் டெல்லிக்கு எழுத வேண்டும். 

டெல்லிக்கு எழுதுவது என்றால், ஆங்கிலம் தெரிந்திருக்க 

வேண்டும். இந்த ஆள்காட்டிகளில் பலருக்கு 

ஆங்கிலம் தெரியாது. எனவே ஆங்கிலம் தெரிந்த 

பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் ஆட்களிடம் சென்று

ஆங்கிலத்தில் ரிப்போர்ட்டை எழுதி வாங்கி அதை 

டெல்லிக்கு அனுப்பி வைப்பார்கள் இந்தத் தற்குறி 

ஆள்காட்டிகள்.


12) முகநூலில் மார்க்சியம் லெனினியம் பேசுவோரில்

கணிசமானோர் கியூ பிராஞ்சு ஆள்காட்டிகளே.

மாவோயிஸ்டுகளைக் காட்டிக் கொடுப்பதையே 

குலத்தொழிலாக வைத்திருக்கும் ஒரு ஆள்காட்டிப் 

பயலைப் பற்றி முன்னரே கூறி உள்ளேன்.

பாஸ்கர் விஸ்வநாதன் முத்து என்னும் கியூ பிராஞ்சு

ஆள்காட்டியே அவன். முகநூலில் மாவோயிஸப் 

புரட்சியை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருப்பவன் 

இந்த பாஸ்கர் விஸ்வநாதன் முத்து. 


13) நான் சொல்வது சரியா தவறா என்று வாசகர்கள் 

ஐயம் கொண்டால், அருள்கூர்ந்து மாவோயிஸ்ட் 

தோழர்களிடம் பாஸ்கர் விசுவநாதன் முத்து என்னும் 

கியூ பிராஞ்சு ஆள்காட்டி பற்றி விசாரித்துப் பாருங்கள்.


14) தமிழ்நாட்டிலேயே NIA வந்து விட்டதால் 

முகநூலில் உள்ள, மார்க்சிய லெனினிய மற்றும் 

நக்சல்பாரிப் போர்வையில் இருக்கும் கியூ பிராஞ்சு 

ஆள்காட்டிப் பயல்களுக்கு இனி திமிர் அதிகமாகி 

விடும். அவர்களின் வேலை சுலபமாகி விடும்.


15) மேதினம் 2021ல் கியூ பிராஞ்சு ஆள்காட்டிப் 

பயல்களை முறியடிக்க வேண்டிய கடமையும் 

சேர்ந்து கொள்கிறது.முன்னேறுவோம்!

-------------------------------------------------------------------------     


     

பின்குறிப்பு:

தமிழ் தேசிய போராளிகள், தமிழ் தேசிய 

ஆதரவாளர்கள், மெய்யான மாவோயிஸ்டுகள்,

மெய்யான மார்க்சிய லெனினிஸ்டுகள் ஆகியோர் 

மேற்கூறிய கியூ பிராஞ்சு ஆள்காட்டிகளிடம்

எச்சரிக்கையாக இருக்கவும். காட்டிக் கொடுக்கும் 

ஒவ்வொரு ஆளுக்கும் கணக்குப் பார்த்து இந்த

யூதாஸ்கள் கியூ பிரஞ்சு அதிகாரிகளிடம் 

இருந்து காசு பேரருட் கொள்வார்கள். சவுண்டி 

மRUதையனின் ஆதரவாளர்களில் பலரும் 

தற்போது கியூ பிராஞ்சு ஆள்காட்டிகள்!

*********************************************************    

  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக