கேம் தியரியும் அண்ணாமலையும்!
பாஜக தலைவர் அண்ணாமலையின்
சவுக்கடிப் போராட்டம் விமர்சிக்கப் படுவது ஏன்?
94 versus 140!
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
சிந்தனைக் குள்ளர்களால் நிரம்பி வழியும் இடம்
தமிழக அரசியல் அரங்கம். தமிழகத்தில் இன்றுள்ள
அரசியல் தலைவர்களில் நான்கே நான்கு பேரைத்
தவிர மீதி அனைவரின் IQவும் 94ல் தொடங்கி
100ல் முடிந்து விடும்.
(IQ 94 என்பது ஆட்டிச IQ (Autism spectrum disorder) என்று
எனது நண்பரும் சைக்கியாட்ரிஸ்டுமான ஒருவர்
கூறினார்).
100ஐத் தாண்டிய IQ நான்கே நான்கு பேருக்குத்தான்
உள்ளது. அந்த நான்கு பேரை ஏறு வரிசையில்
பார்ப்போம்.
1) டி டி வி தினகரன்.இவரின் IQ 102 ஆகும்.
2) கார்த்திக் சிதம்பரம். இவரின் IQ 118.
3) ப சிதம்பரம். இவரின் IQ 120.
4) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
இவரின் IQ 140 ஆகும்.
அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த ஏனைய
அரசியல் தலைவர்கள் எல்லோரும் மீடியாக்கர்
(mediocre) மற்றும் சப் மீடியாக்கர் ஆசாமிகளே!
Sub mediocre என்ற சொல்லை நான் புதிதாக உருவாக்கி
புழக்கத்தில் விட்டுள்ளேன்.
இப்போது அண்ணாமலையின் சவுக்கடிப்
போராட்டத்துக்கு வருவோம். தமிழ் வாசகத்
தற்குறிச் சூழலில் எடுத்த எடுப்பில் ஒரு விஷயத்துக்கு
நேரடியாக வந்து விட முடியாது. நீண்ட பீடிகைகள்
தேவைப்படுகின்றன.
சவுக்கடிப் போராட்டம் அண்ணாமலையின் brainchild.
அதாவது IQ 140 உடைய ஒரு brain பிறப்பித்த குழந்தை.
இதை IQ குன்றிய அரசியல் சிந்தனைக் குள்ளர்களும்
ஊடகத் தற்குறிகளும் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?
தமது சவுக்கடிப் போராட்டம் மற்றும் செருப்பு
அணியாமை ஆகியவை தமிழ்ச் சமூகத்தில்
குறிப்பாக பெற்றோர்களிடம் எவ்வளவு சக்தி வாய்ந்த
தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிய துல்லியமான
மதிப்பீடு அண்ணாமலையிடம் உள்ளது.
Game Theory, Nash equilibrium (விளையாட்டுக் கோட்பாடு
மற்றும் நாஷ் சமநிலை) குறித்த ஆழமான அறிவைப்
பெற்றிருந்தால் மட்டுமே அண்ணாமலையின்
போராட்டம் மக்களிடம் எவ்வளவு வீரியமான
தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிய முடியும்.
(Game Theory, Nash equilibrium குறித்து அறிவியல் ஒளி
ஏட்டில் முன்பு நான் எழுதிய கட்டுரைகளைப்
படிக்கலாம். குறைந்தது ப்ளஸ் டூ வரையிலான
கணிதம் இயற்பியல் படித்திருந்தால் எனது
கட்டுரைகள் புரியும்.
படிப்பறிவு இல்லாதவர்கள்,
மிகப்பெரிதும் IQ குன்றியவர்கள்
அறிவியல் அறிவு அறவே இல்லாதவர்கள்
ஆங்கிலம் தெரியாதவர்கள்
நல்ல பண்போ ஒழுக்கமோ இல்லாதவர்கள்
Dravidian scum
போலி நக்சல்பாரிகள், போலி கம்யூனிஸ்டுகள்
இத்தியாதி ஜென்மங்கள்தான் அண்ணாமலையின்
போராட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் அதை
எதிர்க்கிறார்கள்.
முருகனுக்கு அலகு குத்துவது, சபரி மலைக்குச் செல்ல
மாலை அணிந்து விரதம் இருப்பது, மகாத்மா காந்தியின்
உண்ணா விரதங்கள், முகரம் பண்டிகையின்போது
இஸ்லாமிய சகோதரர்கள் தங்களை சாட்டையால்
அடித்துக் கொள்ளுதல் என்னும் இந்த வரிசையில்
வருவதுதான் அண்ணாமலையின் சவுக்கடிகள்!
இவை அனைத்திலும் தன் உடலை வருந்துதல்
என்னும் பொதுத்தன்மை இருப்பதைக் காணலாம்.
இது அஹிம்சையின் பாற்படும்.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். என்னையே
உதாரணமாக எடுத்துக் கொள்ளுவோம்.
எனது IQ 95 என்று IQ Instituteன் இயக்குனர்
தெரிவித்தார். எனது கல்வித் தகுதி
SSLC Fail அந்தக் காலத்தில் 1969ல் 11 வகுப்பு
கொண்ட SSLC இருந்தது. நெல்லை மாவட்டம்
சங்கரன்கோவில் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில்
SSLC தேர்வு எழுதினேன். Maths, English, Science
ஆகிய மூன்று பாடங்களிலும் நான் பெயில்.
செப்டம்பர் எழுதினேன். இம்முறை நான்கு
பாடங்களில் பெயில். விருப்பப்பாடமான
(Elective subject) Historyயிலும் பெயில்.
எனவே நான் நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்து
விட்டேன். தலைமறைவு இயக்கமான
நக்சல்பாரி இயக்கத்தில் தீவிரமாகப் பணி
செய்தவன் நான்.
ஒரு பெருந்தற்குறியான என்னால் Game theory
பற்றியோ அல்லது Nash equilibrium ஆற்றியோ
புரிந்து கொள்ள முடியுமா? அண்ணாமலையின்
மதிப்பீடுகள் என் மர மண்டையில் ஏறுமா?
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
---------------------------------------------------
அண்ணாமலை குறித்து தமிழ் இலக்கியங்கள்
என்ன கூறுகின்றன?
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றுதான்
ஒளவையார் கூறுகிறார் (மூதுரை).
. .
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றால் என்ன
அர்த்தம்? படித்தவனைப் படித்தவன்தான் விரும்புவான்
என்று அர்த்தம். அண்ணாமலை போன்ற ஒரு பெரும்
படிப்பாளியை ஒரு படிக்காத முட்டாள் எப்படி
விரும்புவான்? எப்படி மதிப்பான?
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்- கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் சுடுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
(ஒளவையார் மூதுரை)
சிறு குறிப்புத் தருக: Game theory
-----------------------------------------------
உள்ளூர்ச் சிக்கல் முதல் உலகச் சிக்கல் வரை
மனித சமூகம் எதிர்கொள்ளும் சமூகவியல்
பிரச்சினைகளுக்கு உரிய strategyயைப் பொருத்தி
தகுந்த கணித மாதிரிகள் (mathematical models) மூலம்
தீர்வு வழங்குவதே Game theory.
ஹங்கேரியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த
இயற்பியல் விஞ்ஞானி ஜான் வான் நியூமேன்
(John Von Neumann 1903-1057) Game theoryயின்
சரித்தன்மையை நிரூபித்தார்.
சிறுகுறிப்புத் தருக: Nash equilibrium.
----------------------------------------------------
Game theory வழங்கும் தீர்வுகளில் அதிகபட்ச
நன்மை கொண்ட விளைவைத் தருவதற்கு
நாஷ் சமநிலை பயன்படுகிறது. அமெரிக்கக்
கணித நிபுணர் ஜான் ஃபோர்பஸ் நாஷ் ஜூனியரின்
(John Forbes Nash Jr 1928-2015) பெயரால் இச்சமநிலை
அமைந்துள்ளது.
அண்ணாமலையின் சவுக்கடிகள் சரியே!
தற்குறிகள் மட்டுமே அவரைக் கேலி செய்வார்கள்.
-------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
வாசக அன்பர்களே,
ஒரே கட்டுரையில் Game theoryஐயும் சொல்லுகிறேன்;
மூதுரையின் வெண்பாவையும் சொல்லுகிறேன்.
ஜான் வான் நியூமேனையும் சொல்லுகிறேன்;
ஒளவையாரையும் சொல்லுகிறேன்.
என்னிடமிருந்து அல்லாமல் வேறு யார் எவரிடம்
இருந்தும் இது போன்ற கட்டுரைகளை நீங்கள் படிக்க
இயலாது.
*******************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக