திங்கள், 30 டிசம்பர், 2024

அடித்தால் வலிக்காத சாட்டையால்
அடித்துக் கொள்கிறாரா  அண்ணாமலை? 
சவுக்கடியின் இயற்பியல்!
(The physics of whipping)!  
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------
தங்களின் தகுறித் தனத்தைக் கண்டு கவலையே 
கொள்ளாமல்  தங்களின் அறியாமையை 
வெளிப்படுத்தி மகிழ்வது குட்டி முதலாளித்துவத்தின் 
இயல்பு!

பாஜக தலைவர் அண்ணாமலை சவுக்கால் தன்னை 
அடித்துக் கொண்டார். அந்தச் சாட்டை சிரிப்புச் 
சாட்டை என்றும் அவர் சிரிப்பு ஐபிஎஸ் என்றும் 
முகநூலில் அவதூறு மொழிந்து தனது மனவக்கிரத்தை  
ஊரறிய வெளிப்படுத்தி உள்ளார்  ஒரு அம்மையார்.. 
அந்தச் சாட்டையால் அடித்தால்  சத்தம் கேட்குமே தவிர 
வலிக்காது என்று கூறி மேலும் முன்னேறுகிறது 
அவரின் அறியாமை.

அண்ணாமலையிடம் இருந்து அந்தச் சாட்டையை 
வாங்கி, அதனால் தன்னை இரண்டடி அடித்துக்
கொண்டு, பார் பார் வலிக்கவில்லை பார் என்று 
அம்மையார் நிரூபித்துக் காட்டலாமே!


அறிவியலுக்கு எதிரான பிற்போக்குச் செயல்கள்!
----------------------------------------------------------------------------
நாம் 2025ஐ இன்னும் சில மணி நேரத்தில் அடைந்து 
விடுவோம். இது தேவாரம், திருவாசகம், தேம்பாவணி 
சீறாப்புராண காலம் அல்ல. இன்று செயற்கை 
நுண்ணறிவு உலகை ஆளும் காலம். அறிவியலும் 
இயற்பியலும் நாலாயிரங்கால் பாய்ச்சலில் 
பிரபஞ்ச விஜயம் செய்யும் காலம் இது.

இந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டு அறிவியலுக்கு 
எதிரான பிற்போக்குக் கருத்துக்களை சமூகத்தில்  
பரப்பிக் கொண்டிருப்பது சமூக விரோதச் 
செயல் ஆகும்.  

சவுக்கடியின் இயற்பியல் என்ன?
----------------------------------------------------
சவுக்கடியின் அறிவியலைத் தெரிந்து கொள்ள 
வேண்டுமெனில் ஒருவர் இயற்பியல் படித்திருக்க 
வேண்டும். அம்மையார், பாவம், Physicsக்கு எங்கே 
போவார்? அவருக்கு physics, maths எல்லாம் தெரியுமா?
புரியுமா?

ஆங்கிலமும் தெரிய வேண்டும். lashக்கும் whipக்கும் 
உள்ள வேறுபாடு தெரிய வேண்டும். Force, impulse, 
pressure, torque ஆகிய இயற்பியலின் அடிப்படைகள் 
பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இது எதுவுமே
தெரியாத அம்மையார் அண்ணாமலை 
வைத்திருக்கும் சாட்டையால் அடித்தால் வலிக்காது 
என்கிறார்.

நான் பள்ளிகளில் படித்த 1960-70களில் பள்ளி 
ஆசிரியர்கள் மாணவர்களை ஸ்கேலால் 
அடிப்பார்கள்  அப்போது  மரத்தால் ஆன 
ஒரு அடி ஸ்கேல் மாணவர்களிடம் இருக்கும்.

காவல் நிலையங்களில் கைதிகளை போலீசார் 
லத்தியால் அடிப்பார்கள். புருஷன் பொண்டாட்டி 
சண்டையின்போது புருஷனை பொண்டாட்டி 
விறகுக் கட்டையால் அடிப்பாள்.
       
 ஸ்கேல் அடி, போலீசின் பிரம்படி, விறகுக்கட்டை 
அடி என்னும் இம்மூன்றையும் விட சவுக்கடி (whip) 
அதிகக் காயத்தை ஏற்படுத்தும். எப்படி?

பிரம்பு போன்றவற்றை விட சவுக்கு நீளமானது 
கைப்பிடியுடன் கூடியது. மேலே கனமாகவும் கீழே 
வர வர கனம் குறைவாகவும் இருப்பது.
சவுக்கால் அடிக்கும்போது சவுக்கின் மெல்லிய 
நுனி (tip) அதிக வேகத்துடன் உடலில் படுகிறது.
இது  ஒரு கணத்தாக்கு விசையை (impulse) 
ஏற்படுத்துகிறது.  இந்த impulse முக்கியமானது.
இதனால்தான் சவுக்கடி பிற வகை 
அடிகளை விட அதிக வலி தருகிறது.   

கனமான சவுக்குதான் அதிக வலியைத் தரும் 
என்று தற்குறிகள் கூறுவது அறிவியலுக்கு 
எதிரானது. இங்கு சவுக்கின் mass தீர்மானகரமானது 
அல்ல. 

இந்தச் சவுக்கடி நிகழ்வில் momentum conserve ஆகிறது.
அதுதான் சவுக்கடியின் அதிகபட்ச  injuryக்கு 
காரணம். புரியவில்லை எனில் இப்பொருளில் 
ஒரு வீடியோ வெளியிடுகிறேன். அதுவரை 
பொறுத்திருக்கவும். 
-----------------------------------------------------------------
பின்குறிப்பு:
XI Physics bookல் உள்ள momentum conservation
பற்றிப் படிக்கவும்.
*************************************************  
 

   
        




  

     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக