வெள்ளி, 31 ஜூலை, 2015

ஒரு சகாப்தகரமான மாற்றம்!
---------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
31.07.2015. இந்த நாளின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
இந்தியத் தொலைதொடர்பு வரலாற்றில் இது ஒரு
PARADIGM SHIFTஐக் குறிக்கிறது. ஒரு சகாப்தகரமான
மாற்றத்தைக் குறிக்கிறது. A new age has dawn in Indian
Telecommunication.
**
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் (31.07.2015)
இந்தியாவின் முதல் முதலாக, மொபைல் போன் மூலம்
இருவர் பேசிக் கொண்டனர். ஜோதிபாசுவும் சுக்ராமும்
அன்று பேசியதுதான் முதல் மொபைல் பேச்சு.
** 
WIRE  என்பதில் இருந்து WIRELESSக்கு இந்தியா இந்த
நாளில்தான் மாறுகிறது. அதாவது, கம்பி வழித் தொடர்பு
என்ற நிலை மாறி, கம்பியில்லாத் தொடர்பு என்ற புதிய
உலகில் இந்தியா அடியெடுத்து வைக்கிறது.
**
ஒரு டெலிபோன் என்றால் இரண்டு ஒயர். இதுதான்
தொலைபேசியின் தத்துவம். ஆனால் மொபைல் போன்
(அல்லது செல் போன்) வந்தவுடன் இந்தத் தத்துவம்
மாறுகிறது. எந்த ஒயரும் கிடையாது. NO WIRE!
That is WIRELESS technology. எனவேதான் இந்த நாளை
நாங்கள் கொண்டாடுகிறோம்.
**
உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள
தொலைபேசியானது (LANDLINE TELEPHONE)
WIRE COMMUNICATION. ஆனால் உங்கள் கையில் உள்ள
செல் போன் WIRELESS கருவி ஆகும்.
** 
மார்க்சிய நோக்கில், இது உற்பத்திச் சக்திகளின்
வளர்ச்சியைக் குறிக்கிறது. எனவே வரவேற்கத் தக்கது.
***********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக