வெள்ளி, 24 ஜூலை, 2015

ராஜீவ் கொலை நியாயமானதே என்று மொத்தத் 
தமிழ்நாடும் சொல்ல வேண்டும்!
------------------------------------------------------------------------------------------------------
சற்றேறக்குறைய கால்நூற்றாண்டு காலத்தைச் சிறையில் 
கழித்து விட்ட ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை 
செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான ஒன்றுதான்.
என்றாலும் இந்தக் கோரிக்கை வெற்றி அடைந்திட, சட்டபூர்வமான 
வழிமுறைகளை மட்டும் நம்பி இருப்பது பரிதாபத்துக்கு உரியது.
**
ஏற்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின்படியும் அதற்கான 
விளக்கத்தின் பேரிலும் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்படும்.
அது நமக்குச் சாதகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
**
மக்கள் போராட்டங்களே எழுவரின் விடுதலையைப் பெற்றுத் 
தரும். தமிழ்நாடெங்கும் பரவலாக, எழுவரின் விடுதலையைக் 
கோரி மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெறும்போதுதான் 
ஆள்வோரின் கவனம் ஈர்க்கப்பட்டு, விடுதலைக்குச் சாதகமான 
கருத்துருவாக்கம் நிகழ்ந்து நிர்ப்பந்தம் செலுத்தும்.   
**
அவ்வாறு, பரவலாக, மக்கள்திரள் போராட்டங்கள் நடைபெறு
வதற்கு ஒரு முன்நிபந்தனை உள்ளது. ராஜீவ் கொலை 
நியாயமானது என்று மொத்தத் தமிழர்களும் (அல்லது 
பெரும்பான்மையான தமிழர்கள்) கருத வேண்டும். தமிழ்ச் 
சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி ராஜீவ் கொலை நியாயமானதே 
என்று குரல் எழுப்ப வேண்டும். 
**
கேப்டன் செய்திகள் டி.வி விவாதத்தில் (23.07.2015 வியாழன் 
இரவு 9 to 10 மணி) நியூட்டன் அறிவியல் மன்றம் தெரிவித்த 
கருத்து). 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக