செவ்வாய், 15 மார்ச், 2016

அய்யன் திருவள்ளுவர் சிலையைத் துணியால் மறைத்தது
சரியே! நியாயமே!!
-------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
--------------------------------------------------------------------------------------------
தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்ததைத்
தொடர்ந்து தமிழ்நாடெங்கும் உள்ள அய்யன் திருவள்ளுவர்
சிலைகளை அதிகாரிகள் துணியால் மறைத்து வருகிறார்கள்.
இது சரியான நியாயமான  நடவடிக்கையே. இதில் குறைகாண
ஏதுமில்லை.

வள்ளுவர் சிலையைக் கண்ணுற்றதும் வள்ளுவரை
நினைப்பவர்கள் சொற்பமே. மாறாக வாழும் வள்ளுவராம்
கலைஞரை நினைப்பவர்களே அதிகம்.

வள்ளுவர் சிலையைக் கண்ணுறும் போதெல்லாம் கலைஞரின்
குறளோவியமும், கலைஞர் கட்டுவித்த வான்புகழ் வள்ளுவர்
கோட்டமும், குமரிக்கடலில் நிறுவிய 133 அடி உயர வள்ளுவர்
சிலையுமே தமிழர் நெஞ்சில் நிழலாடுகின்றன. எனவே
வள்ளுவர் சிலையானது வள்ளுவரை விட கலைஞரையே
நினைவுறுத்துகிறது. வள்ளுவர் சிலையானது  தேர்தலில்
போட்டியிடும் கட்சிகளில் திமுகவுக்கு மட்டுமே ஆதாயம்
தருவதாக உள்ளது.

எனவே, ஒரு சமநிலை வாய்ப்பை உறுதி செய்யும் வண்ணம்
அய்யன் திருவள்ளுவர் சிலைககளைத் துணியால் மறைக்கும்
அதிகாரிகளின் செயல் சரியே! நியாயமே!!
--------------------------------------------------------------------------------------------------------

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக