புதன், 16 நவம்பர், 2016

1992இல் நரசிம்மராவ்- மன்மோகன் ஆட்சிக் காலத்தில்
இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டினர் முதலீடு
செய்வதற்கு முதன் முதலில் அனுமதிக்கப் பட்டது.
செபி அமைப்பும் 1992இல் உருவாக்கப் பட்டது.
இதற்காக செபி சட்டமும் (SEBI Act 1992) 1992இல்
உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
**
ஆக, இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு
என்பது 1992யிலேயே வந்து விட்டது. அதாவது நரசிம்மராவ்-மன்மோகன் காலத்திலேயே. அதன் பிறகு தேவா கவுடா
பிரதமர். அதற்கும் பிறகுதான் வாஜ்பாய்
பிரதமராக இருந்தார்;  காலம் 1998-2004. இக்காலக்
கட்டத்தில் இருமுறை அவர் பிரதமராக இருந்தார். 
**
அந்நிய முதலீடு என்பது 1992லேயே வந்து விட்டது.
இதன் வளர்ச்சியின் போக்கில், P Notes என்பவை
வந்தன. அவை வாஜ்பாயாய் காலத்திற்கு
முன்னதாகவே நடைமுறைக்கு வந்து விட்டன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக