வியாழன், 17 நவம்பர், 2016

புதிய ரூ 2000 நோட்டு சாயம் போகிறதா?
அதில் நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய
GPS chip வைக்கப் பட்டுள்ளதா?
சக்திகாந்த தாஸ் அளித்த விளக்கம் முழுமையானதா?
---------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------------
1) புதிய ரூ 2000 நோட்டில் GPS வசதியுள்ள சிப் எதுவும்
பொருத்தப் படவில்லை என்று ரிசர்வ் வங்கி
மறுத்துள்ளது. It is a simple denial, that is all. எத்தகைய
அறிவியல் விளக்கத்தையும் ரிசர்வ் வங்கி
அளிக்கவில்லை.

2) சாயம் போனால்தான் அது உண்மையான நோட்டு
என்று ரூ 2000 புதிய நோட்டைப் பற்றி, நிதித்துறைச்
செயலாளர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
எனினும் அதற்கான அறிவியல் விளக்கம் எதையும்
சக்திகாந்த தாஸ் அளிக்கவில்லை.

3) சக்திகாந்த தாஸ் அவர்களை நாம் குறை சொல்ல
விரும்பவில்லை. After all, அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.
அவர் அறிவியல் அறிஞர் அல்ல. எனவே அறிவியல்
விளக்கம் அளிக்கவில்லை என்பதற்காக,
சக்திகாந்த தாஸ் அவர்கள் மீது குறை காண இயலாது.

4) தமிழ்த் தொலைக் காட்சி விவாதங்களில் பங்கேற்கும்
பாஜக பிரதிநிதிகள் புதிய ரூ 2000 நோட்டில் எல்லாமே
இருக்கிறது என்றும், nano, picco, femto என்று எல்லா
வகையான தொழில்நுட்பங்களும் இருப்பதாகவும்
வண்ணக் கனவுகளை மெய்போல விவரிக்கின்றனர்.

5) அவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை. பாவம்,
அவர்கள் சராசரி அரசியல்வாதிகள் (mediocre people).
அவர்களுக்கு அறிவியலில் எளிய பரிச்சயம் கூடக்
கிடையாது.

6) எனவே புதிய ரூ 2000 நோட்டு குறித்து, முழுநிறைவான
அறிவியல் விளக்கத்தை நியூட்டன் அறிவியல் மன்றம்
அளிக்கும். அது கட்டுரையாகவோ காணொளியாகவோ
இரண்டுமாகவோ இருக்கும்.

7) இதற்கான தயாரிப்புகளில், தரவுத் தேடலில் நியூட்டன்
அறிவியல் மன்றம் தற்போது ஈடுபட்டுள்ளது. விரைவில்
எமது அறிவியல் விளக்கம் நிரூபணத்துடன் வெளியாகும்.

8) மொத்தத் தமிழ்நாட்டிலும் ஏன் மொத்த இந்தியாவிலுமே
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இப்பொருளில்
அறிவியல் விளக்கம் அளிக்கும் பொறுப்பை ஏற்க
முன்வந்துள்ளது என்பதை நாடறியும். இதனால்
நியூட்டன் அறிவியல் மன்றம் பெருமிதம் கொள்கிறது.

9) தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும்
வெளியாகும் எமது அறிவியல் விளக்கத்தை
அறிந்திட முந்துங்கள்.
*********************************************************************
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக