திங்கள், 14 ஆகஸ்ட், 2017

உபி குழந்தைகள் மரணம்!
யாரெல்லாம் பொறுப்பு?
அரசு நடைமுறை என்ன?
-------------------------------------------------
1) உபி அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த குழந்தைகளின்
மரணத்திற்கு உபி முதல்வர் என்ற முறையில்
யோகி ஆதித்ய நாத் பொறுப்பாவார். இவரின்
பொறுப்பு ஒட்டுமொத்த அளவிலான பொதுவான
பொறுப்பு ஆகும். (over all general responsibility).

2) அடுத்து, உபி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் 
சித்தார்த் நாத் சிங் இதற்குப் பொறுப்பாவார். இவரது
பொறுப்பு நேரடிப்பொறுப்பு (direct responsibility) ஆகும்.

3) இதன் பொருள் என்னவெனில், முதலமைச்சரை
விட, சுகாதாரத்துறை அமைச்சரே அதிகமான
பொறுப்பு உடையவர் (more responsible than the Chief Minister)
என்பதாகும்.

4) இதுதான் சட்டம்; இதுதான் நியாயமும் ஆகும்.
ஒரு பெரிய ரயில் விபத்து நிகழ்ந்து பெரும்
எண்ணிக்கையில் பயணிகள் இறந்து விடுகிறார்கள்
என்று வைத்துக் கொள்வோம். அப்போது ரயில்வே
அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று
கோரிக்கைகள் எழும். ஏனெனில் நிகழ்ந்த
விபத்துக்கு நேரடிப்பொறுப்பு ரயில்வே அமைச்சர்
என்பதால், பிரதமரை விட மக்களின் கோபத்திற்கு
பலமடங்கு இலக்கு ஆவது ரயில்வே அமைச்சரே.

5) ஆக அரசியல் களத்தில், உபி முதல்வரும்
மாநில சுகாதார அமைச்சரும் பொறுப்பேற்க
வேண்டியவர்கள் ஆகிறார்கள். அதே நேரத்தில்
இவர்களின் பொறுப்பு என்பது தார்மீக ரீதியான
பொறுப்பே (moral responsibility). இதன் பொருள்
சட்ட ரீதியாக (legally) இவர்கள் மீது பொறுப்பைச்
சுமத்த முடியாது என்பதே. 

6) அடுத்து, குழந்தைகளின் மரணம் நிகழ்ந்த
அரசு மருத்துவமனையின் தலைவரான (Dean)
டாக்டர் ராஜிவ் மிஸ்ரா இதற்குப் பொறுப்பு ஆவார்.
அவர் தமது பதவியை ராஜினாமா செய்வதாக
அறிவித்துள்ளார். ஆனால் அவரின் ராஜினாமாவை
உபி அரசு ஏற்கவில்லை. மாறாக அவர் சஸ்பெண்டு
செய்யப் பட்டுள்ளார்.

7) ஒரு ஊழியரோ அதிகாரியோ ராஜினாமா செய்தால்
அதை அரசு ஏற்க வேண்டும் என்று எந்த அவசியமும்
இல்லை. ஏற்பதும் மறுப்பதும் அரசின் முடிவு. ஆக,
உபி அரசு மருத்துவமனையின் டீன் சஸ்பெண்டு
செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கையே.

8) அடுத்து, ஆக்சிஜன் சிலிண்டர்களின் சப்ளைக்குப்
பொறுப்பான ஒருங்கிணைப்பு அதிகாரியான
(Nodal Officer) டாக்டர் கபீல் அகமது கான்
குழந்தைகளின் மரணத்திற்கு நேரடிப் பொறுப்பாவார்.
இவரின் பொறுப்பு Direct Responsibility ஆகும். வேறு எவரையும்
விட, இவரே அதிகமான பொறுப்பு உடையவர். இவரும்
சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இது மிகச்
சரியான நடவடிக்கையே.

9) ஆக, பொறுப்புகளை வரிசைப் படுத்தினால்,
அ) டாக்டர் கபீல் அகமது கான் (Nodal Officer) 
ஆ) டாக்டர் ராஜிவ் மிஸ்ரா (மருத்துவமனை முதல்வர்)
இ) சித்தார்த் நாத் சிங் (சுகாதார அமைச்சர்) (தார்மீகப்பொறுப்பு)
ஈ) யோகி ஆதித்யநாத் (உபி முதல்வர்) (தார்மீகப்பொறுப்பு)
என்பதாக அமையும்.

10) இந்த மரணங்களுக்கு மிக முக்கியமான பொறுப்பு
ஆக்சிஜன் சப்ளையை தடாலடியாக நிறுத்திய
"புஷ்பா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் " என்ற நிறுவனம்.
இது தனியார் நிறுவனம் என்பதால், இதன் தலைவர்
மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலாது. இவர்
கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். அது விரைவில்
நடக்கக் கூடும்.

11) உபி முதல்வர் ஒரு விசாரணைக்கு உத்தரவு
இட்டுள்ளார். விசாரணையின் இறுதியில்தான்
இன்னும் யார் யாரெல்லாம் குற்றவாளிகள் என்பது
தெரியவரும்.

12) டாக்டர் ராஜேஷ் மிஸ்ராவும் டாக்டர் கபீல் அகமது
காணும் கைது செய்யப்படவில்லை. சஸ்பெண்டு
செய்யப் பட்டுள்ளார்கள். ஆனால் ஒரு இசுலாமியரான
கபீல் அகமது கானை சஸ்பெண்டு செய்ததைக்
கண்டித்து சில குட்டி முதலாளித்துவவாதிகள்
கூக்குரல் எழுப்புவது சரியல்ல. இது அப்பட்டமான
மதவாதப் பார்வை ஆகும். 

13) ஒரு பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு
வசதியாக கபீல் அகமது கான் சஸ்பெண்டு செய்யப்
பட்டுள்ளார். இது அரசுத் துறையில் மிகவும்
தொடக்க நிலையிலான குறைந்தபட்ச நடவடிக்கை
ஆகும். இதைக்கூட ஒரு அரசு செய்யக் கூடாது
என்று கூக்குரல் இடுவது நெறியற்ற நடத்தை ஆகும்.

14) Suspension by itself is not a punishment என்பதுதான் அரசின்
சட்டம். எனவே விசாரணை நடக்கட்டும். மாண்ட
குழந்தைகளுக்கு நீதி கிடைக்கட்டும்.
*******************************************************    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக