அண்ணன் தம்பி ஆனான்! தம்பி அண்ணன் ஆனான்!
ஐன்ஸ்டினின் ரிலேட்டிவிட்டி தியரியின் மாயவித்தை!
------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
1) அண்ணனின் வயது 30. தம்பியின் வயது 27.
தம்பி ஒரு அரசியல் கட்சியில் ஒன்றியச் செயலாளராக
இருக்கிறான். அண்ணன் ஒரு Astrophysicist. அதாவது
விண்வெளி விஞ்ஞானி.
2) அண்ணன் ஒரு விண்கலத்தில் ஏறி, பூமிக்கு
அப்பால் உள்ள ஒரு கோளுக்கு பயணம் செல்கிறான்.
விண்கலம் ஒளியின் வேகத்தில் 90 சதம் வேகத்தில்
செல்கிறது.
3) ஒளியின் வேகம் நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர்.
(இதை c என்று குறிப்பிடுவது வழக்கம்).
4) விண்கலனின் வேகம் 3 லட்சத்தில் 90 சதம். அதாவது
நொடிக்கு 2,70,000 கி.மீ ஆகும். (இதை 0.9 c என்று
குறிப்பிடலாம்).
5) 10 ஆண்டுகள் கழிந்து விடுகின்றன. தம்பிக்கு 37
வயது (27+10=37) ஆகி விடுகிறது. இப்போது அண்ணன்
பூமிக்குத் திரும்பி விடுகிறான். அண்ணனின் வயது என்ன?
6) விண்வெளிக்குச் செல்லும்போது அண்ணனின் வயது
30. விண்வெளியில் அவன் செலவழித்த காலம்
10 ஆண்டுகள். எனவே அண்ணனின் வயது 40
(30+10=40) என்கின்றனர் அனைவரும்.
7) ஆனால் ஐன்ஸ்டின் இதை மறுக்கிறார். அண்ணனின்
வயது 40 அல்ல; அதை விடக் குறைவு என்கிறார்.
எவ்வளவு குறைவு என்றும் கணக்குப் போட்டுப்
பார்த்துச் சொல்கிறார்.
8) MOVING CLOCKS RUN SLOWER THAN STATIONARY CLOCKS
என்கிறார் ஐன்ஸ்டின். பூமியில் உங்கள் வீட்டில்
சுவரில் மாட்டியிருக்கும் கடிகாரமும், விண்கலனில்
இயக்கத்தில் இருக்கும் கடிகாரமும் ஒரே நேரத்தைக்
காட்டாது என்கிறார் ஐன்ஸ்டின்.
9) விண்கலனில் உள்ள கடிகாரம் மெதுவாகப் போகும்
என்கிறார். எனவே அது காட்டும் நேரம் பூமியில்
உள்ள கடிகாரம் காட்டும் நேரத்தை விடக் குறைவு
என்கிறார்.
10) ஐன்ஸ்டினின் கணக்குப்படி, விண்கலத்தில்
சென்று இப்போது பூமிக்குத் திரும்பி இருக்கும்
அண்ணனுக்கு வயது 34 தான் ஆகிறது. அதாவது
பூமியில் கழிந்த 10 ஆண்டுகள் என்பது விண்வெளியில்
4.4 ஆண்டுகளுக்குத்தான் சமம் என்கிறார் ஐன்ஸ்டின்.
எனவே அண்ணனின் வயது 30+4.4= 34.4 அதாவது
34 ஆண்டும் 5 மாதமும்தான் என்கிறார். இதுதான்
டைம் டைலேஷன் (time dilation) என்கிறார்.
11) பிரசித்தி பெற்ற "ஒன் மைனஸ் வி ஸ்கொயர் பை
சி ஸ்கொயர்" ஃபார்முலாவைக் கொண்டு, தமது
கூற்றை நிரூபிக்கிறார். இந்த ஃபார்முலாவுடன்
நமது வாசகர்கள் ஏற்கனவே அறிமுகமாகி
இருக்கிறார்கள். நிறை அதிகரிப்பு (mass increase),
நீளம் சுருங்குதல் (length contraction) ஆகியவற்றில்
பயன்பட்ட அதே ஃபார்முலாதான் இது.
(ஃபார்முலாவை படத்தில் காண்க).
12) தம்பியின் வயது 37. அண்ணனின் வயது 34. எனவே
அண்ணன் தம்பியாகி விட்டான்; தம்பி அண்ணனாகி
விட்டான் என்கிறார் ஐன்ஸ்டின்.
13) 100 ஆண்டுகளுக்கு முன், இதே விஷயத்தை
ஐன்ஸ்டின் சொன்னபோது கேட்டுக் கொண்டிருந்த
பேராசிரியர்கள் மூர்ச்சை அடைந்தனர். எல்லோரையும்
மருத்துவமனைக்குக் கொண்டு சென்று குளுக்கோஸ்
ஏற்றினார்கள்.
14) இன்று யாரும் மூர்ச்சை அடையத் தேவையில்லை.
ஐன்ஸ்டின் பயன்படுத்திய அதே ஃபார்முலாவை
நீங்களும் பயன்படுத்தி, ஐன்ஸ்டின் எப்படி
அண்ணனின் வயது குறைந்திருப்பதை நிரூபித்தாரோ
அதே போல நீங்களும் நிரூபிக்கலாம்.
15) இதன் பொருள் நீங்களும் ஐன்ஸ்டின் ஆகலாம்
என்பதே. அந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி
அண்ணனின் வயது 34.4 என்று உங்களால்
நிரூபிக்க முடிந்தால் நீங்களும் ஐன்ஸ்டினே!
கமான், நிரூபியுங்கள்!
-------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக