ஞாயிறு, 19 நவம்பர், 2017

ஒரு மாமியாருக்கு 2 மருமகள்.
ஒருத்தி தூத்துக்குடியிலும்
இன்னொருத்தி ஊட்டியிலும் பாலைக்
காய்ச்சினால், யாரால் சீக்கிரம் பாலைக் காய்ச்சுவார்?
காய்ச்ச முடியும்? ஏன்?  யு   பால்

mukkiya kurippu!
முக்கிய குறிப்பு!
--------------------------------
தூத்துக்குடி கடல் மட்டத்தில் இருப்பதாகவும் ஊட்டி
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6000 அடி உயரத்தில்
இருப்பதாகவும் கணக்கில் கொள்ளுங்கள். இருவரும்
ஒரே தரத்துப்பாலை, ஒரே அளவு திறன் உடைய
அடுப்பில், ஒரே நேரத்தில் காய்ச்சுகின்றனர் என்று
கொள்க. உயரத்தைத் தவிர (altitude aboveMSL, MSL =Mean Sea Level )
வேறு காரணி எதுவும் பால் காய்ச்சுதலில் செயல்படாது
என்று கொள்க.
------------------------------------------------------------------------------------------------
சரியான விடையும் விளக்கமும்!
-----------------------------------------------------------
விடை: ஊட்டி மருமகள்தான் சீக்கிரம் பால் காய்ச்சுவார்.
விளக்கம்:
-------------------
1) பாலின் கொதிநிலை (boiling point) என்ன?
தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி செல்ஸியஸ்
என்பதை நாம் அறிவோம். பாலின் கொதிநிலை
100 டிகிரியை விடச் சற்று அதிகம். அவ்வளவே.
கிட்டத்தட்ட 100 டிகிரி, 100.5 டிகிரி, 101 டிகிரி (செல்ஸியஸ்)
என்ற அளவில்தான் பாலின் கொதிநிலை இருக்கும்.
**
2) ஊட்டி கடல் மட்டத்துக்கு மேல் 6000 அடி உயரத்தில்
இருக்கிறது. இதனால் அங்கு பாலின் கொதிநிலை
குறைவாக இருக்கும். அதாவது 93 டிகிரி செல்ஸியஸ்
(அல்லது 92 டிகிரி செல்ஸியஸ்) என்பதுதான் பாலின்
கொதிநிலை.
**
3) தூத்துக்குடியில் பாலின் கொதிநிலை= 100 டிகிரி C.
ஊட்டியில் பாலின் கொதிநிலை 93 டிகிரி C.
எனவே ஊட்டியில் விரைவில் பாலைக்
காய்ச்ச முடியும்.
**
4) திரவங்களின் கொதிநிலை உயரத்தைப் பொறுத்து
(altitude) மாறும் என்பதை உணர்த்துவதே இக்கணக்கின்
நோக்கம்.
**
5) உயரத்தைப் பொறுத்து ஏன் கொதிநிலை மாறுகிறது
என்பதை வாசகர்கள் தங்கள் சொந்த முயற்சியில்
அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். வெவ்வேறு
திரவங்களின் கொதிநிலை பற்றியும் அறிந்து
கொள்ளவும். ஆல்கஹாலின் கொதிநிலை என்ன?
அறிந்து கொள்க.
----------------------------------------------------------------------------------------    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக