திங்கள், 16 ஜூலை, 2018

SAR என்பது Specific Absorption Rate ஆகும். செல்போனை
பயன்படுத்தும்போது, நமது உடலில் எவ்வளவு
மின்காந்தக் கதிர்வீச்சு (electro magnetic radiation)
உட்கொள்ளப் படுகிறது என்பதே SAR ஆகும்.
இது தலைக்குத் தனியாகவும் உடம்புக்குத் 
தனியாகவும் கணக்கிடப் படும். இதன் யூனிட்
watt per kg.

தசை, நரம்பு, எலும்பு, ரத்தம் முதலியவற்றால்
ஆன நமது உடம்பில், ஒரு கிலோகிராம்
தசையில் எவ்வளவு மின்காந்தக் கதிர்வீச்சு
உட்கிரகிக்கப் படுகிறது என்று அளவிடுவதே
SAR ஆகும். இதைக் கணக்கிடும்போது,
1 கிராம் தசையின் மீது கணக்கிட வேண்டும்.
அப்போதுதான் துல்லியமான முடிவு கிடைக்கும்.  

இந்திய அரசு  இந்த SAR என்பது ஒரு மொபைல்
போனில் 1.6 watt per kg வரை இருக்கலாம் என்று
நிர்ணயித்து உள்ளது. இதுதான் safety limit.
மொபைல் போனின் SAR அளவு இதைத்
தாண்டினால் அது RISK ஆகும். அது தவிர்க்கப்பட
வேண்டும்.

கொடுக்கப்பட்ட SAR மதிப்பில், தலைக்கு  (HEAD)
0.625 watt per kg என்பது பாதுகாப்பான அளவு.
உடம்புக்கு 1.236 watt per kg என்பதும் பாதுகாப்பான
அளவே.

@1g என்பதன் பொருள் 1 கிராம் தசையின் மீது
கணக்கீடு மேற்கொள்ளப் பட்டது என்பதைக்
காட்டுகிறது. இதுவும் சரியே.
 

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக