செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

மாநில நலனைப் பேணும் தேசியக் கட்சிகளும்
மாநில நலனை அடகு வைத்த திராவிடக் கட்சிகளும்!
---------------------------------------------------------------------------------------------
1) மத்தியப் பிரதேசத்தில் இதுவரை பாஜக ஆட்சியில்
இருந்தது. சிவராஜ்சிங் சௌஹான் முதல்வராக
இருந்தார்.

2) தனியார் துறையில் உள்ள வேலைகளில் 50 சதம்
உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும் என்று
சட்டம் இயற்றி இருந்தார் சிவராஜ்சிங் சௌஹான்.

3) தற்போது மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம்
ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது.
கமல்நாத் முதல்வராகி உள்ளார்.

4) தனியார் துறையில் உள்ள வேலைகளில் 75 சதம்
உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும் என்று
சட்டம் இயற்றி உள்ளார் கமல்நாத்.

5) தேசியக் கட்சிகள் என்றாலே மாநில மக்களின்
உணர்வுகளை மதிக்காத கட்சிகள் என்ற கருத்து
தமிழ்நாட்டில் நிலவுகிறது.

6) உண்மை இதற்கு மாறாக இருக்கிறது என்பதற்கான
உதாரணத்தை மேலே பார்த்தோம். காங்கிரசும்
பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு, மண்ணின்
மைந்தர்களுக்கே வேலை என்பதை உறுதிப் படுத்தி
உள்ளன.

7) ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை என்ன? இங்கு
1967 முதல் மாநிலக் கட்சிகளே ஆட்சியில் உள்ளன.
ஆனால் ரயில்வே அஞ்சல் போன்ற மத்திய அரசுப்
பணிகளில் கூட, தமிழ்நாட்டு இடங்களில்
வெளிமாநிலத்தவர்கள் பணிக்கு வந்து விட்டனர்.

8) தமிழ்நாட்டில் லார்சன் அண்ட் டூப்ரோ போன்ற
பெரும் பெரும் நிறுவனங்கள் வழங்கும்
வேலைவாய்ப்புகளில், கட்டிடத் தொழிலில் உள்ள
வேலைவாய்ப்புகளில் வெளிமாநிலத்தவர்தான்
உள்ளனர்.

9) தமிழ்நாட்டில் தமிழனுக்கு வேலை இல்லை
என்ற நிலையை உருவாக்கியதுதான் திராவிடக்
கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சியின் பயன்.
மத்தியப் பிரதேசம் போல தமிழ்நாட்டில்
மண்ணின் மைந்தருக்கே வேலை என்பதை
உறுதி செய்யும் சட்டத்தை திராவிடக் கட்சிகள்
இயற்றவே இல்லை.

10) மண்ணின் மைந்தருக்கே வேலை என்பது
இனவாதக் கோரிக்கை அல்ல. இயற்கையான
கோரிக்கை.
*******************************************************         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக