ஞாயிறு, 25 ஜூலை, 2021

 மார்க்சியத்தின் எதிர் துருவத்தை நோக்கிய 

மருதையனின் பயணம்!

-----------------------------------------------------------

மார்க்சியம் தனிச் சொத்துரிமைக்கு எதிரானது.

தனிச்சொத்துரிமையை ஒழிப்பதுதான் 

(abolition of private property) மார்க்சியம்.


ரஷ்யப்புரட்சி வென்று போல்ஷ்விக்குகள் 

அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியதுமே,

லெனின் பிறப்பித்த முதல் உத்தரவு

தனியுரிமைச் சொத்துக்களை ஒழிக்கும் 

உத்தரவுதான்.


முன்னாள் மார்க்சிஸ்ட் மருதையனுக்கும் அவரின் 

அடிப்பொடிகளுக்கும் இந்த மார்க்சிய பாலபாடம்

பிடிக்காமல் போய்விட்டது. அது எப்படி, சொத்துரிமையை 

ஒழிக்கலாம் என்று கோபப் படுகிறார்கள்.


ஏனெனில் அவர்களிடம் இன்று சொத்து சேர்ந்து 

விட்டது. மருதையனிடமும் அவரின் கூட்டாளிகளிடமும் 

இன்று இழப்பதற்கு நிறைய இருக்கிறது.

எல்லாம் சொத்துக்கள்தான். உழைத்துச் சம்பாதித்த 

சொத்து அல்ல. ஊரானை ஏமாற்றி, மிரட்டி 

எழுதி வாங்கி தமிழ்நாடு முழுவதும் ஆட்டையைப் 

போட்ட சொத்துக்கள்.


இந்த சொத்துக்களையெல்லாம் பாதுகாக்க வேண்டாமா?

அதற்காக சொத்துப் பாதுகாப்புக்குழு அமைத்து 

விட்டார் மருதையன்.அதற்குத் தலைவராக 

காளியப்பனையும் நியமித்து விட்டாராம் மருதையன்.


தங்களின் பழைய மார்க்சிய அடையாளங்களை 

வேக வேகமாக அழித்து விட்டு தானும் ஒரு பூர்ஷ்வா 

என்று ஏனைய பூர்ஷ்வாக்களோடு ஐக்கியப் 

படுவதுதான் இன்று மருதையனின் வேலைத்திட்டம்.


மார்க்சியமும் தனிச்சொத்துரிமையும் வட துருவம் 

தென் துருவம் போன்றவை. வடதுருவத்தில் இருந்து இறங்கி 

சொத்துடைமையை நோக்கிய எதிர்த் துருவ பயணத்தில் 

மருதையனும் அவருடைய அடிப்பொடிகளும் பயணம் 

செய்கிறார்கள். இது ஒன்றும் நீண்ட பயணமெல்லாம் 

அல்ல. விரைவிலேயே மார்க்சியத்துக்கு எதிர்த்திசையில் 

வெகுதூரம் வந்து விடுவார்கள். 


அவர்களது பயணம் வெல்லட்டும் என்று வாழ்த்துவோம்.

இத்தகைய கடைந்தெடுத்த போலிகளும் ஏமாற்றுப் 

பேர்வழிகளும் மார்க்சிய முகாமை விட்டு தாங்களே 

ஓடி விடுவது வரவேற்கத் தக்கது.

-------------------------------------------------------------------    




     

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக