ஆந்திர போலீசின் மிருக வெறி!
செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை!
நியூட்டன் அறிவியல் மன்றம் தெரிவித்த கருத்துக்கள்!
--------------------------------------------------------------------------------------
பார்வை: 07.04.2015 வின் டி.வி. விவாதம்.
---------------------------------------------------------------------------------------
1) எய்தவன் இருக்க அம்பை நோவதேன் என்பது போல
கடத்தல்காரர்களை விட்டு விட்டு, மரம் வெட்டிய
தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றது திட்டமிட்டுச்
செய்த அராஜகம்.
2) ஒரு நிகழ்வில் 20 பேர் கொலை என்பது எதேச்சையாகவோ
அகஸ்மாத்தாகவோ நடந்து விட்ட விஷயம் அல்ல.
ஒரு வெடிகுண்டுச் சம்பவம் என்றால், அதில் ஒரே நேரத்தில்
இருபது பேர் இறந்து போவது இயற்கை. இது அப்படிப் பட்ட
நிகழ்வு அல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டு ஒருவர் பின்
ஒருவராகச் சுட்டுக் கொன்ற அராஜகம்தான் இது.
**
3) தொடர்பு உடைய காவல்துறை அதிகாரிகள் உடனடியாக
சஸ்பெண்ட் செய்யப் பட வேண்டும்.
4) செம்மரக் கடத்தல் என்பது ஒவ்வொரு நாளும் நடக்கும்
நிகழ்வுதான். இதில் யார் யார் ஈடுபட்டு உள்ளனர் என்பது
ஆந்திரக் காவல்துறைக்குத் தெரியாதாது அல்ல. காவல் துறை,
வனத்துறை, கடத்தல்காரர்கள் ஆகிய மூவரும் இணைந்து
அரசியல்வாதிகளின் தயவுடன் நடப்பதுதான் செம்மரக்
கடத்தல்.
**
படுகொலையான தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்டுவது
நியாயம் அல்ல. சுரண்டல் சமுதாய அமைப்பில், இல்லாதவன்
திருடுவது இயல்பே.
THEFT IS THE FIRST SIGN OF PROTEST OF THE HAVE NOTS AGAINST
THE EXPLOITATIVE SOCIETY என்கிறார் மார்க்சிய மூல ஆசான்
பிரடரிக் எங்கல்ஸ்.
**
அறத்திற்கே அன்புசார்(பு) என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
என்கிறார் வள்ளுவர். பெற்ற தாயும் கட்டின பொண்டாட்டியும்
பசியால் துடிக்கும்போது, ஒருவன் எது அறம், எது மறம் என்று
பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. எனவே மரம் வெட்டச்
சென்ற தொழிலாளர்களைக் குறை கூறிப் பயனில்லை.
***
அடிப்படை உழைக்கும் மக்கள் இதற்குப் பழி வாங்குவார்கள்!
*****************************************************************88

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக