வெள்ளி, 11 டிசம்பர், 2015

cusec (கியூசெக்) என்று ஒரு யூனிட் உண்டு. cubic feet per second என்பதன் சுருக்கமே கியூசெக் ஆகும். வினாடிக்கு இத்தனை கனஅடி என்பதே
அதன் பொருள். ஊடகத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள்,
நிருபர்களில் 99 சதம் பேருக்கு அறிவியல் அறிவு கிடையாது.
தாங்கள் வாசிக்கும் செய்தியின் அர்த்தம் அவர்களுக்குத்
தெரியாது. எனவே வெறுமனே 36000 கனஅடி என்று
சொல்வார்களே தவிர, வினாடிக்கு 36000 கனஅடி என்று சொல்ல
மாட்டார்கள்.
**
கியூசெக் என்பது water flowவின் யூனிட் ஆகும். வினாடிக்கு 36000
கனஅடி நீர் வெளியேறுகிறது என்றால், ஒரு நிமிடத்துக்கு
எவ்வளவு, ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு, 12 மணி நேரத்தில்
எவ்வளவு நீர் வெளியேறி இருக்கிறது என்று கணக்குப் போட்டுப்
பார்க்கவும்.
**
36000 X 60 X 60 X 12 = 1 555 200 000 = 1.5 tmc.
ஒன்றரை டி.எம்.சி கொள்ளளவு உடைய தண்ணீர் வெளியேறி
இருக்கிறது என்று பொருள். (tmc = thousand million cubic feet ) .
இப்போது வெளியேறிய தண்ணீரின் பிரும்மாண்டம் புரியும்.
tmc என்பது unit of volume of  water.
cusec என்பது unit of waterflow. 
--------------------------------------------------------------------------------------------------------------          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக