சனி, 19 டிசம்பர், 2015

பேராசிரியரும் துணைப் பேராசிரியரும்!
--------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
----------------------------------------------------------------------
ஆசிரியம் என்பது ஒரு செய்தொழில் (profession).
பள்ளியில் கற்றுக் கொடுப்பவர் ஆசிரியர். கல்லூரி
பல்கலைக் கழகங்களில் கற்றுக் கொடுப்பவர் பேராசிரியர்.

மருத்துவர், பொறியாளர், வழக்குரைஞர் ஆகியவை
செய்தொழில்கள் (professions).அது போலவே பேராசிரியர்
என்பதும் செய்தொழிலே.

MBBS படித்து முடித்த ஒருவர் அரசுப் பணியில் நியமிக்கப்
படும்போது, அவர் உதவி மருத்துவர் (CIVIL ASST SURGEON )
என்றுதான் நியமிக்கப் படுகிறார். இங்கு உதவி மருத்துவர்
என்பது அவரின் DESIGNATION.

BE பட்டம் பெற்ற ஒருவர் உதவிப் பொறியாளர் (Asst Engineer)
என்றுதான் நியமிக்கப் படுகிறார். இங்கு உதவிப் பொறியாளர்
என்பது அவரின் Designation.

உதவி மருத்துவர், உதவிப் பொறியாளர் என்பது போல
உதவிப் பேராசிரியர் என்பதும் ஒரு designation ஆகும்.
Designationஐ வைத்துக் கொண்டு ஒரு மருத்துவரைப்
பார்த்து "நீங்கள் வெறும் உதவி மருத்துவர்தானே தவிர
மருத்துவர் அல்ல" என்று கூறுவது மூடத்தனம். 

அதே போல்,  designationஐ வைத்துக் கொண்டு, "நீங்கள்
வெறும் உதவிப் பேராசிரியர்தானே தவிர,  பேராசிரியர்
அல்ல என்று கூறுவதும் மூடத்தனமே.  

PROFESSION என்பதற்கும் DESIGNATION என்பதற்கும்
வேறுபாடு தெரியாத அறியாமை காரணமாகவே சிலர்
இப்படிக் கூறி வருகின்றனர்.

ஒருவரின் தொழிலைத் தீர்மானிப்பது அவரின் Profession
தானே தவிர, அவரின் designation அல்ல.

பச்சையப்பன் கல்லூரியில் அவர் பணியாற்றியபோது
அவரின் designation உதவிப் பேராசிரியர். ஆனால் அவரின்
profession "பேராசிரியர்" ஆகும். ஒருவரை அடையாளப் 
படுத்துவது அவரின் Profession தானே தவிர, அவரின்
designation அல்ல.

இப்போது சொல்லுங்கள், அவர் பேராசிரியரா இல்லையா?
******************************************************************
   .     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக