செவ்வாய், 1 நவம்பர், 2016

மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்
ஜி ராமகிருஷ்ணனின் கோழைத்தனம்!
வன்மையாகக் கண்டிக்கிறோம்!
-----------------------------------------------------------------------
வைகோவை அவரின் இல்லத்தில் சந்தித்தார்
மார்க்சிஸ்ட் தலைவர் ஜி ராமகிருஷ்ணன். தோழர்
கனகராஜ் உடன் சென்றிருந்தார்.

மக்கள் நலக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில்
இருந்து வைகோ உடனடியாக விலகி, அந்தப் பதவியை
திருமாவளவனுக்குத் தர வேண்டும் என்று சந்திப்பின்
போது ஜி ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார். இது
எங்கள் கட்சியின் முடிவு என்றும் மேலும் கூறினார்.

ஆனால் வைகோ விலக மாட்டேன் என்று பிடிவாதம்
பிடித்தார். நீங்கள் விலகா விட்டால் மநகூவுக்குக் கொள்ளி
வைக்க வேண்டி வரும் என்று ஜி ராமகிருஷ்ணனும்
கனகராஜும் எச்சரித்தனர்.

இந்நிலையில், நாற்காலியில் உட்கார்ந்திருந்த வைகோ
சட்டென்று எழுத்து, ஜி ராமகிருஷ்ணனின் காலில்
விழுந்து, "ப்ளீஸ் ஜியார், ப்ளீஸ், இந்தப் பதவியில்
இருந்து நான் விலகினால், தற்கொலைதான் செய்து
கொள்ள வேண்டி வரும், எனவே ப்ளீஸ் என்னை விலகச்
சொல்லாதீங்க" என்று கெஞ்சிக் கதறினார்.

"ஜியார், உண்மையிலேயே நான் தற்கொலை
செய்து கொள்ளுவேன், இது எங்க அம்மா மேல
சத்தியம்" என்று மேலும் அழுத்தம் கொடுத்தார் வைகோ.

இதனால் பயந்துபோன ஜியார், இந்த ஆள் செத்துத்
தொலைத்தால், பழி நம் மீது வருமே" என்று எண்ணி,
"சரி சரி, வைகோ, இருந்துட்டுப் போங்க, எந்திரிங்க "
என்று கூறி  வைகோவை எழுப்பினார்.

இவ்வாறு ஜி ராமகிருஷ்ணனின் கோழைத் தனத்தால்,
வைகோவின் பதவி தப்பியது; ஆனால் மநகூவுக்கு
அந்திம காலம் நெருங்கியது.
************************************************************************      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக