ஞாயிறு, 20 நவம்பர், 2022

விண்வெளியில் செலுத்தப்பட்ட ஒரு ராக்கெட்!
விண்வெளி வரலாற்றில் ஒரு மைல்கல்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------
டாக்டர் விக்ரம் சாராபாய் தெரியுமா?
இஸ்ரோவின் தலைவர்! இந்திய விண்வெளிச் 
சாதனைகளின் தந்தை!

அவருடைய பெயரில் ஒரு ராக்கெட்.
அதுதான் விக்ரம்!

எலான் மஸ்க் தெரியுமா? தெரியாதவர்கள் 
எலான் மஸ்க் என்ற தலைப்பில் அறிவியல் ஒளி 
ஏட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய 
கட்டுரையைப் படிக்கலாம்.

எலான் மஸ்க் ஒரு விண்வெளி நிறுவனத்தை 
நடத்தி வருகிறார். அதன் பெயர் ஸ்பேஸ் எக்ஸ்.
அது ஒரு தனியார் நிறுவனம்.

அது போலஇந்தியாவிலும் விண்வெளித் தனியார் 
நிறுவனம் ஒன்று உள்ளது. அதன் பெயர் 
ஸ்கை ரூட் (SKYROOT). 
முழுப்பெயர் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ். 

ஸ்கைரூட்டின் உரிமையாளர் யார்?
இருவர். இவ்விருவரும் முன்னாள் இஸ்ரோ 
விஞ்ஞானிகள்.
1) பவன் குமார் சந்தனா. இவர்தான் CEO. 
2) நாக பாரத் டக்கா.

அங்கே எலான் மாஸ்க்! ஸ்பேஸ் எக்ஸ்!
இங்கே ஸ்கைரூட்! பவன் குமார் சந்தனா!

ஸ்கைரூட் நிறுவனம் அண்மையில் நவம்பர் 18ல் 
(18.11.2022) காலை 11.30 மணியளவில் விக்ரம்-எஸ் 
என்ற ராக்கெட்டை விண்வெளியில் வெற்றிகரமாகச்
செலுத்தியது.

1) இது தனியாரால் உருவாக்கப்பட்ட ராக்கெட்.
2) இதன் நிறம் வெள்ளை மற்றும் நீலம். 
3) இதன் நிறை = 546 கிலோகிராம்.
4) ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி 
மையத்தில் இருந்து ஏவப் பட்டது.

5) விண்ணில் செலுத்தப்பட்ட 20 வினாடிகளில் 
இந்த ராக்கெட் 5 மாக் வேகத்தை எட்டியது.
1 மாக் என்பது ஒலியின் வேகம் ஆகும்.
மாக் (Mach) என்பது விஞ்ஞானியின் பெயர்.
மாக் குறித்த இணைக்கப்பட்ட படத்தைப் 
பார்க்கவும்.

6) இந்த மிஷனின் பெயர் ப்ராரம்ப். ஆரம்பம் என்று 
பொருள்.

தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இன்னும் நிறைய 
உண்டு. வாசகர்கள் முயன்று அறிந்திட வேண்டும்.     
  ------------------------------------------------------
மாக் என்றால் என்ன"
ஒலியின் வேகம் என்ன?
------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
ஸ்கைரூட் அனுப்பிய ராக்கெட் 
விண்ணில் செலுத்தப்பட்ட 20ஆவது விநாடியிலேயே 
5 மாக் வேகத்தை அடைந்தது.
மாக் என்றால் என்ன?
மாக் (Mach) என்ற பெயர் எப்படி வந்தது?

ஒலியின் வேகம் என்ன?
மாணவர்களும் போட்டித் தேர்வர்களும் 
தெரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல 
மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதில் ஒரு கணக்கு கொடுக்க வேண்டும்.
அது இப்போது வேண்டாம்.
முதலில் மாக் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். 

     
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக