வெள்ளி, 4 நவம்பர், 2022

ஆங்கில இணைய இதழ் "வயர்" (The WIRE) 
மன்னிப்புக் கேட்டது ஏன்? உள்மர்மம் என்ன?
சித்தார்த் வரதராஜன் அமெரிக்காவுக்கு ஓட முடிவு!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
1) சமகால உலகில் மீடியா என்னும் பத்திரிகைகளின் 
சக்தி அபரிமிதமானது. அறிவியலின் வளர்ச்சியில் 
இணைய இதழ்களும் யூடியூப் ஊடகங்களும் 
பெருகி உள்ளன. 

2) அப்படி ஒரு இணைய இதழ்தான் "வயர்" 
(THE WIRE, a digital news portal )என்னும் ஆங்கில இதழ். 
இவ்விதழ் ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி, மராத்தி, 
உருது ஆகிய பிற மொழிகளிலும் வெளியாகிறது.

3) இதன் உரிமையாளர் யார்? இந்தியப் 
பெருமுதலாளிகளில் ஒருவரும் பத்திரிக்கைத் 
துறையின் மாபெரும் கார்ப்பொரேட் 
நிறுவனமாகிய  தி இந்து (The Hindu) வெளியிட்ட 
தி இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சித்தார்த் 
வரதராஜன்தான் வயர் ஏட்டின் உரிமையாளர்.

4) கஸ்தூரி ரங்க ஐயங்கார் குடும்பத்தோடு தொடர்புடைய 
சித்தார்த் வரதராஜன் என்னும் சவுண்டிப் 
பார்ப்பனர் நடத்தும் ஏடுதான் வயர் என்ற உண்மையை 
முதலில் தெரிந்து கொள்வோம்.

5) மெத்தப் படித்தவர்கள், கற்றறிந்த எலைட்டுகள் 
(மேட்டுக் குடியினர்), உச்சநீதிமன்ற 
வழக்கறிஞர்கள், நீதியரசர்கள், அம்பானி அதானி 
போன்ற பெரு முதலாளிகள். ப சிதம்பரம் சசி தரூர் 
கார்த்திக் சிதம்பரம் போன்ற IQ அதிகமுள்ள 
படித்த அரசியல்வாதிகள் ஆகியோரே வயர் ஏட்டின் 
வாசகர்கள். சர்வதேச அளவிலும் இந்த ஏட்டிற்கு 
வாசகர்கள் உண்டு; இணைப்புகள் (links) உண்டு.

6) ஆங்கில வயர் ஏட்டின் கட்டுரைகளைப் 
படித்துப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் அறிவுத் 
திறனும் ஆழமான ஆங்கிலப் புலமையும் தேவைப்படும். 
அதன் ஆங்கில மொழிநடை சாமானிய வாசகனுக்கு 
வசப்படாது. சும்மா பேருக்கு ஒரு டிகிரி வாங்கி 
வைத்திருக்கும் சாதாரணப் பட்டதாரிகளால் 
வயர் பத்திரிகையின் வாசகராக இருக்க இயலாது.

7) JNUவில் படித்தவர்கள், புது டில்லி ஸ்டீபன்  
கல்லூரியில் படித்தவர்கள், ஐஐடிகளில் படித்தவர்கள்,
சென்னை என்றால் விவேகானந்தா கல்லூரியில் 
படித்தவர்கள் இப்படி எலைட் கல்லூரிகளில்
படித்தவர்களால் மட்டுமே வயர் ஏட்டை வாசிக்க 
இயலும்.

8... நம்மூர் போலி நக்சல்பாரி மூதேவிகளில் சிலர் 
தாங்கள் வயர் பத்திரிக்கை படிப்பதாகக் காட்டிக் 
கொள்வர். பழைய மகஇக மருதையன் அவர்களில் 
ஒருவர். இப்படிப்பட்டவர்கள் முகநூலிலும் காணப் 
படுவர். 

9) போலி நக்சல்பாரிகள் வயர் பத்திரிக்கை பாசிசத்தை 
எதிர்க்கிறது என்று கூறி சான்றிதழ் வழங்கி விடுவார்கள்.
வயர் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையைக்கூட 
இதுவரை படித்துப் புரிந்து கொண்டிருக்க மாட்டான் 
மார்க்சியப்போலி! அதற்கான மூளை அவன் 
பரம்பரையிலேயே யாருக்கும் கிடையாது. ஆனால் 
சித்தார்த் வரதராஜனை லெனின் ரேஞ்சுக்கு உயர்த்தி 
விடுவான் போலி மாவோயிஸ்ட்டு.

10) வயர் பத்திரிக்கையிடம் பாசிச எதிர்ப்பு என்றெல்லாம் 
ஒரு ரோமமும் கிடையாது. அவனே ஒரு ஊடக பாசிஸ்டு.
வயர் என்பது கார்ப்பொரேட் ஊடகம். அதிலும் 
மற்றவர்களை அச்சுறுத்தும் ஓர் ஊடக மாபியாவே 
வயர். 100 சதம் வணிகநோக்குடன் நடத்தப்படும் 
பத்திரிக்கையே வயர். உருது மராத்தி இந்தியில் 
பத்திரிக்கை நடத்தும் வயர் குழுமம் தமிழிலோ 
தெலுங்கிலோ ஏதேனும் ஒரு தென்னிந்திய 
மொழியிலோ நடத்த மாட்டான்.கொள்ளை லாபம் 
கிடைக்காது என்பதால். இவ்வளவுக்கும் 
கஸ்தூரி ரங்க ஐயங்கார் வகையறாவும் சரி, சித்தார்த் 
வரதராஜனும் சரி, தமிழர்கள்தான்.

11) 2015ல் வயர் பத்திரிகையை ஆரம்பித்தபோது மத்தியில் 
மோடியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. எனவே 
மோடி எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்டது 
சித்தார்த் குழுமம். அப்போது மன்மோகன்சிங் ஆட்சி 
நடந்திருந்தால் காங்கிரஸ் எதிர்ப்பைக் கொள்கையாகக் 
கொண்டிருக்கும் வயர் பத்திரிக்கை.

12) இதுவரைக்கும் சொன்னதெல்லாம் பீடிகை. 
இனிமேல்தான் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு 
வர முடியும். தமிழ் வாசகச் சூழல் பெருந் 
தற்குறித்தனமான சூழல் என்பதால் பீடிகையால் 
இவ்வளவு நேர விரையம் ஏற்படுகிறது. 

13) சவுண்டிப் பாப்பான் சித்தார்த் வரதராஜனின் 
வயர் பத்திரிகையானது இணைய மீடியா உலகில் 
ஒரு  அண்டர் வேர்ல்டு டான் போன்றது. 
100 கட்டுரைகளை வயர் வெளியிடுமானால், 
அவற்றுள் 30 கட்டுரைகளை முழுமையான பொய்யும் 
புனைசுருட்டும் ஆகும். இணையக் குற்றங்களைத்
தொடர்ந்து செய்து வந்தாலும், இதுவரை மாட்டிக் 
கொள்ளாமல் தப்பித்துக் கொண்டே வந்தது வயர்.

14) அண்மையில் செப்டம்பர் 2022ல் வயர் பத்திரிக்கை 
வசமாக மாட்டிக் கொண்டது. பலநாள் திருடன் ஒருநாள் 
அகப்படுவான் என்பது உண்மையானது. எனவே 
வெளியிட்ட கட்டுரையைத்     திரும்பப் பெற்று 
மன்னிப்பும் கேட்டது வயர்.

15) இது வயர் பத்திரிகையின் வரலாற்றில் இல்லாத 
விஷயம். தவறை வேண்டுமென்றே செய்துவிட்டு 
தடித்தனத்துடனும் திமிருடனும் நடந்து கொள்வதே 
வயரின் வழக்கம். ஆனால் இந்த முறை மன்னிப்புக் 
கேட்டு அடிபணிகிறதே வயர், என்ன விஷயம்?

16) பொய்ச்செய்தி வெளியிட்ட வயர் மீது அமெரிக்க 
நீதிமன்றத்தில் 400 கோடி டாலர் கேட்டு பாதிக்கப்பட்ட 
நிறுவனம் வழக்குத் தொடர போவதாக அறிவித்து 
உள்ளது. இது காதில் விழுந்த மறு வினாடியில் 
பயத்தில் முகம் வெளிறிப்போன வயர் பத்திரிக்கை 
மண்ணைப்பும் கேட்டுக்கொண்டு கட்டுரையையும் 
அகற்றி விட்டது.

17) இருந்தாலும் இந்தியாவில் அதன் மீது கிரிமினல் 
வழக்கை பாஜகவின் இணையதள பிரிவு 
வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வழக்கில் 
வயர் தண்டிக்கப் படுவது உறுதி. குறைந்தது 
பத்தாண்டு சிறை தண்டனை சித்தார்த் வரதராஜன் 
உட்பட மூன்று பேருக்கும் கிடைக்கும் என்று 
சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

18.. சித்தார்த் வரதராஜன் அமெரிக்கக் குடிமகன் ஆவார்.
எனவே அவர் மீண்டும் அமெரிக்காவுக்கே குடியேறப் 
போகிறார் என்று அவரின் தரப்பில் சொல்லப் 
படுகிறது. பத்தாண்டு சிறை தண்டனையை அவரின் 
கார்ப்பொரேட் பெருமுதலாளித்துவ உடம்பும் மனசும் 
தாங்குமா? 
*************************************************   
பின்குறிப்பு:
சித்தார்த் வரதராஜனோ அல்லது அவரின் வயர் 
பத்திரிகையோ இடதுசாரிகள் அல்லர். அவர் 
வெறும் லிபரல் பூர்ஷ்வா. அவரை இடதுசாரி 
என்று சொல்வது அம்பானியை, கலாநிதி மாறனை 
இடதுசாரி என்று சொல்வது போல் ஆகும்.
-------------------------------------------------------------
 
   

             
 

            

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக