செவ்வாய், 29 நவம்பர், 2022

மூல ஆசான்கள் மார்க்ஸ் எங்கல்சோ அல்லது 
தோழர் ஏ எம் கே அவர்களோ எவரும் 
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.
எனவே ஏ எம் கே அவர்களை தாராளமாக 
விமர்சிக்கலாம். ஆனால் காழ்ப்புணர்ச்சி
மேலிட்டு ஏ எம் கே மீது அவதூறுகளை 
வாரிஇறைப்பது ஏற்புடையதல்ல. அது 
தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

2018ல் ஏ எம் கே அவர்கள் மறைந்தபோது,
பலரும் அஞ்சலை செலுத்தினர்; பல 
அமைப்புகளும் இரங்கல் தெரிவித்து 
அறிக்கை வெளியிட்டன. 

ஆனால் வினவு இணையதளமோ, மாநில 
அமைப்புக் கமிட்டியோ (SOC) ஏ எம் கே
மறைவுக்கு எந்த இரங்கல் குறிப்பும் 
வெளியிடவில்லை.

இப்படிப்பட்ட வினவு தரப்பினர், அதாவது 
பிளவுண்ட இவர்களின் எல்லாத் தரப்பினருமே 
ஏ எம் கே அவர்களின் தியாக வாழ்வுக்கு உறை 
போடக் காண மாட்டார்கள்.

BHEL நிறுவனத்தில் பெல் சிட்டி ஊழல் என்று 
பல கோடி ரூபாய் ரியல் எஸ்டேட் ஊழல் செய்த 
பேர்வழிகளைக் கொண்ட வினவு ஆசாமிகள், 
தியாகத்தின் சுடரொளியாய்த் திகழும் கடந்த 
அரை நூற்றாண்டு காலமாக குடும்பத்தைத் 
துறந்து, சுகங்களைத் துறந்து புரட்சிக்குத்
தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட 
ஏ எம் கே அவர்களை பற்றிப்பேச எந்த 
அருகதையும் இல்லை. இதை வினவு-மகஇக-SOC 
மற்றும் மருதையனின் வினைசெய் 
கும்பல் உணர்வது நல்லது.  
       
        
 1990களில் சோவியத் வீழ்ந்தது.கிழக்கு ஐரோப்பிய 
நாடுகளில் சோசலிசம் என்ற பெயரிலான 
கொடுங்கோல் ஆட்சியும் ஊழல் ஆடம்பரமும் 
வெளிப்பட்டன. முன்னதாக 1980ல் 
பின்நவீனத்துவம் மெதுமெதுவாக இந்திய 
அரசியலை விழுங்கி கொண்டிருந்தது.
ஏகாதிபத்திய NGOக்கள்   
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக