சனி, 28 ஜனவரி, 2023

Chat GPT என்றால் என்ன? கூகுளுக்குப் போட்டியா?
பொருளுற்பத்தி சார்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்!
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------
கூகுள் நிறுவனம் உலக அளவில் பெரும் வெற்றியை 
ஈட்டியுள்ள நிறுவனம். Google searchக்கு இன்று வரை 
ஈடு இணை இல்லை.

என்றாலும் முதலாளித்துவம் என்பது போட்டியை 
உள்ளடக்கமாகக் கொண்டது. எனவே கூகுளுக்குப் 
போட்டியாக ஒரு நல்ல போட்டியாளரை உருவாக்க 
முதலாளித்துவம் உழைத்து வருகிறது.

கூகுளுக்குப் போட்டி என்றதுமே மைக்ரோசாப்ட் 
நிறுவனம்தான் போட்டியாக வரக்கூடும் என்ற 
கணிப்பு உங்களிடம் இருக்கக் கூடும். அல்லது 
எலான் மாஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் போட்டி 
போடக் கூடும் என்று நீங்கள் கருதலாம். அப்படியானால்  
நீங்கள் ஓரளவு விஷயம் தெரிந்தவர் என்று ஆகிவிடுகிறது.

மைக்ரோசாப்ட் என்பது யாருடைய நிறுவனம்?
இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாதவர்களும் 
இருக்கிறார்கள். யார் அவர்கள்? இடதுசாரி 
முகாமில் இருந்து கொண்டு முகாமையே 
அசிங்கப் படுத்திக் கொண்டிருக்கும் போலி 
இடதுசாரிகள, போலி நக்சல்பாரிகள், போலி 
மாவோயிஸ்டுகள் மற்றும் போலி முற்போக்குகளே 
அவர்கள். 
 
இன்றைக்கு 47 ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 1975ல் 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸ்
உருவாக்கினார். கணினி மென்பொருள் (computer software)  
துறையில் இன்றளவும் உலக அளவில் முதல் இடத்தில் 
இருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனம்தான்.

பில் கேட்ஸ் தமது 13ஆம் வயதில் மென்பொருள் 
புரோகிராமை எழுதியவர். தாம் படித்த பள்ளியின் 
ஊழியர்களின் சம்பளப் பட்டியலைத் தயாரிக்க 
அவர் புரோகிராம் எழுதினார்.

நம்மில் எத்தனைபேருக்கு கம்ப்யூட்டர் புரோகிராம்
எழுதத் தெரியும்? தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 
இந்தக் கேள்வி உண்மையில் ஒரு அபத்தமான  
கேள்வி ஆகும். கணினித்துறை, academic துறைக்கு 
வெளியே, பொதுவெளியில் இங்கு ஒருவருக்கும் 
புரோகிராம் எழுதத் தெரியாது.

புரோகிராமை விடுங்கள். plain laguageல் (Englishல்)
ஒரு அல்காரிதம் கூட எழுதத் தெரியாதவன்தானே 
தமிழன். படம் வரைந்து பாகங்களைக் குறித்து 
படங்களின் வழி விளக்கும் Flow Chart என்றால் என்ன 
என்று தெரியாதவன்தானே தமிழன்!       
  
இக்கட்டுரையை எழுதுகிற நான் மிகவும் 
தாமதமாகத்தான், 20 ஆண்டுகளுக்கு முன்பு,
ஒரு programming languageஐப் படித்தேன். அதை 
முழுமையாகப் படிக்க வேண்டிய தேவை 
எனக்கு இருக்கவில்லை.

என்னுடைய academic தேவைக்கு ஏற்ற அளவு 
எவ்வளவோ அந்த அளவு வரை மட்டுமே 
படித்தேன். அது மிகப்பெரிதும் அன்றாட 
வாழ்க்கையில் உபயோகம் உடையதல்ல.
Quadratic equationsஐ சால்வ் பண்ணுவது, Matrix 
multiplication கணக்குகளுக்குத் தீர்வு காண்பது 
போன்றவற்றுக்கான programmeஐ எழுதுவது  
மட்டுமே என்னுடைய தேவை. அதற்காக 
C languageஐப் படித்தேன்.

Chat GPT என்றால் என்ன என்பதுதான் கட்டுரையின் 
தலைப்பு. ஆனாலும் அதை சமூகத்தின்
பொருளுற்பத்தியோடு இணைத்துப் புரிய வைக்க 
வேண்டி இருப்பதால் இவ்வளவு பீடிகை 
தேவைப்படுகிறது.       

சற்று முன்பு, கூகுள் தேடலில் (Google search) சர் ஐசக்
நியூட்டன் என்று அடித்தேன். உடனே, 0.63 நொடிகளில் 
ஒன்றேகால் கோடி ரிசல்ட்டுகள் வந்து கொட்டின.
நீங்களும் இதைச் செய்து பாருங்கள். நியூட்டன்,
ஐன்ஸ்டைன், மகாத்மா காந்தி, நரேந்திர மோடி 
என்று டைப் அடித்துப் பார்த்து ஒரு நொடிக்கும் 
குறைவான நேரத்தில் எவ்வளவு ரிசல்ட்டுகள் 
கிடைக்கின்றன என்று பாருங்கள்.

நரேந்திர மோடி என்று டைப் அடித்த உடனேயே,
0.48 நொடிக்குள் ஏழேகால் கோடி ரிசல்ட்டுகள் 
கிடைக்கின்றன. மைக்ரோசாப்டால் இந்த 
வேகத்தை வெல்ல முடியுமா?

வெல்ல முடியும் என்று நம்புகிறார் போலும்
பில் கேட்ஸ். எனவே அவர் செயற்கை நுண்ணறிவு 
(Artificial Intelligence) மூலம் புதிய தேடல் இயந்திரங்களை 
உருவாக்க முயன்று வருகிறார்.

அதுதான் தற்போது செய்தியில் அடிபடும் Chat GPT.
Chat GPT = Chat Generative Preemptive Transformer).
இது launch ஆகி விட்டது. சென்ற ஆண்டில் 
நவம்பர் 30ல் launch ஆனது. இரண்டு மாதங்கள் 
ஆகி விட்டன.

இந்த மென்பொருளை உருவாக்கியது Open AI
என்னும் நிறுவனம். இந்த நிறுவனத்தை 
உருவாக்கியவர்களில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் 
ஒன்று. மேலும் எலான் மஸ்க் உள்ளிட்ட சிலரும் 
இதில் முன்னரே முதலீடு செய்துள்ளனர்.

ஆக மென்பொருள் ஜாம்பவான்களான
பில் கேட்சும் எலான் மஸ்க்கும் இன்னும் சிலரும் 
ஒன்றிணைந்து முதலீடு செய்து உருவாக்கிய 
Open AI என்னும் நிறுவனத்தால் launch  செய்யப்பட்ட
தேடல் மென்பொருள் இயந்திரங்களே Chat GPT
ஆகும். இது பற்றி மேலும் அறிந்திட விரும்புவோர் 
உரிய நூல்களை, ஆவணங்களைப் படித்திடுக.

உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, இன்டெர்நேஷல் பார் கோடு 
(International Bar Code) வந்தது. அது வணிகர்களுக்கான 
ஓர் வரப்பிரசாதம்.

இன்று QR code வந்து விட்டது. QR என்றால் Quick Response
என்று பொருள். இதில் Bar codeஐ விட எளிமையும் 
கூடுதலான featuresம் உள்ளன. Bar codeஐ read செய்வதற்கு
ஒரு இயந்திரம் வேண்டும். QR codeக்கு தனித்த 
இயந்திரம் எதுவும் தேவையில்லை. SMART phone 
போதுமானது.

Launch ஆகி இரண்டு மாதம் ஆகி விட்டது. Chat GPT 
எப்படி வேலை செய்கிறது என்று உபயோகித்துப் 
பார்த்தவர்கள் கருத்துக் கூறலாம். இது விஷயத்தில் 
கணினி வல்லுநர்களின் கருத்து முக்கியத்துவம் 
உடையது.
-----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
Chat GPT குறித்தும் Open AI குறித்தும் தமிழில் எழுதப்பட்ட 
முதல் கட்டுரை இதுதான். ஆங்கிலத்தில்தான் 
ஆதிக்க கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. ஏனெனில் 
ஆங்கிலம் உற்பத்தி மொழியாக இருக்கிறது.
Launch ஆன இரண்டு மாதங்களுக்குள் தமிழில் 
இவ்வளவு உச்சமான தொழில்நுட்பம் குறித்து 
எழுதி உள்ளேன். வாசகர்களை ஆதரவு இருந்தால் 
தொடர்ந்து எழுதப்படும்; இல்லையேல் நிறுத்தப்படும்.
ஏனெனில் casting pearls before swine தவிர்க்கப்பட வேண்டும்.
*************************************************        
       
               

 

 
  

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக