ஞாயிறு, 22 ஜனவரி, 2023

 ஒரு OS உருவாக்கப் பட்டுள்ளது!

இணைய உலகில் ஒரு புதிய OSன் வருகை!

-----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------

இந்தியாவுக்கென்று பிரத்தியேகமாக ஒரு OS 

(OS = Operating System) உருவாக்கப் பட்டுள்ளது.

இதை சென்னை ஐஐடி உருவாக்கி உள்ளது.

இதில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். இதன் 

பெயர் BharOS ஆகும். Bharath OS என்பதன் 

சுருக்கமே BharOS. 


OS என்றால் என்ன? ஒரு கணினியை 

இயக்குவது அதன் OS எனப்படும் 

ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும்.


உங்களில் பலரிடம் அல்லது சிலரிடம் கணினி 

இருக்கிறது அல்லவா? மேசைக் கணினி 

அல்லது மடிக்கணினி ( Desktop or laptop) 

வைத்திருக்கிறீர்கள் அல்லவா?

அதில் உள்ள OS என்ன? தெரியுமா?

தெரியாதெனில் தெரிந்து கொள்ளுங்கள்.


யாரிடம் சென்று தெரிந்து கொள்வது?

கணினி நிபுணரையெல்லாம் இதற்காக 

நாட வேண்டியது இல்லை. உங்கள் 

தெருவில் ப்ளஸ் டூவில்  MATHS, COMPUTER

க்ரூப் படிக்கும் பையன் இருக்கிறானா?

அவனிடம் சென்று கேளுங்கள்.

OS என்றால் என்ன என்று அவன் உங்களுக்குச் 

சொல்லித் தருவான்.


மொசில்லா பயர்பாக்ஸ் என்கிறார்களே,

அது என்ன? இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 

என்கிறார்களே, அது என்ன? Web browser என்றால் 

என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.


Android OS என்கிறார்களே! அதன் LATEST VERSION

என்ன? iOS என்கிறார்களே, அது என்ன? 

தெரிந்து கொள்ளுங்கள்?


ஆகுபெயருக்கும் அன்மொழித்தொகைக்கும் உள்ள 

வேறுபாடு என்ன? இந்தக் கேள்விக்கு 99.999999 சதவீதம் 

மாணவர்களுக்குப் பதில் தெரியாது. என்றாலும் 

குடி முழுகாது.


ஆனால் BROWSERக்கும் OSக்கும் உள்ள வேறுபாடு 

என்ன என்று தெரிய வேண்டும். இதையெல்லாம் 

தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை 

உங்களைத் தூண்டும். இதுதான் இக்கட்டுரையின் 

பயன்!   

தற்போது ANDROID OSல் version 13 வரை வந்துள்ளது.

பலருடைய கணினியிலும் குறைந்தது 

Android OSன் version 10 இருக்கக் கூடும்.

இந்த Android OSஐ அகற்றி விட்டு 

அதன் இடத்தில் இந்தியத் தயாரிப்பான 

BharOSஐ நிறுவ வேண்டும். இதற்கு 

எத்தனை பேர் முன்வருவர் என்று 

எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.


கணினி நிபுணர்களின் கருத்து தேவை.

    

*************************************************


நெகட்டிவ் நம்பர்களை முதன் முதலில் 

உருவாக்கியவர் என்று அறியப்படும் 

கார்டானோ ஒரு இத்தாலியக் 

கணித மேதை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக