புதன், 7 ஜூன், 2023

கேடு கேட்ட வெளிநாட்டுக் குற்றவாளியை ஆதரித்து 
கேவலப் பட்டுப்போன சீதாராம் யெச்சூரி!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, 2023 பெப்ரவரி 14
தேதியன்று லண்டனைச் சேர்ந்த பி பி சி (BBC)
நிறுவனத்தின் இந்தியப் பதிப்பு மீது நம் நாட்டின் 
வருமானவரித்துறை ரெயிடுகளை நடத்தியது.

அவ்வளவுதான்! வெகுண்டெழுந்தார் சீதாராம் 
யெச்சூரி. பி பி சி மீது ரெயிடு நடத்தக் கூடாது 
என்றார். பி பி சி புனிதமான நிறுவனம் என்றார்.

யெச்சூரி மட்டுமல்ல; மல்லிகார்ஜுன கார்கே, 
மமதா பானர்ஜி என்று எதிர்க்கட்ஸித் தலைவர்கள் 
எல்லாம் பி பி சி மீது ரெயிடு நடத்துவது அநியாயம் 
என்று கூச்சல் இட்டார்கள்.

எவ்வளவு கூச்சல் போட்டாலும் உண்மையை மறைக்க 
முடியாது. அது வெளிவந்தே தீரும். அது போல நேற்று 
உண்மை வெளிவந்து விட்டது. பி பி சி நிறுவனம் 
தனது குற்றத்தை ஒப்புக் கொண்டது.

ரூ 40 கோடி அளவுக்கு தங்களின் நிறுவனம் வரி ஏய்ப்புச் 
செய்திருப்பதாக பி பி சி நிறுவனம் ஒப்புக் கொண்டு 
வருமானவரித் துறைக்கு எழுத்து மூலமான 
ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.

இப்போது சீதாராம் யெச்சூரியின் முகத்தில் மலம் 
வழிகிறது. போயும் போயும் ஒரு முதலாளித்துவ 
நிறுவனத்தை ஆதரிக்கலாமா? அதிலும் பி பி சி 
என்பது ஒரு ஏகாதிபத்திய நிறுவனம். மோசடி 
செய்வது முதலாளித்துவத்தின் இயல்பு.
இந்த நிலையில் மானங்கெட்டுப் போய் பி பி சி
நிறுவனத்தின் அயோக்கியத் தனத்தை ஆதரித்து விட்டு 
இன்று கேவலப் பட்டுப்போய் நிற்கிறார் சீதாராம் 
யெச்சூரி.  

இந்திய வருமானவரித் துறையிடம், நாட்டு மக்களிடம்
யெச்சூரி மன்னிப்புக் கேட்க வேண்டும். பி பி சியை 
ஆதரித்தது தவறு என்று ஒத்துக் கொண்டு அதற்கான 
தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால் யெச்சூரி செய்வாரா? செய்ய மாட்டார்.
அவரிடம் நேர்மை என்பது மருந்துக்கும் கிடையாது.
எவ்வளவு கேவலப் பட்டாலும் அதைப்  பற்றி
கவலையும் பட மாட்டார் யெச்சூரி. ஏனெனில் அவருக்கு 
மானமும் கிடையாது.
********************************************************* 
 

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக