செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

நீட் தேர்வு: ஒரு சுருக்கமான வரலாறு!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராகவும் 
குலாம் நபி ஆசாத் சுகாதாரத்துறை அமைச்சராகவும் 
இருந்தபோது, மருத்துவப் படிப்புகளுக்கு 
நாடு தழுவிய ஒரு பொதுவான நுழைவுத் தேர்வு 
நடத்தப்பட வேண்டும் என்று மன்மோகன் அரசு 
தீர்மானித்தது. இது குறித்த ஒரு அறிவிப்பாணையை 
டிசம்பர் 2010ல் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) 
வெளியிட்டது. அதன்படி 2013ல் முதன் முதலில் 
நீட் தேர்வு இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. 
முதல் நீட் தேர்வு 2013 மே மாதத்தில் நடைபெற்றது.

தனியார் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் 
இத்தேர்வை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தன.
அப்போதைய இந்தியாவின் தலைமை நீதிபதி 
அல்டாமிஷ் கபீர் தலைமையிலான அமர்வு 
நீட் தேர்வு செல்லாது என்று மூன்றுக்கு இரண்டு 
என்ற பெரும்பான்மையில் தீர்ப்பளித்தது. 
அல்டாமிஷ் கபீர் பணி ஒய்வு பெற்ற அதே நாளில்
இத்தீர்ப்பு வழங்கப் பட்டது. 

இத்தீர்ப்பை எதிர்த்து 2013 அக்டோபரில் இந்திய 
மெடிக்கல் கவுன்சில் (MCI) மேல்முறையீடு செய்தது.
டாக்டர் மன்மோகன்சிங் அரசு நீட் தேர்வு 
வேண்டும் என்று உறுதியாக இருந்தது. 

மேல்முறையீட்டில் ஏப்ரல் 2016ல் அரசமைப்புச் 
சட்ட அமர்வு (CONSTITUTIONAL BENCH) 
நீட் தேர்வு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு 
அவைகளிலும் நீட் தேர்வு குறித்த மசோதா 
2016ல் சமர்ப்பிக்கப் பட்டது. மக்களவையில் 
2016 ஜுலை 18ல் நீட் மசோதா நிறைவேறியது.
மாநிலங்களவையில் ஆகஸ்ட் 1ல் நீட் மசோதா 
நிறைவேறியது. 

இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் 
முகர்ஜி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 
இரு மசோதாக்களிலும் 2016 ஆகஸ்டு 8ல் 
கையெழுத்திட்டார். அன்று முதல் நீட் தேர்வு 
இந்தியாவில் சட்டமானது. அதாவது நீட் தேர்வுக்கு 
அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கப் பட்டது.
***********************************************************
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக