வியாழன், 21 செப்டம்பர், 2023

 அறிவை வளர்க்கும் உணவு என்னும் ராசாயனம்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------
சமையலில் உப்பு போடுகிறோம். இந்த உப்பு ஒரு ரசாயனம்.
இதன் ரசாயனப்பெயர் சோடியம் குளோரைடு (NaCl).
காப்பியில் சர்க்கரை சேர்க்கிறோம். இந்த சர்க்கரையின் 
ரசாயனப் பெயர் சுக்ரோஸ் எனப்படும் டைசாக்ரைடு.
(Sucrose = white sugar = C12H22O11)
சர்க்கரை என்பது organic substance. உப்பு என்பது inorganic.   

NaCl என்பதும் C12H22O11 என்பதும் molecular formula
ஆகும். அவை பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பண்பு உண்டு. ஒவ்வொரு 
பொருளுக்கும் ஒரு செயல்பாடு (function) உண்டு. 
உணவாகவும் மருந்தாகவும் நாம் உட்கொள்ளும் 
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு function உண்டு.

TB எனப்படும் எலும்புருக்கி நோய் முற்காலத்தில் 
உயிரைக் காவு வாங்கும் நோயாக இருந்தது. காரல் 
மார்க்சுக்கு TB இருந்தது. ஜவகர்லால் நேருவின் 
துணைவியார் கமலா நேருவுக்கு TB இருந்தது.

அப்போதெல்லாம் TBக்கு மருந்தில்லை. 1952ல்தான் 
Isonex (isoniazid) என்னும் மருந்து கண்டுபிடிக்கப் பட்டது.
அதுபோல டைபாயிடு நோய்க்கான 
சிப்ரோபிளாக்சாசின் (Cyprofloxacin) மருந்து 1980களின் 
பிற்பகுதியில்தான் அறிமுகம் ஆனது. இம்மருந்துகள் 
ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைக்
கொண்டிருப்பவை.      

உணவோ மருந்தோ நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு 
பொருளுக்கும் தனித்த ஒரு பண்பு உண்டு. பிற 
பொருட்களுடன் பொதுத்தன்மையும் உண்டு.
மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன், பருப்பு 
வகைகள், தானியங்கள் என்று நாம் உட்கொள்ளும் 
உணவுப்பொருள் ஒவ்வொன்றும் ஒரு பண்பை 
(property) உடையது; ஒரு functionஐ உடையது.

உணவு என்ன செய்கிறது? உடலை வளர்க்கிறது.
உயிரை வளர்க்கிறது. மூளையை வளர்க்கிறது.
அறிவை வளர்க்கிறது.

உணவு எவ்வாறு உடலை வளர்க்கிறது? அறிவியலில் 
கீழ்நிலை வகுப்புகளில் இதெல்லாம் சொல்லித்தரப் 
படுகிறது. படித்திருந்தால் நினைவு கூருங்கள்.

வளர் மாற்றம் (anabolism)
சிதைமாற்றம் (catabolism)
வளர்சிதை மாற்றம் (metabolism) ஆகியவை பற்றிப் 
படித்ததை நினைவு கூறுங்கள். அல்லது மீண்டும் 
படியுங்கள்.

உணவு உடலை வளர்க்கிறது. மூளையை வளர்க்கிறது.
மூளை என்பது சிந்தனையின் உறுப்பு. மூளை 
வளர்ச்சி அடையாமல் அறிவு வளர்ச்சி இல்லை.
 
உணவு உட்கொள்ளாமல் பட்டினி கிடந்தால் என்ன
ஆகும்? வளர்ச்சி நின்று விடும். உறுப்புக்கள் 
ஒவ்வொன்றாகச் செயலிழக்கும்; உறுப்புகளுக்கு 
கட்டளையிடும் மூளையும் செயலிழக்கும். இறுதியில் 
உயிர் போய்விடும். தமிழ் ஈழத்தில் உணவோ நீரோ 
அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த 
திலீபனை நினைத்துப் பாருங்கள்.

ஒவ்வொரு உணவுப்பொருளும் எப்படிச் செயல்படுகிறது, 
அதில் என்ன சத்து இருக்கிறது, மூளையின் 
வளர்ச்சிக்கும் அதற்கும் உள்ள தொடர்பு என்ன 
என்பதையெல்லாம் இன்று சத்துணவு நிபுணர்களும் 
உணவுப் பரிந்துரையாளர்களும் (nutritional experts and 
dietitians) துல்லியமாக வரையறுக்கின்றனர்.

மனித மூளையில் கணிசமான பகுதி ஒமீகா-3
கொழுப்பு அமிலத்தைக் கொண்டது (Omega fatty acid-3).
மூளை வளர்ச்சிக்கு ஒமீகா-3 அதிகமுள்ள சில வகை 
மீன்கள் பயன்படும் என்பது மருத்துவ உண்மை.

அது போலவே Antioxidant எனப்படும் ஆக்சிஜனேற்றத் 
தடுப்பான்கள் மூளை வளர்ச்சிக்கும் செல்கள் 
அழியாமல் காப்பதற்கும் உறுதுணையாக 
இருப்பவை. பச்சைக் காய்கறிகளில் இது அதிகம்.

உண்ணும் உணவுக்கும் மூளை வளர்ச்சிக்கும் 
நேரடியான தொடர்பு இருக்கிறது என்பது இன்றைய 
மருத்துவ உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.   

அறிவு என்பது மூளையின் செயல்பாட்டின் ஒரு 
பெறுபேறு .(A derivative of the brain function). அறிவு 
என்பது 100 சதமும் மூளையைச் சார்ந்தது. 
மூளைக்கு அப்பால் உள்ள அறிவு என்று எதுவும் 
கிடையாது. எனவே உணவுக்கும் அறிவுக்கும் 
தொடர்பு உண்டு என்பது உயிரியல் ரீதியாகவும் 
மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை.
----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரையைச் சிலரால் அல்லது பலரால் 
புரிந்து கொள்ள இயலாமல் போகும். அவர்கள் 
11,12 வகுப்புகளின் உயிரியல் பாடப் புத்தகங்களை 
வாங்கிப் படிக்க வேண்டும். 
***************************************************               


செவ்வாய், 19 செப்டம்பர், 2023

அத்துச் சாரியைக்குக் கொள்ளி வைத்த
அருணகிரிநாதர்! 
--------------------------------------------------------------
கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி 
கப்பிய கரிமுகன் அடிபேணி 

நியாயமாக, நேற்று நடந்து முடிந்த பிள்ளையார் 
சதுர்த்தியின்போது இந்தப்பாடல் பல 
குழந்தைகளால் பாடப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அப்படி எங்குமே நடக்கவில்லை என்று 
நான் அறிவேன்.

சைவ மடங்கள், ஆதீனங்கள், வெள்ளாளர் மடங்கள்,
பார்ப்பன மடங்கள் ஆகிய அனைத்து இந்து மத  
அமைப்புகளிலும் தற்குறிகளே தலைமையில் 
உள்ளனர். 

காஞ்சி சங்கர மடத்தின் தலைமைப் பொறுப்பில் 
உள்ள விஜயேந்திர சரஸ்வதியானவர் கைத்தல 
நிறைகனி பாட்டை அப்படியே அடி பிறழாமல் 
ஓப்பிப்பாரா? மாட்டார்! அவரால் இயலாது.

சரி, அது தமிழ்! நீச பாஷை! எனவே விஜயேந்திரருக்குத் 
தெரியாது என்று சமாதானம் சொல்லலாம்.
ஏற்றுக் கொள்வோம்!

சௌந்தர்ய  லஹரியில் உள்ள பாடல்களில் 
எத்தனை பாடல்களை மனப்பாடமாகக் கூறுவார் 
விஜயேந்திரர்? எத்தனை பாடல்களுக்குப் 
பொருள் கூறுவார் விஜயேந்திரர்?
குருத்வம் விஸ்தாரம் ச்சிதிதரபதி பார்வதி நிஜாத்.    

பார்ப்பனரல்லாத ஆதீனகர்த்தர்களில் பலரும் 
தற்குறிகள்தாம்! 

சரி, போகட்டும். 
மேலே கூறிய கைத்தல நிறைகனி 
என்ற செய்யுள் எந்த நூலில் உள்ளது? யார் 
இயற்றியது? சாமி கும்பிடுவோர்,பிள்ளையார் 
சதுர்த்தி கொண்டாடியோர் ஆகியோரெல்லாம் 
இக்கேள்விக்கு பதிலளிக்கக் கடமைப் பட்டோர்!
பதிலை எதிர்பார்ப்பதற்கு இல்லை!

அருணகிரிநாதரின் திருப்புகழில் இச்செய்யுள் 
உள்ளது. காப்புச் செய்யுள்!

அருணகிரிநாதர் பாடியதை நன்கு கவனியுங்கள்.
கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி.

கவனியுங்கள்: "அப்பமொடு" என்கிறார் 
அருணகிரிநாதர். அப்பத்தோடு என்று சொல்ல 
மறுக்கிறார் அவர். இவ்வாறு அத்துச் சாரியைக்கு 
கொள்ளி வைக்கிறார் அருணகிரிநாதர்.

தமிழுக்குப் புதிய இலக்கணம் சமைக்கப் 
போகிறேன். அதில் அத்துச் சாரியை
இருக்காது.
------------------------------------------------------------
பின்குறிப்பு;
இப்பதிவின் கருத்துக்களுக்கு எதிராகக் 
கருத்துக் கூற விரும்புவோர் மூவர் தேவாரத்தில் 
இருந்து 100 செய்யுட்களை ஒப்பிக்கத் தெரிந்திருக்க
வேண்டும்; பொருளும் கூற வேண்டும்.

அல்லது  
சௌந்தர்ய லஹரியில் 10 செய்யட்களை 
ஒப்பிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அல்லது 
பஜ கோவிந்தம் முழுமையும் ஒப்பிக்கத் 
தெரிந்திருக்க வேண்டும்.பொருளும் கூற வேண்டும். 
    ***********************************************    
        


 செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,
அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,
பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.
நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும்,
ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்
இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,
15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்
உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை
செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.
இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை
நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?
…
யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்
இந்து உப்பு என்றால் என்ன ?….
இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.
இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?
Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,
வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்
அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.
Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம
கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க
கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள்
சந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..
.மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.
2 ஆண்மையை வளர்ப்பது.
3 . மனதிற்கு நல்லது..
4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.
5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.
6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்
மகான்களிடம் ஆசி பெற்றால் நோய் குணமாகுமா? 
நாத்திகர்களை இறை நம்பிக்கை காப்பாற்றுமா?
டாக்டர் ஹெக்டேவுக்கு எதிர்வினை!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
1) டாக்டர் ஹெக்டே தமது கட்டுரையில் பல்வேறு 
விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள்  
மருத்துவ நிபுணர்களால் மட்டுமே விடையளிக்கக் 
கூடியவை சிலவும் உண்டு. அவற்றைத் தவிர்த்து 
விட்டு, ஏனைய விஷயங்களுக்கு மட்டும் 
இக்கட்டுரை எதிர்வினை ஆற்றுகிறது.

2) மருத்துவத்தில், நோயைக் குணப்படுத்துவதில் 
உளவியல் (psychology) குறிப்பிடத்தக்க பங்கு 
வகிக்கிறது. எனவே மருத்துவம் பற்றிப் பேசுவோர் 
உளவியல் பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றிருக்க 
வேண்டும் என்பது முன்நிபந்தனை ஆகிறது.

3) உலகின் இன்றைய மக்கள் தொகை 800 கோடி.
இந்த 800 கோடிப்பேருக்கும் மருத்துவம் தேவை.
இந்த 800 கோடிப்பேருக்குமான மருத்துவம் என்பது 
இடம் பொருள் ஏவல் சந்தர்ப்பம் சூழ்நிலை 
ஆகியவற்றைப் பொறுத்தும் நபர்களைப்  
பொறுத்தும் சிறிய அளவிலும் பேரளவிலும் 
வேறுபடும். நோயைக் குணப்படுத்துதல் என்பது 
எப்போதுமே ஒரு Unique Solution உடையதாக இருக்கும் 
என்று கருத இயலாது.

4) நோயைக் குணமாக்குவதில், பொதுவாக 
மருந்தும் உளவியலும் ஒன்றுசேர்ந்தே 
செயல்படுகின்றன. நோயைப் பொறுத்தும் 
நோயாளியைப் ;பொறுத்தும் மருத்துவரைப் 
பொறுத்தும் மருந்தின் பங்கும் உளவியலின் 
பங்கும் வேறுபடுவது இயல்பே. 

5) இவ்விரண்டில் நோயைக் குணப்படுத்துவதில் 
மருந்தின் பங்கு நன்கு வரையறுக்கப்பட்டது; 
மற்றும் துல்லியமானது (accurate and well defined).
ஆனால் உளவியலின் பங்கு துல்லியமாக 
வரையறுக்கப் படாத ஒன்று. அதன் வீச்சு 
(range) zero to infinity என்ற அளவில் சுருங்கியும் 
விரிந்தும் இருக்கும்.   

6) புரிந்து கொள்ள வசதியாக மேற்கூறிய 
இரண்டையும் quantify செய்வோம். மருந்து 
100 சதவீதம்; உளவியல் 0 சதவீதம்  என்று 
தொடங்கி வெவ்வேறு அளவுகளில் இவ்விரண்டும் 
அமையும். அதிகபட்சமாக உளவியலின் பங்கு  
25 சதவீதத்திற்கு உட்பட்டதாக அமையும் என்று 
வைத்துக் கொள்ளலாம். இந்த சதவீத அளவு 
நபருக்கு நபர் மாறக்கூடும்; நோயைப் பொறுத்தும்      
மாறும்.

7) மருத்துவத்தில் Placebo effect என்ற ஒன்று உண்டு.
இயற்பியல் படித்தவர்கள் Compton effect, Raman effect
பற்றிப் படித்திருக்கக் கூடும். இவ்விரண்டும் 
இயற்பியல் விளைவுகள்; எனவே அதிதுல்லியமானவை.
ஆனால் Placebo effect என்பது சமூகவியல் விளைவு.
துல்லியமாகக் கூறின் சமூக-உளவியல் விளைவு 
(Socio Psychological effect). இவ்விளைவு zero to infinity
என்ற ரேஞ்சில் இருக்கும். Placebo effectக்கு நேர் 
எதிரான Nocebo effect என்பதும் உண்டு. இவை 
பற்றித் தெரிந்தோர் மேற்கொண்டு படிக்கலாம்; 
ஏனையோர் வெளியேறலாம்.

8) டாக்டர் ஹெக்டேவின் கூற்றுகளுக்கு 
எமது point to point rebuttal! 
---------------------------------------------------------
அ) டாக்டர் ஹெக்டே கூறும் தரவுகளை, அவற்றின் 
face value அடிப்படையில் உண்மை என்று ஏற்றுக் 
கொண்டே எமது மறுமொழியை முன்வைக்கிறோம்.
நோய்வாய்ப்பட்டு, படுக்கையிலேயே முடங்கிப்போன 
ஒரு நாத்திகர் ஒரு மகானைச் சந்தித்ததுமே குணம் 
அடைந்தார் என்கிறார் ஹெக்டே. அவர் கூறியது 
போன்றே அந்த நாத்திகரின் நோய் குணமாகி 
இருக்கலாம். இப்படி நிகழ்வதற்கு ஒரு non-zero 
probability இருக்கலாம் என்று நான் ஏற்கிறேன். 
(Non-zero probability does not imply any non-zero positive integer. 
Non-zero means 0.00000000000000000000000000000000000001.)          

ஆ) எனினும் இது வெறும் placebo effect. உளவியல் 
விளைவு, அவ்வளவுதான்! This cannot be generalised.

இ) புள்ளியியலில் ஒரே ஒருவர் குணம் அடைந்தார் 
என்ற தரவு எதற்கும் பயன்படாது. ஓராயிரம் பேர் 
அல்லது ஒரு லட்சம் பேர் மகான்களைத் 
தரிசித்தமையால் குணம் அடைந்தனர் என்றால்தான் 
அதை பொதுமைப் படுத்த இயலும். புள்ளியியலில் 
ஒரு தரவின் நம்பகத்தன்மை (reliability) அதன் 
sigma levelஜப் பொறுத்தது. எனவே நாத்திகர் 
குணமடைந்தார் என்னும் தரவை வைத்துக்கொண்டு 
ஒரு முடிவை அடைய ஹெக்டே முற்படுவது 
தர்க்கப்பொருத்தம் அற்றது (illogical). எனவே அவர் 
வந்தடைந்த அல்லது கூற முற்படும் 
பொதுமைப்படுத்தல் நிராகரிக்கப் படுகிறது.

அமெரிக்கப் பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் 
திரு ராக் ஹட்ஸன் விஷயத்தில் ஹெக்டே 
கூறியதற்கு மேலே சொன்ன பதில் பொருந்தும்.

டாக்டர் ஹெக்டே கூறும் Quantum healing என்பது 
அபத்தம் மட்டுமல்ல; அடிமுட்டாள்தனமும் ஆகும்.
2019ல் சென்னை ஐஐடியில் அவர் உரை நிகழ்த்தியபோது 
ஐஐடி மாணவர்கள் அவரின் கருத்துக்களுக்கு கடும் 
எதிர்ப்பைத் தெரிவித்தனர். Quantum healing என்பது 
ஒரு போலி அறிவியல் (pseudo science) என்று 
அம்மாணவர்கள் நிரூபித்தனர்.

முடிவுரை!
---------------
முற்போக்கு-இடதுசாரி-மார்க்சிய முகாமில் இருந்து
நியூட்டன் அறிவியல் மன்றத்தைத் தவிர வேறு யாரும் 
டாக்டர் ஹெக்டே பரப்பி வரும் கருத்துமுதல்வாதப் 
பிற்போக்கு கருத்துக்களை, போலி அறிவியலை 
எதிர்க்கவில்லை.

தமிழ்நாட்டின் இடதுசாரிகள் என்போர் 
மார்க்சிஸ்டுகள் என்போர் 
நக்சல்பாரிகள் என்போர் 
இப்படி யாரும் எவரும் 
தீவிரமாகப் பரவும் டாக்டர் ஹெக்டேவின் 
போலி அறிவியலை        
எதிர்க்கவில்லை. 

டாக்டர் ஹெக்டேவை எதிர்க்கும் என்னையும் 
ஆதரிக்கவில்லை. இவர்கள் யாருக்கும் 
பயனற்றவர்கள். தமிழக இடதுசாரி முகாமில் 
இருக்கும், தங்களை மார்க்சிஸ்டுகள் என்று 
அழைத்துக்கொள்ளும் இவர்கள் தாங்களாக 
முன்வந்து போலி அறிவியலை எதிர்க்க மாட்டார்கள்.
எதிர்க்கும் என்னையும் ஆதரிக்க மாட்டார்கள்.
இவர்கள் உயிர்வாழத் தகுதியற்ற கயவர்கள் 
என்கிறார் வள்ளுவர்.

ஏவவும் செய்கிலான் தான்தேரான் அவ்வுயிர் 
போஒம் அளவுமோர் நோய்.
******************************************** 

டாக்டர் ஹெக்டே (Dr Prof B M Hegde) ஒரு மருத்துவர்;
இதய நோய் நிபுணர். மணிப்பால் பல்கலையின்
முன்னாள் துணை வேந்தர்! பத்ம விபூஷண்
விருது பெற்றவர்.
இவர் சொல்வதைக் கேளுங்கள்!
தான் அமர்ந்திருக்கும் நாற்காலியிலேயே
முடங்கிப்போன ஒரு நோயாளி, ஒரு பெரிய மகானிடம்
சென்று ஆசிர்வாதம் பெறுகிறார். உடனே வலி நீங்கி
குணம் அடைகிறார் என்று ஒரு செய்தியை ஆங்கில
இந்து ஏட்டில் ஒரு கட்டுரையில் கூறுகிறார்
ஹெக்டே. (The Hindu)
மேற்கூறிய நோயாளி ஒரு தீவிர நாத்திகர் என்றும், அவரை
வற்புறுத்தி அவரின் மனைவிதான் அந்த மகானிடம் ஆசி
பெற அழைத்துச் சென்றார் எனவும் குறிப்பிடுகிறார்
கட்டுரையின் பிறிதோர் இடத்தில், அமெரிக்கப் பகுத்தறிவாளர்
சங்கத்தின் தலைவரான திரு ராக் ஹட்சன் (Rock Hudsoan)
எய்ட்ஸ் நோயின் கொடுமையால் துன்புற்றபோது,
பிரான்சு நாட்டில் உள்ள லூர்து மாதா ஆலயத்தின் சுனைநீரை
அருந்தி உயிர் பிழைத்தார் என்றும் குறிப்பிடுகிறார்.
     
    
 
      

திங்கள், 18 செப்டம்பர், 2023

டாக்டர் ஹெக்டேயின் கேள்விக்கு பதில் எனன?
கடவுளை நம்பாதவனுக்கு வந்த நோய்!
ஒரு மகானை தரிசித்ததும் நோய் அகன்றது!
மார்க்சிஸ்டுகளின் பதில் என்ன?
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------- 
டாக்டர் ஹெக்டே (Dr Prof B M Hegde) ஒரு மருத்துவர்; 
இதய நோய் நிபுணர். மணிப்பால் பல்கலையின் 
முன்னாள் துணை வேந்தர்! பத்ம விபூஷண் 
விருது பெற்றவர்.

இவர் சொல்வதைக் கேளுங்கள்!
தான் அமர்ந்திருக்கும் நாற்காலியிலேயே
முடங்கிப்போன ஒரு நோயாளி, ஒரு பெரிய மகானிடம்
சென்று ஆசிர்வாதம் பெறுகிறார். உடனே வலி நீங்கி
குணம் அடைகிறார் என்று ஒரு செய்தியை ஆங்கில
இந்து ஏட்டில் ஒரு கட்டுரையில் கூறுகிறார்
ஹெக்டே. (The Hindu)

மேற்கூறிய நோயாளி ஒரு தீவிர நாத்திகர் என்றும், அவரை
வற்புறுத்தி அவரின் மனைவிதான் அந்த மகானிடம் ஆசி
பெற அழைத்துச் சென்றார் எனவும் குறிப்பிடுகிறார்

கட்டுரையின் பிறிதோர் இடத்தில், அமெரிக்கப் பகுத்தறிவாளர்
சங்கத்தின் தலைவரான திரு ராக் ஹட்சன் (Rock Hudsoan)
எய்ட்ஸ் நோயின் கொடுமையால் துன்புற்றபோது,
பிரான்சு நாட்டில் உள்ள லூர்து மாதா ஆலயத்தின் சுனைநீரை
அருந்தி உயிர் பிழைத்தார் என்றும் குறிப்பிடுகிறார்.

மருத்துவ அறிவியல் குணப்படுத்தத் தவறிய நாத்திகர்களை
இறையருளும், இறையருள் நிரம்பப்பெற்ற மகான்களின்
ஆசியும் குணப் படுத்தி விட்டன என்கிறார் ஹெக்டே.

ஹெக்டே நமது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில்
படித்தவர். சென்னை IITயில் உரை நிகழ்த்தியவர்.
தமிழ்நாட்டிலும் மருத்துவ வட்டாரத்தில் செல்வாக்கு
உடையவர்.

இவர் சொன்னதற்கு மார்க்சிஸ்டுகள், மாவோயிஸ்டுகள்,
நக்சல்பாரிகள் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்.
கடவுள் அருளால், அல்லது மகான்களை தரிசிப்பதால்
நோய் குணமாகி விடுமா?

இது இன்றோ நேற்றோ டாக்டர் ஹெக்டே சொன்னதல்ல.
முன்பே சொன்னதுதான். அதற்கு என்ன பதில்?

இதற்கு பதில் சொல்ல வேண்டுமெனில் அறிவியல்
கற்றிருக்க வேண்டும் அல்லவா? முகநூல்
மார்க்சிய மேதைகளே, உங்களின் பதில் என்ன?
********************************************************


ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

குட்டி முதலாளித்துவச் சொல்லாக்கம்!
--------------------------------------------------------- 
அறிஞர் திரு ராம கி ஐயா அவர்களின் 
தமிழ்ச்சொற்கள் உருவாக்கம் பற்றி
நான் முன்னரே அறிவேன். 

புதிய கலைச்சொல்லாக்கத்தில் மார்க்சியக் 
கண்ணோட்டம், மார்க்சிய வழிகாட்டல்  
ஆகியவை இன்றியமையாதவை. அறிஞர் 
இராம கி ஐயா அவர்கள் குட்டி முதலாளித்துவ 
உளப்பாங்கின் உச்சத்தில் இருந்து கொண்டு 
புதிய சொற்களைப் படைத்தவர்.

மொழியின் பண்புகளில் பிரதானமானது 
அதன் தொடர்புறுத்தும் வல்லமையே.
நாம் உருவாக்கும் சொற்கள், மொழிநடை 
ஆகிய அனைத்தும் தொடர்புறுத்த 
வல்லவையாக இருக்க வேண்டும் என்பது 
மார்க்சியம் விதிக்கும் நிபந்தனை ஆகும். 

இராம கி ஐயா அவர்களின் சொல்லாக்கம் 
மொழியின் தொடர்புறுத்தும் பண்புக்கு 
(communicable)  நேர் எதிர்த்திசையில்
இருக்கிறது.

உருவாக்கப்பட்ட சொற்கள் மக்களால் புரிந்து 
கொள்ளத் தக்கவையாக இருக்க வேண்டும் 
என்று மார்க்சியம் வலியுறுத்துகிறது.
புறவய மதிப்பீட்டில் இருந்து (objective assessment)
சொற்களை உருவாக்க வேண்டும் என்று 
மார்க்சியம் கூறுகிறது. 

ஆனால் குட்டி முதலாளித்துவம்  தனது 
அகநிலைக் கண்ணோட்டத்தில் இருந்து 
சொல்லாக்கத்தை அணுகுகிறது. இது 
முற்றிலும் மார்க்சியத்துக்கு எதிரான 
subjectivism ஆகும். இராம கி ஐயா அவர்கள்  
உருவாக்கிய சொற்கள் 100 விழுக்காடு 
subjectivism  ஆகும். எனவே அச்சொற்கள் 
ஒருபோதும் பரந்துபட்ட மக்களுக்கோ 
மொழிக்கோ பயன்படாதவை.

மில்லியன், பில்லியன், டிரில்லியன் ஆகிய 
சொற்களுக்கு இராம கி ஐயா அவர்கள் 
உருவாக்கியுள்ள தமிழ்ச் சொற்களைப் 
பாருங்கள்.

million = நுல்லியம்.
billion = இரும நுல்லியம். 
டிரில்லியன் = மும்ம நுல்லியம்.   

adjective போடாமல் ஒரு சொல்லை உருவாக்குவது 
இவரைப் போன்றவர்களால் ஒருபோதும் 
இயலாது.

Billion என்பதற்கு இரட்டம் என்பது என்னுடைய 
தமிழாக்கம்; இரும நுல்லியம் என்று நீட்டி 
முழக்குகிறார் இராம கி ஐயா. சொற்செட்டு 
யாருடைய தமிழாக்கத்தில் இருக்கிறது 
என்பதை நுண்மாண்நுழைபுலம் உடையோர்  
அறிவர். 

அது போல trillion என்பதற்கு மும்ம நுல்லியம்.   
என்று adjectiveஐப் பெய்து சொற்செட்டை 
குட்டி முதலாளித்துவ பலிபீடத்தில் காவு 
கொடுத்து விடுகிறார் இராம கி ஐயா அவர்கள்.

தற்கால மாணவர்கள், பட்டதாரிகள் என்று 
இத் தலைமுறையினரின் தமிழறிவு எந்த 
அளவில் உள்ளது என்ற objective assessment 
ஏதுமின்றி, தமது அகநிலைத் தினவுகளுக்கு 
தீனி போடுவதாக அமையும் சொல்லாக்கம் 
பரந்துபட்ட மக்களுக்கு மட்டுமல்ல மேட்டுக்குடி 
எலைட்டுகளுக்கும் கூட பயன்படாதே!      
  
    



             
ஒருவரை மதிப்பிடுவது எப்படி?
மார்க்சிய அளவுகோல் எப்படி அளக்கிறது?
------------------------------------------------------------
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம்மை அடிமைப் 
படுத்தி 200 ஆண்டுகள் ஆண்டது. இந்த 
நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துக் 
கொண்டு தன்னுடைய நாட்டில் கொண்டு சேர்த்தது.

ஏகாதிபத்தியம் நம்மை அடிமைப் படுத்தி இருந்த 
காலத்தில் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதுதான் 
ஆகச்சிறந்த, ஆக உயர்ந்த செயல்பாடு.

எனவே ஒருவரை மதிப்பிடுகையில், அவர் 
ஏகாதிபத்திய எதிர்ப்புப்  போராளியா இல்லையா 
என்று பார்க்க வேண்டும். அதுதான் தலையாயது.

அப்படிப் பார்த்தால், ஈ வெ ராமசாமி யார்?
அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா? அல்லது 
ஏகாதிபத்திய அடிவருடியா?

இதுதான் அவரைத் தீர்மானிக்கும் அம்சம்!
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை 
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக 
இருந்த ஒருவர் மார்க்சிய அளவுகோலின்படி
மக்களின் நாயகர் ஆகமாட்டார்! அவர் மக்களின் 
எதிரி! அவ்வளவுதான்!
***********************************************