திங்கள், 18 செப்டம்பர், 2023

டாக்டர் ஹெக்டேயின் கேள்விக்கு பதில் எனன?
கடவுளை நம்பாதவனுக்கு வந்த நோய்!
ஒரு மகானை தரிசித்ததும் நோய் அகன்றது!
மார்க்சிஸ்டுகளின் பதில் என்ன?
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------- 
டாக்டர் ஹெக்டே (Dr Prof B M Hegde) ஒரு மருத்துவர்; 
இதய நோய் நிபுணர். மணிப்பால் பல்கலையின் 
முன்னாள் துணை வேந்தர்! பத்ம விபூஷண் 
விருது பெற்றவர்.

இவர் சொல்வதைக் கேளுங்கள்!
தான் அமர்ந்திருக்கும் நாற்காலியிலேயே
முடங்கிப்போன ஒரு நோயாளி, ஒரு பெரிய மகானிடம்
சென்று ஆசிர்வாதம் பெறுகிறார். உடனே வலி நீங்கி
குணம் அடைகிறார் என்று ஒரு செய்தியை ஆங்கில
இந்து ஏட்டில் ஒரு கட்டுரையில் கூறுகிறார்
ஹெக்டே. (The Hindu)

மேற்கூறிய நோயாளி ஒரு தீவிர நாத்திகர் என்றும், அவரை
வற்புறுத்தி அவரின் மனைவிதான் அந்த மகானிடம் ஆசி
பெற அழைத்துச் சென்றார் எனவும் குறிப்பிடுகிறார்

கட்டுரையின் பிறிதோர் இடத்தில், அமெரிக்கப் பகுத்தறிவாளர்
சங்கத்தின் தலைவரான திரு ராக் ஹட்சன் (Rock Hudsoan)
எய்ட்ஸ் நோயின் கொடுமையால் துன்புற்றபோது,
பிரான்சு நாட்டில் உள்ள லூர்து மாதா ஆலயத்தின் சுனைநீரை
அருந்தி உயிர் பிழைத்தார் என்றும் குறிப்பிடுகிறார்.

மருத்துவ அறிவியல் குணப்படுத்தத் தவறிய நாத்திகர்களை
இறையருளும், இறையருள் நிரம்பப்பெற்ற மகான்களின்
ஆசியும் குணப் படுத்தி விட்டன என்கிறார் ஹெக்டே.

ஹெக்டே நமது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில்
படித்தவர். சென்னை IITயில் உரை நிகழ்த்தியவர்.
தமிழ்நாட்டிலும் மருத்துவ வட்டாரத்தில் செல்வாக்கு
உடையவர்.

இவர் சொன்னதற்கு மார்க்சிஸ்டுகள், மாவோயிஸ்டுகள்,
நக்சல்பாரிகள் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்.
கடவுள் அருளால், அல்லது மகான்களை தரிசிப்பதால்
நோய் குணமாகி விடுமா?

இது இன்றோ நேற்றோ டாக்டர் ஹெக்டே சொன்னதல்ல.
முன்பே சொன்னதுதான். அதற்கு என்ன பதில்?

இதற்கு பதில் சொல்ல வேண்டுமெனில் அறிவியல்
கற்றிருக்க வேண்டும் அல்லவா? முகநூல்
மார்க்சிய மேதைகளே, உங்களின் பதில் என்ன?
********************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக