புதன், 27 செப்டம்பர், 2023

 மார்க்சியத்தால் மட்டுமே ஜாதியை ஒழிக்க முடியும் என்று தூய வர்க்க மார்க்சியர்கள் கருதுகின்றனர். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் இணைந்து செயல்பட்டால் ஜாதியை ஒழிக்க முடியும் என்று பலர் கருதுகின்றனர். இம்மூன்றும் ஜாதி ஒழிப்பில் பெரிய பங்களிப்பு செய்யவில்லை என்பதை எதார்த்தத்தில் காண முடிகிறது.
வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்று காரல் மார்க்ஸ் கூறுகிறார். இதன் அடிப்படையில் காரல் மார்க்ஸ் தனது எழுத்துக்களில் நாத்திகப் பிரச்சாரம் முக்கியமானது என்று எங்கும் கூறவில்லை; கூறவும் முடியாது. இது சரியானது தான். ஆனால் சிந்தனை மாற்றத்திற்கு தீர்வாக தனிச்சொத்துடைமை ஒழிப்பை முதன்மையாக வைக்கிறார். இதுதான் தவறானது.
நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை தோன்றும் போது ஜாதி தோன்றுகிறது. அது மறையும் போது ஜாதி மறையும் என்கிறது மார்க்சியம். ஆனால் நடைமுறையில் நிலப்பிரபுத்துவம் மறைந்து முதலாளித்துவம் வளர்ந்து வருகிற அளவிற்கு ஜாதி ஒழியவில்லை. மாறாக அரசியல் தளத்தில் ஜாதி கெட்டிப்படுத்தப்பட்டு சமூகத்தில் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது.
மார்க்சியம் ஜாதி ஒழிப்பிற்கு முற்றிலும் பயன்படவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக ஜாதியை கெட்டிப்படுத்தவே பயன்படுகிறது. தனிச் சொத்துடைமை ஒழிப்பை மார்க்சியம் முதன்மையாக வைப்பதால், ஜனநாயகபூர்வமான அரசோ, அதை அடைவதற்கான கட்சியோ அதனிடத்தில் இல்லை; இருக்கவும் முடியாது. கொள்கை முடிவை தனிநபரோ, சிறு குழுவோ தீர்மானித்து விட்டால் அங்கு ஜனநாயகம் இருக்காது. அதாவது, கொள்கை முடிவெடுப்பதில் மக்களுக்கோ, அவர்களின் பிரதிநிதிகளுக்கோ உரிமை இருக்காது. மேலும் மக்களின் பிரதிநிதிகளோ, கட்சியின் பிரதிநிதிகளோ, மக்களோ கொள்கை முடிவு எடுக்கும் நிறுவன வடிவமும் உருவாகாது. இதன் மூலம் மக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு கொள்கை முடிவு எடுப்பதையோ, நேரடியாக கொள்கை முடிவு எடுப்பதையோ மார்க்சியம் தடுக்கிறது. மேலும், தனிச்சொத்துடமை ஒழிப்பை மார்க்சியம் முதன்மையாக பேசியதால் நடைமுறையில் அரசியலையே தனிச்சொத்துடைமையாக்கி விட்டது.
ஜனநாயகம் என்றாலே, அது பிரதிநிதித்துவ தேர்வாக இருந்தாலும் சரி, மக்கள் நேரடியாக கொள்கை முடிவு எடுத்தாலும் சரி முரண்பாடு தீர்த்து தான் எடுக்கப்படும். இந்த முரண்பாடு தீர்க்கும் போராட்டம் வளர்ச்சிக்குரியதாகும். (வர்க்க, ஜாதி, மத, இன முரண்பாடுகளை முதன்மையாக வைத்து தீர்க்கும் போராட்டம் எதேச்சதிகார அரசியலாகத்தான் செயல்படும் அல்லது பாசிசமாக செயல்படும்). கொள்கையின் அடிப்படையில் எதேச்சதிகாரமாக கட்டப்பட்ட கட்சிகளால் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருவது கண்கூடாகத் தெரியும் உண்மை. மேலும் தனி நபரோ, சிறு குழுவோ கொள்கை முடிவு எடுத்து மக்களை வழிநடத்தும் போது மந்தை கலாச்சாரம், கும்பல் கலாச்சாரம் செயல்பாட்டுக்கு வந்து விடுகிறது.
உழைப்பில் ஈடுபடும் மக்கள் நிறுவனமாக ஒன்று கூடி தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது கட்டாயமாகிறது. இந்த நிறுவனமாக ஒன்று கூடும் இடத்தில் தான் மார்க்சியம் உள்ளே புகுந்து, உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வு இல்லை, சமூக வளர்ச்சியின் புறநிலை விதி தெரியாது. ஆகவே அவர்களுக்கு வால் பிடிக்க முடியாது என்று கூறி, அறிவு ஜீவிகள் கொள்கை முடிவு எடுத்து மக்களை வழிநடத்த (அடிமையாக நடத்த) வேண்டும் என்கிறது. (மார்க்சியம் கூறும் அறிவு ஜீவிகள் யார் என்று பார்த்தால், வெட்டியாக, மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக, கோமாளிகளாக, திருட்டு சிந்தனை உள்ளவர்களாக இருப்பதை எதார்த்தத்தில் காண முடிகிறது).
அரசியல் கட்சிகள் அனைத்தும் மார்க்சிய அடிப்படையில் கொள்கையின் பெயரால் எதேச்சதிகாரமாக கட்டப்பட்டு செயல்படுவதால், மக்களைப் பொருத்தவரை அந்த எதேச்சதிகாரமாக செயல்படுபவர்கள் தங்களது சாதிக்காரராகவோ, மதத்துக்காரராகவோ, இனத்துக்காரராகவோ இருந்தால் தங்களுக்கு பலன் இருக்கும் என்று எண்ணுகின்றனர். இதில் மக்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என்று சொல்லிக் கொள்கின்ற கட்சிகளில் கூட ஒன்றிய, வட்ட, மாவட்ட, மாநில, தேசிய அளவில் சாதிய அடிப்படையில் தான் நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.
கட்சிப் பிரதிநிதிகளை, மக்கள் பிரதிநிதிகளை, அரசின் பிரதிநிதிகளை ஊழியர்களாக மாற்றும் போது தான் ஜாதி, மத, இன முரண்பாடுகள் வலுவிழக்கும். பிரதிநிதிகள் இந்த முரண்பாடுகளை கூர் தீட்ட மாட்டார்கள்; கூர் தீட்டவும் முடியாது.
தற்போதைய மார்க்சிய அடிப்படையிலான (கொள்கை அடிப்படையிலான) கட்சிகள் ஆண்டை - அடிமை என்ற வடிவத்தில் கட்டப்பட்டு செயல்படுகிறது. இதனால் அரசியல் தளத்தில் ஜாதி வலுப்பெற்று அது சமூக தளத்தில் எதிரொலிக்கிறது. சமூகம் முன்னேற விரும்பினாலும் அதற்கு மார்க்சிய அரசியல் தடையாக இருக்கிறது.
வாழ்நிலை தான் சிந்தனையை தீர்மானிக்கிறது என்ற மார்க்சியம் சரியாக இருந்தும், அது எதேச்சதிகாரத்தை அல்லது பாசிசத்தை அரசியலில் கடைபிடிப்பதால் சமூகத்தின் சிந்தனை முன்னோக்கி செல்ல முடியவில்லை.
முதலில் அரசியலில் சமத்துவம் வர வேண்டும், அதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, பண்பாட்டுத்தளத்தில் சமத்துவ சிந்தனை வெளிப்படும். மக்களின் ஜாதிய சிந்தனை ஒழிய வேண்டும் என்றால் அரசியலில் சமத்துவம் முதன்மையாக வந்தாக வேண்டும். மார்க்சியம் கூறுவது போல் தனிச் சொத்துடைமை ஒழிப்பு முதன்மையானது அல்ல.
தனிநபரோ, சிறு குழுவோ கொள்கையைத் தீர்மானித்து கட்சிகள் கட்டப்பட்டு இயங்கும் வரை அரசியலிலும் சமத்துவம் வராது; சமூகத்திலும் சமத்துவம் வராது; சாதியும் ஒழியாது.
அரசியலில் சமத்துவம் என்றால் கட்சி, அரசு ஆகிய இரண்டிலும் பிரதிநிதிகளை மக்கள் நேரடியாக தேர்வு செய்வது, பிரதிநிதிகளை மாற்றிக் கொள்வது, அனைவரின் கருத்துக்களையும் பொதுவெளியில் வைப்பது, தங்களின் கருத்துக்களை பெரும்பான்மைபடுத்த விரும்புகிறவர்களை பெரும்பான்மை படுத்த அனுமதி ப்பது, இறுதியில் ஜனநாயகத்திற்கு கட்டுப்படுவது என்று பொருள் கொள்ள வேண்டும்.
மனதிற்குள் ஒன்று வைத்துக் கொண்டு அறைக்குள் (கட்சிக்குள்) ஒன்று பேசிவிட்டு பொதுமக்களிடம் ஒன்று பேசுவது என்ற மார்க்சிய அரசியல் சமத்துவத்திற்கு எதிரானது. அரசுக்கு வரி செலுத்தும் மக் களிடமிருந்து, கட்சிக்கு நிதி கொடுக்கும் (நேரடியாக, மறைமுகமாக) மக்களிடமிருந்து கட்சி நடவடிக்கைகளை ரகசியமாக வைப்பது சமூகவிரோத செயலாகும். இந்த சமூக விரோத செயலையே மார்க்சியம் தனது அடிப்படையாகக் கொண்டுள்ளது.
தனிநபரோ, சிறு குழுவோ ஜாதி இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதாலோ, எழுதி வைப்பதாலோ ஜாதி நிலை பெறுவதில்லை. (மனுதர்மம் உட்பட). இன்று நாம் ஜாதி வேண்டாம் என்று சொன்னாலும், எழுதி வைத்தாலும், பிரச்சாரம் செய்தாலும் ஜாதி உடனடியாக அழிந்து விடுவதும் இல்லை.
சமூகத்தில் முதலில் ஒரு பகுதியினரிடம் அதிகாரம் குவியும் போது ஏற்றத்தாழ்வு தொடங்குகிறது. ஒரு பகுதியினரிடம் அதிகாரம் குவிகிறது என்றால் அவர்கள் வாழும் பகுதி வேளாண்மைக்கு ஏற்ற பகுதியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. மற்ற பகுதி வேளாண்மையை சரிவர செய்ய முடியாத பகுதியாக இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. வேளாண்மை சரிவர செய்ய முடியாத சூழலில் வாழ்ந்தவர்கள் வேளாண் சார்ந்த பகுதியினரின் கீழ் பணி புரியும் போது ஏற்றத்தாழ்வு உருவாகிறது. ஒரு கட்டத்தில் அசுத்தமான பகுதியை சுத்தப்படுத்துபவர்கள் இழிவாக கருதப்படுவார்கள். குறைந்த ஊதியத்தையும் பெறுவார்கள். இது படிநிலையையும், தீண்டாமையையும் ஏற்படுத்துகிறது. இது ஜாதிய படிநிலையாக வடிவம் எடுக்கிறது. இவை மட்டுமே ஜாதியத்தை முழுமை படுத்தியதாக கருத முடியாது. பெண் கொடுத்து பெண் எடுப்பதற்கு குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையும் அந்தந்த ஜாதிகளில் தேவைப்படுகிறது. இரண்டு தரப்பிலும் மக்கள் தொகை குறைவாக இருந்தால் ஜாதி கெட்டி பட முடியாது. ஐரோப்பிய நாடுகளில் ஜாதி கெட்டுப்படாமல் இருந்ததற்கு முக்கிய காரணம், அங்கு போதிய அளவு (ஜாதியை நிலை நிறுத்துவதற்கு உரிய) மக்கள் தொகை இல்லை. இந்தியாவில் ஜாதி கெட்டிபடுவதற்கு போதிய அளவு அனைத்து ஜாதியிலும் மக்கள் தொகை இருந்திருக்கிறது.
ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் இந்தியாவிலேயே பஞ்சாபில் தான் அதிக ஜாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. 100 ஆண்களுக்கு 80 பெண்கள் மட்டுமே பஞ்சாபில் இருக்கின்றனர். 100க்கு 20 பேர் வேறு சாதியில் திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. சாதி கெட்டிப்பட்டு போவதையும், தளர்வதையும் புறச் சூழலில் இருந்தே பார்க்க வேண்டும்.
அரசியலில் எதேச்சதிகாரம் இருக்கும் போது பிற்போக்கு கருத்துக்கள் வலுப்பெறுகிறது. இங்கு மனு உட்பட பலர் எழுதி வைத்துள்ள பிற்போக்கு கருத்துக்களை முதன்மை எதிரியாக பார்க்கக் கூடாது. அதை மக்களிடம் கொண்டு சென்று நிலைநிறுத்துவதற்காக கொள்கையின் பெயரால் எதேச்சதிகாரமாக கட்டப்படும் கட்சிகளைத்தான் முதன்மையான எதிரியாக பார்க்க வேண்டும். கொள்கையின் அடிப்படையில் கட்சி கட்டப்பட்டு பொதுவெளியில் ஜாதி ஒழிப்பிற்காக நாங்கள் கட்சி கட்டி இருக்கிறோம் என்று கூறுகிறவர்களும் உள்ளுக்குள் ஜாதிய அணி திரட்டலை உருவாக்கிக் கொண்டுதான் இருப்பார்கள்.
பெரியாரும், அம்பேத்கரும் பண்பாட்டுத்தளத்தில் இயங்கியவர்கள். அரசியலில் விடுதலை பெற்றாலும் சமூகம் திருந்தினால் தான் பிரச்சினைகள் தீரும் என்று நம்பியவர்கள்; அதற்காக பிரச்சாரம் செய்தவர்கள்.
பெரியாரைப் பொருத்தவரை ஜாதி, மதம், கடவுள் நம்பிக்கையை ஒழிக்க பிரச்சாரம் செய்தவர்.
அம்பேத்கரை பொருத்தவரைக்கும் தீண்டாமை ஒழிய வேண்டும், அதைப் பாதுகாக்கும் ஜாதி ஒழிய வேண்டும், அகமண திருமண முறை ஒழிய வேண்டும் என்று எண்ணியதோடு மதம் மனிதனுக்கு கட்டாயம் தேவை என்றவர்.
ஜாதி, மத, இன மறுப்பு திருமணம் சரியானதுதான். ஆனால் இதில் முக்கிய சிக்கல் இருக்கிறது. அகமண திருமண முறை என்பது கோட்பாடு ரீதியானது. இது இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதிக்கும் பொருத்தும். யார், யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்? யாரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது? என்பது பற்றி ஒவ்வொரு ஜாதியிலும் கோட்பாடு இருக்கிறது. இதில் ஒவ்வொரு ஜாதிக்கும் சிறிய வேறுபாடும் இருக்கிறது.
இஸ்லாமியர்கள் பெரியம்மா மகளை, சின்னம்மா மகளை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளவர்கள். அத்தை மகளை திருமணம் செய்ய மாட்டார்கள். இப்படி ஒவ்வொரு சாதிக்கும், மதத்துக்கும் அகமண திருமண முறையில் வேறுபாடு இருக்கிறது. இந்த திருமணங்கள் கோத்திரம், கிளை, பட்ட பெயர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தீர்மானிக்கப்படுகின்றன.
இங்கு ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை மட்டும் சமூகம் ஒதுக்குவதில்லை. சாதிக்குள் உள்ள அகமண திருமண முறை கோட்பாட்டை யார் மீறினாலும் சமூகம் அவர்களை ஒதுக்கத்தான் செய்யும்; எதிர்க்கத்தான் செய்யும்; அருவருப்பாக பார்க்கத்தான் செய்யும்.
இது இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் பொருந்தும். பிற மதத்தினருக்கும் பொருந்தும்.
அகமண திருமண முறை ஜாதியை கெட்டிப்படுத்தும் என்று சொல்கிறவர்கள் யாரும் புறமண திருமண முறைக்கான கோட்பாட்டை உருவாக்கவில்லை; உருவாக்கவும் முடியாது என்றே தெரிகிறது. (யாரும் யாரோடும் என்ற கோட்பாட்டாளர்களை தவிர்த்து) ஒருவேளை உலகம் முழுவதும் நடைபெறும் திருமண முறைகள் அனைத்தையும் அங்கீகரித்து தொகுத்து வழங்கினால் அது யாரும் யாரோடும் என்ற எல்லை நோக்கி செல்லும்.
அதே நேரத்தில் ஜாதி, மத, இன மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களிடமோ, அதை ஆதரிப்பவர்களிடமோ கோட்பாடு கேட்டு நிர்பந்திப்பதும் தவறானது.
ஏனென்றால் அகமண திருமண முறை அனைத்தும் அறிவியல் பூர்வமானது அல்ல. அறிவியலுக்கு புறம்பாகவும் இருக்கிறது. இந்து மதத்தில் அக்காள் மகளை திருமணம் செய்வது, நெருங்கிய உறவுகளுக்குள்ளேயே தொடர்ச்சியாக திருமணம் செய்வது உள்ளிட்டவற்றால் ஊனமுற்ற அல்லது குறைபாடான குழந்தைகள் பிறக்கின்றன என்று அனுபவ அறிவு காட்டுகின்றது.
அகமண திருமண கோட்பாடு யாரும் யாரோடும் என்பதாக இல்லை. இதற்குக் காரணம் குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்வதால் குழந்தைகள் குறைபாடாக அல்லது ஊனமாக பிறக்கின்றன என்ற அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த அனுபவத்தின் மூலமே அந்தந்த குழுக்களில் அவரவர்களுக்கு புரிந்த வடிவத்தில் தாய் வழியையோ, தந்தை வழியையோ அடிப்படையாக வைத்து அகமண திருமண கோட்பாட்டை உருவாக்கி இருக்கக்கூடும்.
தற்போதைய சூழ்நிலையில் மேல் தட்டு வர்க்கத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார நெருக்கடி இல்லை என்பதால் ஜாதி, மத, இன மறுப்பு திருமணம் செய்தால் அவர்கள் நெருக்கடிக்கு ஆளாவது இல்லை. அவர்களுக்கு புறமண திருமண முறைக்கான கோட்பாடும் தேவையற்றதாகி விடுகிறது.
அதே நேரத்தில் கீழ்த்தட்டு வர்க்கத்தில் இருப்பவர்கள் ஜாதி, மத, இன மறுப்பு திருமணம் செய்து விட்டால் அவர்களின் பிள்ளைகளுக்கு பெண் பார்ப்பதிலோ, மாப்பிள்ளை பார்ப்பதிலோ நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. இவர்களுக்கான வட்டம் மிகச் சிறியதாக இருப்பதும், புறமண திருமண முறைக்கான கோட்பாடு இல்லாமல் இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கிறது. பொருளாதாரத்தில் இவர்களை விட பின்தங்கியவர்களிடம் திருமணம் செய்ய இவர்களுக்கு வாய்ப்பு இருந்தும், வாழ்நிலையில் நெருக்கடி ஏற்படும் என்பதை உணர்ந்து, கணவன் சார்ந்த சாதிக்குள்ளோ, மனைவி சார்ந்த சாதிக்குள்ளோ மீண்டும் நுழையும் முயற்சியில் பெரும்பாலானோர் ஈடுபடுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், புதூர் ஊராட்சியில் கள்ளர் சாதியைச் சார்ந்த பல்லவராயர் பட்ட பெயர் கொண்டவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அதே போல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், பிலாவிடுதி ஊராட்சியில் கள்ளர் சாதியைச் சார்ந்த பல்லவராயர் பட்ட பெயர் கொண்டவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்கள் இருவரும் பங்காளி உறவு முறையாகும். அதாவது திருமணம் செய்து கொள்ளக் கூடாத ஒரே பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் நடைமுறையில் இந்த இரண்டு பல்லவராயர்களுக்கும் சில நூற்றாண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பல சாதிகளிலும் இருக்க வாய்ப்பு உண்டு.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பண்பாட்டு பிரச்சனையை முதன்மையாக வைத்து போராடக்கூடாது என்பதுதான். அதற்காக பண்பாட்டு போராட்டம் நடத்தக் கூடாது என்று பொருள் புரிந்து கொள்ளக்கூடாது. பண்பாட்டுப் போராட்டம் சமூகத்தில் தாக்கம் செலுத்த முடியும். தீர்மானகரமான பங்காற்ற முடியாது. பண்பாட்டுப் போராட்டம் நடத்துவதற்கே அரசியலில் ஜனநாயகம் தேவை. ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் பண்பாட்டுப் போராட்டம் நடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவிலும் அரசியலில் ஜனநாயகம் சுருங்கி வருவதால் பண்பாட்டுப் போராட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பண்பாட்டுப் போராட்டம் நடத்துபவர்களை கொலை செய்வதும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் இஸ்லாமிய மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சாதிக் சமத் என்பவர் முகநூலில் எழுதி வந்தார். இஸ்லாமிய அடிப்படை வாதிகள் அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் திமுக அரசால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது சட்ட நெருக்கடியின் மூலம் அவர் முடக்கி வைக்கப்பட்டுள்ளார். கோவையில் மத அடிப்படைவாதிகளால் நாத்திகம் பேசிய இஸ்லாமிய இளைஞர் பாரூக் கொல்லப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசினார். பிரதமர், பாஜகவினர், இந்துத்துவ அடிப்படை வாதிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்; தலைக்கு விலையும் வைத்தனர். மத அடிப்படைவாதிகள் போட்ட வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் உதயநிதியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் இனி பண்பாட்டு விவகாரம் குறித்து உதயநிதி அதிகம் பேச மாட்டார் என்றே தெரிகிறது.
அரசியலில் ஜனநாயகம் இல்லாத போது பண்பாட்டுப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் மூலமோ, அடிப்படைவாதிகளின் மூலமோ ஒடுக்கப்படுகின்றனர். பண்பாட்டுப் போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் ஒரு விஷயத்தை உணர வேண்டும், பண்பாடு என்பது உணர்வு ரீதியானது. பண்பாட்டை அராஜகமாக மாற்ற முயன்றால் அது கொலை வரை செல்லும். அது மதத்தின் மீதான விமர்சனமாக இருந்தாலும் சரி, ஜாதி மறுப்பு திருமணமாக இருந்தாலும் சரி.
பண்பாட்டிற்கு அடித்தளம் உண்டு. அடித்தளத்தை தகர்க்காமல் பண்பாட்டை அராஜகமாக மாற்ற முயற்சிக்கக் கூடாது. மார்க்சியம் பொருளாதாரத்தை அடித்தளமாக பார்க்கிறது. இது தவறானது. பண்பாட்டு மாற்றத்திற்கு ஜனநாயகப்பூர்வமான அரசியல் மாற்றம்தான் முதன்மையானது. இந்த ஜனநாயகப்பூர்வமான அரசு வடிவத்தில் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு முடிவுக்கு வருவதோடு, பொருளாதார உற்பத்தியிலும் தன்னிறவு ஏற்படும்.
அரசியலில் ஜனநாயகம் இல்லாத நாட்டில் அரசியல் ஜனநாயகத்திற்காகத்தான் முதலில் போராட வேண்டும். அரசியலில் ஜனநாயகம் இருக்கும்போது அந்த அரசு இயந்திரத்தின் மூலம் பண்பாட்டு போராளிகள் பாதுகாக்கப்படுவார்கள்.
தற்போது இந்தியாவில் எந்த அரசியல் கட்சியிலும் ஜனநாயகம் இல்லை. கட்சித் தலைமைக்கோ தலைவருக்கோ கட்டுப்பட்டு தான் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் அரசியல், பண்பாட்டுக் கருத்துக்களை பொதுவெளியில் பேச முடியும். இதில் ஒரு கட்சி அரசியல் அதிகாரத்திற்கு வரும்போது, மற்ற கட்சிகளிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கருத்துரிமையை பறிக்கின்றது. எதிர்க்கட்சியினர் ஜனநாயகம் குறித்து கூப்பாடு போடுவது தாங்கள் அரசு அதிகாரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்; ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக அல்ல. தற்போது அரசியல் கட்சிகளிடையே கொள்கையின் பெயரில் நடைபெறும் சண்டையை திருடர்களுக்கு இடையில் நடைபெறும் சண்டையாகவே பார்க்க வேண்டும்.
ஜனநாயக போராட்டத்தில் முதன்மையானது, எந்த மக்களுக்காக கட்சி கட்டப்படுகிறதோ, அந்த மக்கள் அனைவருக்கும் நேரடியான பிரதிநிதித்துவ தேர்வில், கொள்கை முடிவு எடுப்பதில் சம உரிமை இருக்க வேண்டும். இதை வெளிப்படையான கட்சி வடிவத்தில் மட்டும் தான் முழுமையாக சாத்தியப்படுத்த முடியும். இரண்டாவது அம்சமாகத்தான் அரசிடம், ஆளுங்கட்சியிடம் ஜனநாயக உரிமை கேட்பதற்கான போராட்டமாக இருக்க வேண்டும். தனிநபரோ, சிறு குழுவே வேட்பாளரை தீர்மானித்து தேர்தல் நடைபெறும் நாடு முழுமையான ஜனநாயக வட்டத்திற்குள் வராது.
அரசியல் ஜனநாயகத்திற்கு இன்று உலகம் முழுவதும் முதன்மை எதிரியாக இருப்பது மார்க்சியம் என்பதையும், இந்தியாவை பொருத்த வரை அனைத்து அரசியல் கட்சிகளும் மார்க்சிய அடிப்படையில் கட்டப்பட்டு இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். கட்சிகளிடையே கொள்கையில்தான் வேறுபாடு இருக்கும். மக்களை அடிமையாக நடத்துவதில் அனைத்து கட்சிகளும் ஒரே புள்ளியில் தான் செயல்படுகின்றன.
அரசியலில் முழுமையான சுதந்திரம் இருந்தால் தான் பொருளாதாரத்தில் சுதந்திரம் இருக்கும். உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படும். பொருளாதாரத்தில் சுதந்திரம் இருக்கும் போது பண்பாட்டிலும் சுதந்திரம் இருக்கும். இந்தப் பண்பாட்டு சுதந்திரத்தில் தான் சுதந்திரமான திருமண முறை இருக்க முடியும். அந்தச் சூழலில் புறமண திருமண முறைக்கு யாரும் கோட்பாடு கேட்க மாட்டார்கள்.
பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள் பண்பாட்டுப் போராட்டத்தோடு நிறுத்திக் கொண்டால் அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தப் பண்பாட்டு போராட்டத்திற்கு கூட அரசியலில் ஜனநாயகம் இருக்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும். இதைத் தாண்டி அரசியல் அதிகாரத்தின் மூலம் அராஜகமாக பண்பாட்டை மாற்ற முயற்சித்தால் மக்கள் சாதியாக, மதமாக, இனமாக அணி திரள்வார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நான் முகநூலில் எழுதிய முந்தைய பதிவுகளில் பலர் அநாகரிகமான வார்த்தைகளில் கமெண்ட் செய்துள்ளனர். இந்த நபர்களின் அநாகரிக வார்த்தைகளைப் பார்த்து, கோபப்பட்டு அவர்களிடத்தில் நான் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. இந்த அநாகரிகப் பண்பாடு மார்க்சிய அடிப்படையில் கட்சி கட்டப்பட்டதன் வெளிப்பாடாகும். தனி நபர்களின் அநாகரிகமான பண்பாட்டை மாற்றுவதற்கான போராட்டத்தை முதன்மையாக நடத்தக் கூடாது. மார்க்சிய தத்துவ அரசியலை ஒழிப்பதன் மூலம் தான் சரியான பண்பாட்டு சூழலுக்கு அனைவரும் வர முடியும், ஒழுங்கீனமற்ற முறையில் பேசும் நபர்கள் அச்சூழலில் இருக்க மாட்டார்கள் என்ற புரிதலோடு செயல்பட வேண்டும்.
மார்க்சியம், குரான், சனாதன தர்மம், பைபிள், குரு கிரந்த் சாகிப், பெரியாரியம், அம்பேத்கரியம் என எந்த தத்துவமும் மக்களை வழிநடத்தக் கூடாது. மக்கள்தான் அரசிலும், கட்சியிலும் தங்களது பிரதிநிதிகளை வழிநடத்த வேண்டும்; கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அச்சூழலில் மக்களை வழிநடத்த (அடிமையாக நடத்த) உருவாக்கப்பட்ட அனைத்து தத்துவங்களும் அருங்காட்சியகத்தில் தான் இருக்க முடியும். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற தனி நபர்களின் மீது ப Murugesa Jayaraman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக