சனி, 23 செப்டம்பர், 2023

நீட் முதுகலைத் தேர்வும் (NEET PG)
வாடிக்கையாகிப்போன Cut off மதிப்பெண் குறைப்பும்! 
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
2016 ஜூலை ஆகஸ்டில் நாடாளுமன்றத்தின் இரு 
அவைகளிலும் நீட் தேர்வைச் சட்டபூர்வமாக்கும் 
மசோதா நிறைவேறியது. அதற்கு முன்னரே 
நீட் UG, நீட் PG தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

மோடி அரசு தான் ஆட்சிக்கு வந்த 2014 மே முதல் 
இன்று வரை மருத்துவப் படிப்புக்கான இடங்களை 
வெறித்தனமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது..

மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த MBBS இடங்களும் 
முதுகலைப் படிப்பான MS, MD இடங்களும் மோடியின் 
ஆட்சியில் இரண்டு மடங்கு ஆகி விட்டன. தற்போது 
2023ல் MBBS இடங்கள் மட்டுமே 104,333 உள்ளன.
இது மன்மோகன் காலத்திய இடங்களை விட 
இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகம். அது போலவே 
PG இடங்களும் இரண்டு மடங்கு ஆகிவிட்டன.

MBBS அட்மிஷன் என்பது எப்போதும் கொதிநிலையில் 
இருந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் 
PG அட்மிஷன் அப்படியல்ல. அது மட்டுப்படுத்தப்பட்ட 
(moderate) நிகழ்வாகவே ஒவ்வோராண்டும் இருந்து 
வருகிறது.

PG அட்மிஷனில் அறிவிக்கப்பட்ட இடங்கள் 
நிரம்பாமல் இருப்பது 2017 முதலே ஒரு பிரச்சினையாக 
உள்ளது. இப்பிரச்சினை ஆண்டுதோறும் தீவிரம்
அடைந்து வருகிறது. சென்ற ஆண்டில் 4000
இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டில் 
இன்னும் அதிகம். 

குறிப்பாக  Non clinical பிரிவுகளில் உள்ள இடங்கள் 
நிரம்புவதில்லை. Anatomy, Physiology, Biochemistry 
முதலிய படிப்புகள் Non clinical ஆகும். இவற்றைப் 
படிப்பவர்கள்தான் மருத்துவக் கல்லூரிகளில் 
பேராசிரியர்களாக ஆக முடியும். ஆனால் 
இந்த இடங்கள் நிரம்பாமல் இருப்பதால் 
மருத்துவக் கல்லூரிகளில் தகுதி வாய்ந்த 
பேராசிரியர்கள் கிடைப்பது கடினமாகி விடுகிறது.

நிலவுகிற சூழலைக் கருத்தில் கொண்டு, காலியாக
உள்ள இடங்களை நிரப்ப ஏதுவாக NEET PG Cut off 
Percentileஐக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை 
மருத்துவ உலகில் இருந்து எழுந்தது. பல்வேறு 
டாக்டர்கள் சங்கங்கள் இந்தக் கோரிக்கையை 
வலுவாக எழுப்பின. மருத்துவ மாணவர்களும் 
cut off percentileஐக் குறைக்கச் சொல்லிப் போராட்டம் 
நடத்தினார்கள்.

UDFA (United Doctors Front Association) எனப்படும் டாக்டர்கள் 
சங்கம் தேசிய மருத்துவ கவுன்சிலிடம்  2023ஆம் 
ஆண்டிற்கான NEET PG Cut off Percentileஐக் 
குறைக்கச் சொல்லி முறையிட்டது.

கடந்த காலத்தில் 2017 முதல் அநேகமாக 
ஒவ்வோராண்டும் NEET PG Cut off percentile
குறைக்கப்பட்டே வந்திருக்கிறது. பொதுப் 
பிரிவினருக்கான  Cut off என்பது 50th  percentile       
என்று இருந்தது. 2017ல் இது 42nd percentile
என்று குறைக்கப் பட்டது.

2018ல் இது 35th percentile என்று குறைக்கப் பட்டது.
2019ல் 44th percentile என்றும், 2020ல் 30th percentile    
என்றும், 2021ல் 35th percentile என்றும், 2022ல் 
மீண்டும் 35th percentile  என்றும் Cut off 
percentile  குறைக்கப் பட்டது. 2017 முதல் 
ஒவ்வோராண்டும் Cut off percentile குறைக்கப் 
பட்டே வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து 
இந்த ஆண்டில், 2023ல் காலி இடங்கள் அதிகம் 
என்பதால் cut off percentile  zeroth percentile
என்பதாகக் குறைக்கப் பட்டுள்ளது.

இதன் பொருள் NEET PG தேர்வு எழுதிய அனைவரும் 
கலந்தாய்வில் பங்கு கொள்ளலாம் என்பதே. எனினும் 
Cutoff ஐ zeroth percentile என்று குறைத்திருப்பதால் 
பூஜ்யம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு PG இடம் 
கிடைக்கும் என்று யாராவது நினைத்தால் அது 
அடிமுட்டாள்தனம் ஆகும்.

Zeroth percentile என்று குறைத்திருந்தாலும், 30 சதவீத 
மதிப்பெண்ணும் அதற்கு மேலும் பெற்றவர்களே 
ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கின்றனர். எனவே 
தகுதியற்றவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று 
கருதுவது தவறு.

இந்த zeroth percentile என்று குறைத்தது இந்த அட்மிஷனுக்கு 
மட்டும்தான். அதிலும் 2023 PG அட்மிஷனில் மூன்றாம் 
கலந்தாய்வுக்கு மட்டும்தான். அடுத்த ஆண்டு 
கலந்தாய்வுக்கு இது பொருந்தாது.

திராவிடக் கசடுகள் கூச்சல் போடுவதில் துளியளவும் 
உண்மை இல்லை. அவர்கள் தற்குறிகள். மருத்துவ 
PG அட்மிஷன் பற்றி ஒரு இழவும் தெரியாமல் 
தங்களின் இழிந்த அறியாமையை வெளிப்படுத்திக் 
கொள்கிறார்கள்.

எது எப்படி இருப்பினும், அடுத்து வரும் "NEXT" தேர்வு  
மருத்துவக் கல்வியை இன்னும் தரம் உடையதாக 
ஆக்கும்.

விஷயம் தெரியாதவர்கள் கூச்சல் போடலாம்.
அது மூடத்தனமானது.
*************************************************** 
  
  
             
    
   


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக