செவ்வாய், 19 செப்டம்பர், 2023

அத்துச் சாரியைக்குக் கொள்ளி வைத்த
அருணகிரிநாதர்! 
--------------------------------------------------------------
கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி 
கப்பிய கரிமுகன் அடிபேணி 

நியாயமாக, நேற்று நடந்து முடிந்த பிள்ளையார் 
சதுர்த்தியின்போது இந்தப்பாடல் பல 
குழந்தைகளால் பாடப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அப்படி எங்குமே நடக்கவில்லை என்று 
நான் அறிவேன்.

சைவ மடங்கள், ஆதீனங்கள், வெள்ளாளர் மடங்கள்,
பார்ப்பன மடங்கள் ஆகிய அனைத்து இந்து மத  
அமைப்புகளிலும் தற்குறிகளே தலைமையில் 
உள்ளனர். 

காஞ்சி சங்கர மடத்தின் தலைமைப் பொறுப்பில் 
உள்ள விஜயேந்திர சரஸ்வதியானவர் கைத்தல 
நிறைகனி பாட்டை அப்படியே அடி பிறழாமல் 
ஓப்பிப்பாரா? மாட்டார்! அவரால் இயலாது.

சரி, அது தமிழ்! நீச பாஷை! எனவே விஜயேந்திரருக்குத் 
தெரியாது என்று சமாதானம் சொல்லலாம்.
ஏற்றுக் கொள்வோம்!

சௌந்தர்ய  லஹரியில் உள்ள பாடல்களில் 
எத்தனை பாடல்களை மனப்பாடமாகக் கூறுவார் 
விஜயேந்திரர்? எத்தனை பாடல்களுக்குப் 
பொருள் கூறுவார் விஜயேந்திரர்?
குருத்வம் விஸ்தாரம் ச்சிதிதரபதி பார்வதி நிஜாத்.    

பார்ப்பனரல்லாத ஆதீனகர்த்தர்களில் பலரும் 
தற்குறிகள்தாம்! 

சரி, போகட்டும். 
மேலே கூறிய கைத்தல நிறைகனி 
என்ற செய்யுள் எந்த நூலில் உள்ளது? யார் 
இயற்றியது? சாமி கும்பிடுவோர்,பிள்ளையார் 
சதுர்த்தி கொண்டாடியோர் ஆகியோரெல்லாம் 
இக்கேள்விக்கு பதிலளிக்கக் கடமைப் பட்டோர்!
பதிலை எதிர்பார்ப்பதற்கு இல்லை!

அருணகிரிநாதரின் திருப்புகழில் இச்செய்யுள் 
உள்ளது. காப்புச் செய்யுள்!

அருணகிரிநாதர் பாடியதை நன்கு கவனியுங்கள்.
கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி.

கவனியுங்கள்: "அப்பமொடு" என்கிறார் 
அருணகிரிநாதர். அப்பத்தோடு என்று சொல்ல 
மறுக்கிறார் அவர். இவ்வாறு அத்துச் சாரியைக்கு 
கொள்ளி வைக்கிறார் அருணகிரிநாதர்.

தமிழுக்குப் புதிய இலக்கணம் சமைக்கப் 
போகிறேன். அதில் அத்துச் சாரியை
இருக்காது.
------------------------------------------------------------
பின்குறிப்பு;
இப்பதிவின் கருத்துக்களுக்கு எதிராகக் 
கருத்துக் கூற விரும்புவோர் மூவர் தேவாரத்தில் 
இருந்து 100 செய்யுட்களை ஒப்பிக்கத் தெரிந்திருக்க
வேண்டும்; பொருளும் கூற வேண்டும்.

அல்லது  
சௌந்தர்ய லஹரியில் 10 செய்யட்களை 
ஒப்பிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அல்லது 
பஜ கோவிந்தம் முழுமையும் ஒப்பிக்கத் 
தெரிந்திருக்க வேண்டும்.பொருளும் கூற வேண்டும். 
    ***********************************************    
        


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக