வியாழன், 7 செப்டம்பர், 2023

பாஜக ஊழலா? CAG அறிக்கை சொல்வது என்ன?
நீதிமன்றத்தில் பாஜக அமைச்சர்கள் மீது 
வழக்குத் தொடுக்காமல் வெட்டிப் பேச்சு ஏன்?
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------
CAG எனப்படும் தலைமைத் தணிக்கை அதிகாரியின் 
அறிக்கை வெளிவந்துள்ளது. இதை அடுத்து பாஜக
ஊழல் புரிந்துள்ளது என்றும் அதற்கு CAG அறிக்கை 
ஆதாரமாக இருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி
கூறி வருகிறது.

குறிப்பாக நிதின் கட்கரி அமைச்சராக இருக்கும்
நெடுஞ்சாலைத் துறையில் கோடிக்கணக்கில் ஊழல் 
நடந்துள்ளதாக காங்கிரஸார் கூறி வருகின்றனர்.

மொத்தம் ஏழு ஊழல்கள் பெரிதாக நடந்திருக்கின்றன 
என்று காங்கிரஸ் கூறி வருகிறது.

நல்லது. ஊழல்கள் குறித்தும் CAG அறிக்கை குறித்தும் 
பேசி வரும் காங்கிரஸ் உடனடியாக பாஜக 
அமைச்சர்கள் மீது உரிய நீதிமன்றங்களில் ஊழல்
வழக்குகளைத் தொடுக்க வேண்டும்.

வழக்குத் தொடுக்க எங்களிடம் பணமில்லை என்று 
காங்கிரஸ் கட்சி கூற முடியாது. காங்கிரஸ் இந்தியாவின் 
பெரும் பணக்காரக் கட்சிகளில் ஒன்று. 

மேலும் இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் 
காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறார்கள். அபிஷேக் 
மனு சிங்வி, ப சிதம்பரம் என்று இந்தியாவின் 
Top Ten வழக்கறிஞர்கள் காங்கிரஸில்தான் உள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் செயலிழந்த நிலையில் இருக்கிறது.
ஏன்? உடனடியாக வழக்குத் தொடுத்து பாஜக 
அமைச்சர்களைக் கூண்டில் ஏற்ற காங்கிரஸ் ஏன் 
தயங்குகிறது?

சோனியா ராகுலுக்கு ஒரு வலியுறுத்தல்!
---------------------------------------------------------------
உங்கள் கட்சியினர் கூறுவது போல, பாஜக அமைச்சர்கள் 
ஊழல் புரிந்திருப்பது உண்மையென்றால், CAG அறிக்கை 
அதைச் சுட்டிக் காட்டுகிறது என்றால், பாஜக அமைச்சர்கள் 
மீது டெல்லி உயர்நீதி மன்றத்திலோ அல்லது உச்ச 
நீதிமன்றத்திலோ உடனடியாக வழக்குத் தொடுக்க 
உங்களுக்கு ஏன் தயக்கம்?

உங்களின் தயக்கம் நீங்கள் கூறும் ஊழல் குற்றச் 
சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கருதுவதற்குத்தான் 
இடம் அளிக்கும்.    

உங்களின் தயக்கத்திற்கான காரணம் புரிகிறது, 
சோனியா அவர்களே. சூடு கண்டா பூனை அடுப்பருகில் 
போகாது என்பதை நாடறியும்.

2015ல் மோடி அரசு பிரான்சில் இருந்து 36 ரஃபேல் போர் 
விமானங்கள் வாங்கப் போவதாக அறிவித்தது. அதில் 
ஊழல் என்று கூறி காங்கிரஸ் தீவிரப் பிரச்சாரம் 
செய்தது. காங்கிரசின் சார்பாக இந்து பத்திரிகையின் 
என் ராம் went berserk.

இறுதியில் உச்சநீதிமன்றத்தில் காங்கிரசின் முயற்சியில் 
வழக்குத் தொடரப் பட்டது. யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி,
பிரசாந்த் பூஷன் ஆகியோரை மனுதாரராகக் கொண்டு 
தொடரப் பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ரஃபேல் 
விமானங்களை வாங்கியதில் எந்த விதத்திலும் 
ஊழல் நடைபெறவில்லை என்று தீர்ப்பளித்தது.

பொய்யாக ஊழல் புகார்களைக் கூறிய காங்கிரஸ் 
மற்றும் இந்து ஏட்டின் என் ராம் ஆகியோர் மீது 
அவதூறு வழக்குத் தொடர பாஜக முனைகிறது 
என்ற செய்தி வந்தவுடன் இந்து பத்திரிகையின் 
என் ராம் அந்தர் பலடி அடித்தார். Sonia distanced herself 
from the entire episode of Rafale deal.

காங்கிரஸ், பாஜகவுக்கு மக்களின் கோரிக்கை!
------------------------------------------------------------------------
140 கோடி இந்திய மக்களின் சார்பாக பின்வரும் 
கோரிக்கைகளை காங்கிரஸ் பாஜக கடசிகளின் 
கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

1) ஊழல் நடந்திருந்தால் பாஜக அமைச்சர்கள் மீது 
உரிய நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்குத் தொடர 
வேண்டும். வழக்குத் தொடர்ந்து பாஜக அமைச்சர்களை 
கம்பி எண்ண வைக்க வேண்டும்.

2) ஊழல் குற்றச்சாட்டுகள் பொய் என்றால், 
காங்கிரசின் மீது பாஜக அவதூறு வழக்குத் தொடர 
வேண்டும். நீதிமன்றத்தில் காங்கிரஸ் கூறியது 
அனைத்தும் அவதூறு என்று நிரூபித்து 
காங்கிரஸாருக்கு சிறை தண்டனை வாங்கிக் 
கொடுக்க வேண்டும்.

காங்கிரசும் பாஜகவும் தங்களின் மீதான மக்களின் 
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும். சும்மா 
வெட்டியாக லாவணி பேசிக்கொண்டு மக்களை 
முட்டாளாக்க வேண்டாம்.
**************************************************  
   

படத்தில் இருப்பவர்: இந்தியாவின் இன்றைய CAG.
இவர் பெயர்: கிரிஷ் சந்திர முர்மு.
இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். 

 

 


   
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக