திங்கள், 11 ஆகஸ்ட், 2014

வினவு, புதிய ஜனநாயகம் ஏடுகளின் 
ஆசிரியருக்குக் கடிதம் 
----------------------------------------------------
அன்புள்ள வினவு , புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழுவினருக்கு,

(இது பிரசுரத்துக்கு அன்று; ஆசிரியர் குழுவின் பார்வைக்கு)

--------------------------------------------------------------------------------------

தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஏடான "உணர்வு" (ஆகஸ்ட் 08-14, 2014)
ஏடு காரல் மார்க்ஸ் மீதும், வினவு மற்றும் புதிய ஜனநாயகம்
ஏடுகளின் மீதும் இழிவான அவதூறுகளை எழுதி உள்ளது.
காரல் மார்க்ஸ் நடிகர்  விஜயகாந்த்தைப் போன்ற ஒரு குடிகாரர் என்றும், புதிய ஜனநாயகம் ஏடு கலைஞர் ஜெயா ஆகியோரின் அந்தரங்கங்களை எழுதி வருகிறது என்றும் "உணர்வு' ஏடு எழுதி உள்ளது.

இதை நான் சுட்டிக்காட்டி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய
அவசியம் இல்லை என்ற போதிலும், தங்களின் கவனத்துக்கு
கொண்டு வருவது எனது கடமை என்று உணர்ந்து இக்கடிதத்தை எழுதுகிறேன்.    

முன்பு, ஆனந்த விகடனில், ஸ்டாலினைப் பற்றி அவதூறாக
மதன் என்பவர் எழுதினார் என்பதற்காக, ஒரு கூட்டமாகத் திரண்டு விகடன் அலுவலகத்துக்குச் சென்று மதனைக் கண்டித்தது
எனக்கு நினைவு வருகிறது.

மிகுதியும் சிற்றிதழ்களில் மட்டுமே எழுதி வரும் ஒரு
கவிஞர், போராளிகளைக் கொச்சைப் படுத்தி எழுதினார்
என்பதற்காக (சந்தில் நிற்கிறாள் கல்யாணி என்று எழுதியதாக
நினைவு) முன்பு அவர் வீட்டுக்கே சென்று அவரை மிரட்டிவிட்டு வந்ததும் எனக்கு நினைவு வருகிறது.

இது குறித்து மகஇக மூத்த தோழர் ஒருவரிடம் ஏற்கனவே
தெரிவித்து விட்டேன். ஆயினும் "உணர்வு" ஏட்டின் அவதூறு குறித்து வினவு தளத்தில் ஒரு சிறு கண்டனம் கூட இல்லை என்பது
வருந்தத் தக்கது.

மதன் போன்ற சவுண்டிப் பாப்பான்களிடம் வீரம் காட்டுவதும்
தவ்ஹீத் ஆட்கள் என்றால் மிரள்வதும் ஆன  இந்த நடைமுறையை   என்னவென்று சொல்வது?

மண்ணடியில் இருக்கும் "உணர்வு" ஏட்டின்  அலுவலகத்துக்கு
கூட்டமாகச் சென்று (விகடன் அலுவலகத்துக்குச் சென்றது போல) தட்டிக் கேட்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, வினவு தளத்தில் ஒரு கண்டனமோ எச்சரிக்கையோ கூட எழுத இயலாது என்றால். அந்த நடைமுறையை என்ன என்பது?

பின்குறிப்பு:
----------------- 
பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் என்றும் அதை முறியடிப்பது தங்கள் கொள்கை என்றும் சுவரொட்டி ஒட்டி இருந்ததைப் படித்து விட்டு, அதனால் ஆர்வம் ஏற்பட்டு "உணர்வு" ஏட்டை வாங்கிப் படித்தேன்.மற்றப்படி, அதைச் சீந்தியது இல்லை.

தங்கள் அன்புள்ள,
பி. இளங்கோ சுப்பிரமணியன்
சென்னை -94.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக