(11) கலைஞரின் ராமானுஜ காவியம்!
-----------------------------------------------------------------
வடகலை தென்கலை என்றால் என்ன?

வீரை பி இளஞ்சேட்சென்னி
-----------------------------------------------------------------------
ராமானுஜரின் காலத்தில் வைணவத்தில் வடகலை
தென்கலை என்றெல்லாம் பாகுபாடு எதுவும் கிடையாது.
ராமானுஜரின் காலம் (கி.பி 1017-1137) பன்னிரண்டாம்
நூற்றாண்டு. இராமானுஜருக்குப் பின், பல்வேறு
ஆச்சாரியார்கள் வைணவத் தலைமையை ஏற்றனர்.
வைணவத் தலைமை ஆச்சாரியார்களை, போப்பாண்டவர்கள்
போல் கருதுதல் வேண்டும்.
**
அவர்களுள் முதன்மையானவர்கள் வேதாந்த தேசிகரும்
மணவாள மாமுனிகளும். மணவாள மாமுனிகள் மறைந்து
நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வடகலை தென்கலைப்
பிரிவுகள் அதிகாரபூர்வமாக ஸ்தாபிக்கப் பட்டன.
கிறிஸ்துவத்தில் எழுந்த கத்தோலிக்கர், பிராட்டஸ்டன்ட்
பிரிவுகள் போன்றதே வடகலை தென்கலை பிரிவுகள்.
(உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளும் பொருட்டே
இந்த வாக்கியம் எழுதப் படுகிறது.)
**
1) வடகலையின் தலைநகரம் காஞ்சி.தென்கலைக்கு
திருவரங்கம்.
2) வடகலையின் மொழி சமஸ்கிருதம். தென்கலைக்கு
தமிழ்.
3) வடகலையின் புனித நூல்கள் சம்ஸ்கிருத வேதங்கள்.
தென்கலைக்கு தமிழ் வேதமான நாலாயிரம் திவ்யப்
பிரபந்தம்.
4) தமிழ்நாட்டு வைணவர்களில் பெரும்பான்மையானோர்
(தோராயமாக 80 சதம்) தென்கலையினரே. வடகலையினர்
சிறுபான்மையினரே.
5) தத்துவம் (doctrine), அக-புறச் சின்னங்கள் ஆகியவற்றில்
வடகலையும் தென்கலையும் வேறுபட்டு நிற்பவை.
6) வடகலை நாமம் என்பது ஒரு எளிய இலகுவான வளைவு.
( a smooth parabolic curve). ஆங்கில U எழுத்தை ஒத்திருக்கும்.
புருவத்தின் நடுவில் தொடங்கி இருபுறமும் வளைந்து
செல்லும் விதத்தில் நெற்றியில் வெள்ளைத் திருமண்
இட்டுக்கொண்டு,அதன் நடுவில் மஞ்சள் நிற ஸ்ரீசூர்ணம்
இடுவது வடகலை நாமம் ஆகும்.
7) தென்கலை நாமமும் ஒரு வளைவே (a parabolic curve).
மூக்கு நுனியில் இருந்து தொடங்கி, இருபுறமும்
பத்மபீடம் போல் வளைந்து செல்லும் விதத்தில் நெற்றியில்
வெள்ளைத் திருமண் இட்டுக் கொண்டு, அதன் நடுவில்
சிவப்பு நிற ஸ்ரீசூர்ணம் இடுவது தென்கலை நாமம் ஆகும்.
இது ஆங்கில Y எழுத்தை ஒத்திருக்கும்.
8) ஒரு வைணவர் தம் மேனியில் 13 நாமங்கள் வரை
இட்டுக் கொள்ளலாம் என்கிறது வடகலை. பதின்மூன்றாவது
நாமத்தை உச்சந்தலையில் இட வேண்டும்.
9) பன்னிரண்டு நாமங்கள் மட்டுமே இட்டுக் கொள்ளலாம்
என்கிறது தென்கலை.
பின் குறிப்பு:
--------------------
நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் என்பது பன்னிரு ஆழ்வார்களும்
தமிழில் இயற்றிய நாலாயிரம் வைணவப் பாசுரங்களைக்
குறிக்கும்.பன்னிரு ஆழ்வார்கள் வருமாறு:-
1. பொய்கையாழ்வார் 2.பேயாழ்வார் 3.பூதத்தாழ்வார்
4.மதுரகவி ஆழ்வார் 5.குலசேகர ஆழ்வார் 6.பெரியாழ்வார்
7.நம்மாழ்வார் 8.ஆண்டாள் 9.திருமங்கை ஆழ்வார்
10. திருப்பாணாழ்வார் 11. திருமழிசை ஆழ்வார்
12.தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
------------------------------------------------------------------------------------------------
தொடரும்
-----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக