புதன், 1 ஏப்ரல், 2015

அவலை  நினைத்துக் கொண்டு உரலை இடிப்பது 
அறிவுடைமை ஆகாது. உலகில் தோன்றி வளர்ந்து 
நிலைபெற்ற எல்லா மொழிகளிலும் அணிகளும் 
உண்டு; அணி இலக்கணமும் உண்டு.
***
உவமை அணி, உருவக அணி, வேற்றுமை அணி, 
பிறிது மொழிதல் அணி, வேற்றுப்பொருள் வைப்பணி,
சொல்பொருள் பின்வருநிலை அணி உள்ளிட்ட 
பல்வேறு அணிகள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன.
இவை பயிலாத இலக்கியம் எதுவும் தமிழில் இல்லை.
**
"அள்ளி அணைக்கையிலே என் முன்னே 
ஆடி வரும் தேனே"      
என்றார் பாரதி. தேன் எவ்வாறு ஆடி வரும் என்று 
கேட்பது பேதைமை ஆகும்.
**
"செந்தமிழ் நாடென்னும்  போதினிலே--இன்பத் 
தேன் வந்து பாயுது காதினிலே"  என்று பாடிய பாரதி 
பகுத்தறிவு அற்றவரா? பிறழ் புரிதல் ஒரு மனப்பிறழ்வு.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக