புதன், 8 ஏப்ரல், 2015

அம்பலம் ஆகும் உண்மைகள்!
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் 
கிறித்துவ நிறுவங்களின் பங்கு!
தோழர் அ மார்க்ஸ் அவர்களின் பதிவில் இருந்து....!
--------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------------------------------
கீழ்க்காணும் பகுதி பேராசிரியர் அ மார்க்ஸ் அவர்கள் தம் 
முகநூல் பதிவில் எழுதியுள்ள நீண்ட கட்டுரையின் ஒரு பகுதியாகும்.
வாசகர்கள் முழுக் கட்டுரையையும் படிக்க வேண்டுகிறேன்.
****************************************************************************************************
"கூடங்குளம் போராட்டத்தில் கிறிஸ்தவ மத அமைப்பின் பங்கை எதிர்மறையாகப் பார்ப்பதா? Positive ஆகப் பார்ப்பதா?- இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

இரண்டு விதமான கருத்துக்களும் அனக்கு நிலவியதை எங்களால் காண முடிந்தது. “நிச்சயமாக positive ஆகத்தான் பார்க்க இயலும் என்கிறார் இடிந்தகரை பங்குத் தந்தை ஜெயகுமார்.

“இல்லை. எதிர்மறையாகத்தான் பார்க்க வேண்டும். போராட்ட ஆதரவை அவர்கள் கைவிட்டனர்..” என்கிறார் புஷ்பராயன்.

புஷ்பராயன் ஒரு இளம் பாதிரியாராக பெருமணல் தேவாலயத்தில் பணியாற்றியபோது அங்கு நடை பெற்றுக் கொண்டிருந்த மணற் கொள்ளையை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடியவர்.  எஸ்.பி ஜாங்கிட் தலைமையில் வந்த காவல் படை ஒரு போராட்டத் தருணத்தில் மக்களை அடித்துக் கலைத்தது. புஷ்பராயன் தலை மற்றும் கை உடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கியுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அன்றைய மறை மாவட்டத் தலைமை கைவிட்டது.

அதன் பின் அவர் பாதிரியார் நிலையிலிருந்து விலகினார். இப்போது அவர் பாதிரியார் இல்லை. திருமணம் ஆகிவிட்டது."
******************************************************************************
பேராசிரியர் அ மார்க்ஸ் அவர்களின் பதிவில் இருந்து 
பெறப்படும் உண்மைகள்:
1) கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் கிறிஸ்துவ 
மத நிறுவங்களின் பெரும் பங்குடன் நடத்தப் பட்டது.
2) எந்த ஒரு மதத்தையும் நம்பி, மக்களின் போராட்டத்தை 
நடத்த முடியாது.
---------------------------------------------------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக