வெள்ளி, 3 ஏப்ரல், 2015

கிறித்துவத்தின் வேதம் விவிலியம். இசுலாமின் வேதம் குரான்.
இது போல ஒற்றை வேதத்தைக் கொண்டது அல்ல வைணவம்.
ஆரிய வேதம்  (ரிக், யஜுர், சாம அதர்வணம்), திராவிட வேதம் 
(ஆழ்வார்களின் 4000 பாசுரங்கள்) என இரண்டு வேதங்களைக் 
கொண்டது தென்னிந்திய வைணவம். முன்னது சமஸ்கிருதம்,
பின்னது வேதம். தமிழக வைணவர்கள் உபய வேதாந்திகள் ஆவார்கள். அதாவது இரண்டு வேதங்களையும் ஏற்றவர்கள்.
**
வைணவத்துக்குப் போட்டியாக அன்று இருந்த அத்வைதம்,
த்வைதம் (மத்வாச்சாரியார்) ஆகியவற்றில் தமிழுக்கு இடமே 
இல்லை. எனவே, வைணவம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள 
சமஸ்கிருதம் தமிழ் இரண்டையுமே கைக்கொள்ள வேண்டி 
இருந்தது. தமிழ் சமஸ்கிருதம் இரண்டுக்குமான ஒரு சமரசமாக 
மணிப்பிரவாளம் தோன்றியது. இது வரலாற்றுக் கட்டாயம்.
**
இல்லையேல் வடகலை தென்கலை இரண்டும் உடைந்து 
சிதறி இருக்கும். ஒரு நதியின் இரு கரைகளாக வட தென் கலைகள் 
இருப்பது சாத்தியப் பட்டு இருக்காது.
**
நிற்க. இக்கட்டுரை வைணவத்தின் சில முற்போக்குக் 
கூறுகளை மட்டும் எழுத முற்படுகிறது. சைவம் வைணவம் 
என்னும் இரண்டில், வைணவமே தமிழைப் போற்றியது 
என்பதை யாப்புறுத்தும் பொருட்டே இக்கட்டுரை எழுதப் 
படுகிறது. திருவரங்கம் கோவிலில் நாலாயிரம் திவ்யப் 
பிரபந்தம் இயல்பாக ஓதப் படுகிறது. ஆனால் தில்லை 
நடராசர் கோவிலில், தேவாரம் பாட இன்றும் முடியவில்லை
என்பது இக்கட்டுரையின் கருத்துக்களுக்கு நிரூபணமாக 
அமைகிறது.
---------------------------------------------------------------------------------------------        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக