வெள்ளி, 3 ஏப்ரல், 2015

பின்நவீனத்துவம் என்பது வெறும் விமர்சனமே (It is a mere criticism)
என்று ஆணித்தரமாகச் சொல்லி இருக்கிறேன். கட்டிய வீட்டில்
பழுது சொல்வது போல, நிலவுகிற சமூக அமைப்பின் மீது
குற்றம் சொல்வது மட்டுமே பீன்நவீனத்தின் வேலை. தான்
சுட்டிக் காட்டிய குறைகளைத் திருத்த பின்நவீனத்துவம்
ஒருபோதும் முன்வராது. எந்த நோக்கமும் இலக்கும்
அற்றது பின்நவீனத்துவம். சுருங்கக் கூறின், அது வெற்றுத்
திண்ணை வேதாந்தமே! (An arm chiar criticism).
**
மனிதன் என்பவன் சமூக ரீதியாகத் தான் வாழ முடியும்.
தனியாக வாழ முடியாது. காலம் தோறும் மானுடம்
தான் வாழும் சமூகத்தைத் தொடர்ந்து பண்படுத்திக்
கொண்டே வந்துள்ளது. ஆனால், சமூகத்துக்காக ஒரு துரும்பைத்
தூக்கிப் போடக் கூடத் தயாராக இல்லாதது பின்நவீனத்துவம்.
**
அமைப்பாகாதே, போராடாதே என்று அலறும் பின்நவீனத்துவம்
சாராம்சத்தில் கோழைத்தனத்தைப் பிரச்சாரம் செய்யும்
தத்துவம். எனவே மானுடத்துக்கு இத்தத்துவம் என்ன பயனை
விளைவிக்கும்?
--------------------------------------------------------------------------------------------------     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக