(14) கோதை சூடாமணி நப்பின்னையும் காயத்ரி ரேவதியும்!
கலைஞரின் ராமானுஜர் மீதான மாபெரும் எதிர்பார்ப்புகள்!
------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------------------------------
"ஒரு தத்துவத்தின் மீது குறைந்தபட்சப் பரிவு இருந்தால்
மட்டுமே,அதன் நல்ல அம்சங்கள் நம் கண்ணில் படும்"
என்கிறார் அறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.
ஒரு நாத்திகரான உங்களால் முழு ஈடுபாட்டுடன்
ராமானுஜரைப் படைக்க முடியுமா என்று ஐயம்
எழுப்புகிறது கல்கி ஏடு (பார்க்க: கலைஞரின் நேர்காணல்,
ஏப்ரல் 5, 2015).
**
"நான் அதிலே முழு ஈடுபாடு காட்ட மாட்டேன் என்று கருத
வேண்டாம்; யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவரைப் பற்றிய
உணர்வுகளில் மூழ்காவிட்டால், முழுமையாக எழுத
முடியாது"என்று விடையிறுக்கிறார் கலைஞர்.
**
வைணவர்களுக்கு மட்டுமே உரியவர் என்று கருதப் பட்ட
ராமானுஜரை சாமானியருக்கும் உரியவராக மாற்றிக்
காட்ட இருக்கிறார் கலைஞர். கலைஞரின் மீது பெரும்
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வைணவர், ஆத்திகர், நாத்திகர்
மட்டுமின்றி அரசியல்வாதிகளும் கலைஞரின் பேனா
முனையின் அசைவையும் மைத்துளியின் சிதறலையும்
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு
இருக்கிறார்கள். கலைஞரின் magnum opus ஆக
ராமானுஜ காவியம் திகழட்டும்.
**
வட்டம் என்பது 360 பாகைகளைக் கொண்டது. ஓரிடத்தில்
தொடங்கி 360 பாகைகளையும் சுற்றி விட்டேன். எனினும்
ராமானுஜரைப் பற்றி,இன்னும் நிறையச் சொல்ல
வேண்டியது இருக்கிறது.
**
"யதி ராசர்" என்ற பட்டத்தைப் பெற்றார் ராமானுஜர் இவரது
ஆசான் திருக்கச்சி நம்பி அளித்த பட்டம் அது. யதி என்றால்
துறவி என்று பொருள். யதி ராசர் என்றால் துறவிகளின்
அரசர் என்று பொருள். இதைதான் இன்று எத்திராஜன் என்று
எழுதிக் கொண்டு இருக்கிறோம்.
வைணவர்கள் அனைவராலும் ராமானுஜர் எம்பெருமானார்
என்றே அழைக்கப் படுகிறார்; தொழப் படுகிறார்.
**
மறந்தும் புறந் தொழார் வைணவர்! திருமாலை அன்றி
வேறு எவரையும் வணங்கார் என்பது இதன் பொருள்.
நீச பாஷை என்று தூற்றப் பட்ட தமிழை அரியணையில்
வைத்தது வைணவமே. தாலாட்டுத் தொடங்கி இறுதி
வரை தமிழைப் போற்றி வருகிறது வைணவம்.
**
"மன்னு புகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே"
என்று தொடங்கும் குலசேகர ஆழ்வார் பாசுரத்தைத் தான்
வைணவர் தாய்மார்கள் தாலாட்டாகப் பாடுவார்கள்.
(எட்டாம் திருமொழி, 8.1). வைணவத்தைப் பின்பற்றும்
அய்யங்கார் குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு
கோதை, ஆண்டாள், நப்பின்னை, சூடாமணி என்று தமிழ்ப்
பெயர்களைச் சூட்டும் வழக்கம் இன்றும் உண்டு.
ஆனால் அய்யர் வீடுகளில் அன்றும் இன்றும்
காயத்ரி, ரேவதி, விஜி தான்.
**
தமிழர்களும் அனைவரும் நாலாயிரம் திவ்யப் பிரபந்தம்
படிக்க வேண்டும். இதற்கு பெரிய வாச்சான் பிள்ளை
உரை எழுதி உள்ளார். இலக்கியச் சுவை செறிந்து
விளங்குவது திவ்யப் பிரபந்தமே. ராமானுஜரையும்
கற்க வேண்டும்; வைணவத்தையும் கற்க வேண்டும்.
எதையும் கற்காமல் வாழ்வது பயனற்ற வாழ்க்கை.
இவற்றை எல்லாம் கற்பதற்கு உங்களை எல்லாம்
தூண்டவே இந்தக் கட்டுரைகள்.
**
இவற்றை எல்லாம் படித்த பின்பு தான், என்னுடைய
நாத்திகம் பண்பானதாகவும் முழுநிறைவானதாகவும்
பரிணமித்தது.
குலசேகர ஆழ்வாரின் பாசுரத்துடன் இக்கட்டுரையை
நிறைவு செய்வோம்!
**
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே.
-----------------------------------------------------------------------------------
கட்டுரைத் தொடர் முற்றியது.
*********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக